இதுக்கெல்லாமா ஒரு பொண்ண கேவலப்படுத்துவீங்க...

Posted By: Staff
Subscribe to Boldsky

கேலி, கிண்டல் தேவை தான். ஆனால், அது இருபுறம் இருக்கும் மக்களில் ஒருவரையும் புண்பட செய்ய கூடாது. ஆனால், பெரும்பாலும் நமது கேலி, கிண்டல், நகைச்சுவை எல்லாமே ஒருவரை புண்படுத்தி அதன் மூலம் மனம் மகிழ்வதாக தான் இருக்கிறது. சரி! சில சமயம் இத்தகைய கேலிகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்றாலுமே கூட, அதற்கும் ஒரு எல்லை உண்டு.

சமீபத்தில் நான்கு பிள்ளைகள் பெற்றெடுத்த பெண்ணின் ஸ்ட்ரெச் மார்க்ஸ் கண்டு அவர் அசிங்கமாக இருக்கிறார் என்று ஃபேஸ்புக்கில் கேலி கிண்டல் செய்து கமென்ட் செய்துள்ளனர் முகநூல்வாசிகள். இதை அடுத்து அந்த பெண் துவண்டு போகாமல் அதற்கான தக்க பதிலடியும் கொடுத்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மலேசிய பெண்மணி!

23 வயது மிக்க டாரன் சிங் எனும் இந்த பெண்மணி, கணவர் குழந்தைகளுடன் மலேசியாவில் வசித்து வருகிறார். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நான்கு குழந்தைகள் பெற்ற பிறகு தனது வயிற்றில் உருவாகி இருந்த ஸ்ட்ரெச் மார்க்ஸ் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

ட்ரிப்லெட்!

ட்ரிப்லெட்!

டாரன் தனது முகநூல் பதிவில், பிரசவத்திற்கு பிறகான தனது உடல் நிலை மாற்றத்தை ஏற்றுக் கொள்வதாக கூறி பகிர்ந்திருந்தார். இவர் முதலில் ட்ரிப்லெட் (ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்) மற்றும் பிறகு ஒரு மகளை பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைய பேர்...

நிறைய பேர்...

தான் முதன் முதலில் இப்படியான பதிவை சமூக தளத்தில் பதிவிட்ட பிறகு நிறைய தாய்மார்கள், இப்படியான ஸ்ட்ரெச் மார்க்ஸ் மறைய என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால், எத்தனை பணம் இருந்தால், இதிலிருந்து தீர்வு காண்பது கடினம். இது அன்றாட வாழ்வோடு ஒட்டிக் கொள்ளும் விஷயம் என்று பதில் அளித்துள்ளார்.

21 வயது!

21 வயது!

டாரன் மூன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் ஈன்றெடுத்த போது அவரது வயது வெறும் 21. முதல் முறை தனது வற்றில் இத்தகைய ஸ்ட்ரெச் மார்க்ஸ் கண்ட டாரன், கண்ணாடியில் இதை கண்டு அழுதுள்ளார்.

ஆனால், வாழ்நாள் முழுக்க இதனுடன் தான் வாழ வேண்டும் என்பது அனைத்து பெண்களுக்கும் எழுதப்பட்ட விதி என்பதை உணர்ந்தேன் என்றும். மூன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்ற காரணத்தால் சரும திசு பாதிப்பிற்குள்ளானது என்றும் டாரன் தெரிவித்திருக்கிறார்.

23 ஆயிரம் லைக்ஸ்!

23 ஆயிரம் லைக்ஸ்!

மார்ச் 15 நாள் டாரன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஸ்ட்ரெச் மார்க்ஸ் உடனான புகைப்படத்திற்கு 23 ஆயிரத்திற்கும் மேலான லைக்ஸ் மற்றும் ஏறத்தாழ 13 ஆயிரம் பகிர்வுகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் பலர் இவரை பாராட்டி, புகழ்ந்து கமென்ட் செய்திருந்தாலும், அதற்கு ஈடாக, டாரன் நிறைய குழந்தைகள் பெற்றதால் தான் இப்படி நடந்துள்ளது, இது டாரனின் தவறு என்றும் சிலர் கூறி இருக்கிறார்கள். இவர்கள் டாரனின் ஸ்ட்ரெச் மார்க்ஸ் அசிங்கமாக இருக்கிறது என்று கூறியும், கேலி செய்தும் கூட கமென்ட் செய்துள்ளனர்.

வருத்தம்!

வருத்தம்!

ஸ்ட்ரெச் மார்க்ஸ் அசிங்கம் என்று கூறிய கமெண்டுகள் கண்டு தான் வருத்தம் அடைந்ததாக கூறியிருக்கும் டாரன். அதை தொடர்ந்து தனது கணவருடன் இருக்கும் மற்றுமொரு படத்தையும் பகிர்ந்திருந்தார். அதில்,

நிறைய பேர் தன்னை அசிங்கமாக இருப்பதாக (ஸ்ட்ரெச் மார்க்ஸ் படம் கண்டு) கூறியதை கண்டு நான் மன வருத்தம் அடைந்தேன். சிலர், குழந்தை பெற்றுக் கொண்டது என்னுடைய தவறு என்றும் கூறி இருந்தார்கள். நீங்கள் எல்லாம் நிஜமாகவே இந்த உலகில் பெண்களை மதிக்கிறீர்களா? உங்கள் அம்மாவை, மனைவியை? குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களை நீங்கள் மதிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பதிலடி!

தனது ஸ்ட்ரெச் மார்க்ஸ் கண்டு கேலி செய்த ஆண்களுக்கு இந்த பதிவை ஒரு பதிலடியாக பதிவு செய்திருந்தார் டாரன். இந்த பதிவை கண்டு பலரும் டாரனுக்கு பாராட்டுக்கள் தெரிவித்திருந்தனர்.

பலரும் பெண்கள் சிறந்தவர்கள், தாய்மையை யாரும் உணர்வதில்லை, அவர்களால் தாய்மையின் புனிதத்தை, உயர்வை உணர முடியாது என்றும் கூறி கமென்ட் செய்திருந்தார்கள்.

ஏன்?

ஏன்?

நமது எண்ணம் எல்லாம் பெண்களை கேலி செய்ய வேண்டும், அவர்களை ஒரு கவர்ச்சி கருவியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தான் இருக்கிறதே தவிர, அவர்களின் நிலை, இயல்பு, இயற்கை குறித்து ஆராய்வதில்லை.

கட்டிய மனைவியாகவே இருந்தாலும், அந்த மூன்று நாளில் அரவணைக்க மறுக்கும் ஆண்கள் இந்த உலகில் நிறையவே இருக்கிறார்கள். இவர்கள் போன்ற ஆண்கள் தான் இப்படி கேலி செய்து மனம் மகிழ்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Doren Ching Body Shammed For Her Pregnant Stretch Marks in Stomach!

Doren Ching is Mother of Four Kids, Who Lives in Malasiya with his Husband. She has been Trolled and Body Shammed For Her Pregnant Stretch Marks in Stomach!