மீண்டும் ஒருமுறை இரும்பு ராடுக்கு இரையானாள் நிர்பயா, இம்முறை மேற்கு வங்காளத்தில்!

Posted By:
Subscribe to Boldsky

டெல்லியில் ஓடும் பேருந்தில் இருந்து நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக தூக்கி எறியப்பட்டாள், பீகாரில் பள்ளி சிறுமி ஓடும் ரயிலில் இருந்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி எறியப்பட்டாள்... இது மட்டுமா ஜாதியின் பேரில் காதலித்த பாவத்திற்கு தண்டனை என்ற பெயரில் பெண்ணை நிர்வாணப்படுத்தி கூட்டு பலாத்காரம் செய்து கொடுமைப் படுத்தியது மேல்ஜாதி என பெயரிட்டுக் கொண்ட ஓர் ஈனக் கூட்டம்.

தமிழகம் முழுக்க ஜல்லிக்கட்டுக்காக போராடினோம், கதிராமங்கலத்தில் மீதேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராடினோம்... ஆனால், தமிழகம் எங்கிலும், இந்தியா எங்கிலும் தினம், தினம் கற்பழிப்புக்கு ஆளாகும் பெண்களுக்கு நீதிக் கேட்டு நம் கைகளை ஒன்றிணைத்து என்று நாம் போராடினோம்?

டெல்லியில் நிர்பயா பாதிக்கப்பட்ட போது நாடெங்கிலும் போராட்டம் வெடித்தது. இதுவே, கேரளாவில் ஜிஷாவுக்கு ஏற்பட்ட போது நாடெங்கிலும் பெரிய போராட்டம் வெடிக்கவில்லையே. பெங்களூரில் ஓடும் கேபில் (Cab) இரவு முழுக்க பலமுறை பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த போதிலும், அது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கேட்டு நாம் யாரும் போராடவில்லையே?

ஒருவேளை அப்படியாக தேசம் முழுக்க நாம் அனைவரும் இந்த குற்றத்திற்கு தக்க தண்டனையாக ஒன்றை முடிவு செய்திருந்தால்... இன்னும் பல நிர்பயாக்களை நம் தேசம் பிரசவிக்க அவசியமற்று போயிருக்கும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆறாத காயம்...

ஆறாத காயம்...

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவின் மகளாக மாறினாள் நிர்பயா. ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு இரும்பு ராடினால் தாக்கப்பட்டு உடலின் உள் உறுப்புகளில் பலத்த சேதம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தாள் நம் தேசத்தின் மகள். அவளது இறப்பின் மூலமாக ஏற்பட்ட காயங்கள் ஆறும் முன்னரே, அதே போன்ற பல காயங்கள், பெண்களின் உடலில் கீறல்கள் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

மீண்டும் நிர்பயா

மீண்டும் நிர்பயா

மேற்கு வங்காளத்தின் தினஜ்பூர் என்ற மாவட்டத்தை சேர்ந்த 21 வயதுமிக்க மனநலம் குன்றிய பழங்குடி இளம்பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த பலர் சேர்ந்த கூட்டு பலாத்காரத்திற்கு ஆளாக்கியுள்ளனர். கற்பழித்தது மட்டுமின்றி, தங்கள் ஆதாரத்தை அளிக்க, அவரது பிறப்பு உறுப்பில் இரும்பு ராடு கொண்டு சொருகியும், தங்கள் கைகளை அவரது பிறப்பு உறுப்பில் நுழைத்து அழித்தும் உள்ளனர்.

மருத்துவர்கள்...

மருத்துவர்கள்...

இரும்பு ராடு சொருகப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாக, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நிரூபணம் செய்துள்ளனர். கடந்த 18ம் தேதி, குஷ்மண்டி எனும் இடத்திற்கு சென்று தனது கிராமத்திற்கு திரும்பும் வழியில், அவரை கடத்தி அவ்வழியில் இருந்த ஒரு பாலத்தின் கீழே வைத்து கும்பல் ஒன்று இந்த கொடுஞ்செயலை செய்துள்ளது.

 அழும் சப்தம்!

அழும் சப்தம்!

தொலைவில் ஏதோ பெண் கத்தி அழும் சப்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து கண்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடனடியாக மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு அவசர சிகிச்சை அளித்து, அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இன்னும் அந்த பெண் அவசர சிகிச்சையில் மோசமான நிலையில் உயிருக்கு போராடி வருகிறாள்.

விசாரணை!

விசாரணை!

பிறப்பு உறுப்பு, குடல் மண்டலம் என உடலின் பல பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. தேசிய பெண்கள் கமிஷனுக்கு இதுகுறித்த புகார் அனுப்பப்பட்டுள்ளது. போலீஸ் இந்த வழக்கின் குற்றவாளியாக ஒருவரை கைது செய்துள்ளனர். இன்னும் இந்த குற்றத்தில் எத்தனை பேர் சம்மந்தப்பட்டுள்ளனர் என்பதை விசாரணை முடிவிலேயே கூற முடியும் என கூறியுள்ளனர்.

தண்டனை என்ன?

தண்டனை என்ன?

ஹாசனி வழக்கில் சமீபத்தில் தஷ்வந்திற்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனை உடனான மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை மக்கள் ஏற்றுக் கொண்டாலுமே கூட... இது, பின்வரும் நாட்களில் இதே குற்றத்தை செய்ய நினைக்கும் ஒருவனுக்கு அச்சத்தை அளிக்குமா என்பதே கேள்வி. தஷ்வந்த், நிர்பயா வழக்கு குற்றவாளிகள், இப்போது மேற்கு வங்காளத்தில் கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் எல்லாம் மனிதத்தன்மையற்ற மிருகங்கள். இவர்களுக்கான தண்டனை அடுத்து யார் ஒருவனும் இது போன்ற குற்றங்களில் ஈடுபட அஞ்சும் வகையில் இருக்க வேண்டும்.

நாச்சியார்!

நாச்சியார்!

நாச்சியாரில், தன் வீட்டில் வேலை செய்த பெண்ணை, அவளுக்கே தெரியாமல் கற்பழித்தவனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை. 22 ஃபீமேல் கோட்டயம் படத்தில் தன்னை காதலிப்பது போல ஏமாற்றி கற்பழிப்புக்கு இரையாக்கிய கொடியவனுக்கு கதையின் நாயகி க்ளைமேக்ஸில் கொடுத்த தண்டனை தான், இது போன்ற குற்றங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான தண்டனை.

அறுத்து எறி!

அறுத்து எறி!

கொலை செய்தவனுக்கு மரண தண்டனை இணையான, சரியான தண்டனை எனில், மனதளவில், உடல் அளவில் கொடிய தாக்கம் ஏற்படுத்திய நபர்களுக்கு அவர்களின் ஆணுறுப்பை அறுத்து எடுத்து தண்டிப்பதில் என்ன தவறு? இது போன்ற தண்டனைகள் மட்டுமே அடுத்து யார் ஒருவனும், எவ்வளவு குடி போதையில் இருந்தாலும், ஒரு பெண் நள்ளிரவில் வெளியே வந்தாலும் கூட அவளை தொட அஞ்சுவான். இது போன்ற தண்டனைகள் மட்டுமே அவனது மனதில் இருந்து கற்பழிக்க முயல வேண்டும் என்ற எண்ணத்தை முற்றிலும் அழிக்கும்.

போதும்!

போதும்!

இனிமேலும், நிர்பயாக்களை பிறக்க வைக்காதீர்கள். தாய் தேசத்தின் அடிவயிற்றில் எண்ணற்ற ஆறாத வடுக்களாக கீறல் பல ஆயிரம் ஏற்கனவே உண்டாக்கி வேடிக்கை பார்த்துவிட்டோம். இனிமேலும் தேசத்தின் மகள்களாக நாம் கொண்டாட வேறொருவர் வேண்டாம்.

இந்தியாவில் பிறக்கும் போதே பெண்கள் இந்த தேசத்தின் பெண்களாக ஏற்றுகொள்ள பட்டுவிடுகிறார்கள். அவர்களை கொன்று மீண்டும் தேசத்தின் மகள் என்று பறைசாற்ற வேண்டாம்.

போதும்! இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முனைவோம். சரியான தீர்ப்பு என்பது சரியான தண்டனை வழங்குவதில் தான் இருக்கிறது என்பது நாடறிய செய்வோம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cruel Rape Cases and Women Abusing Become a Day Today Activity!

Cruel Rape Cases and Women Abusing Become a Day Today Activity!