For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்டியாக் அரஸ்ட் காரணமாக திடீரென உயிரிழந்த பிரபலங்கள்!

|

நேற்று முன் தினம் இரவு 11.30 அளவில் துபாய்க்கு தனது உறவினர் திருமண விழாவில் கலந்துக் கொள்ள குடும்பத்துடன் சென்றிருந்த இந்திய திரை உலகின் முதல் லேடி சூப்பர்ஸ்டார் ஸ்ரீதேவி அவர்கள் கார்டியாக் அரஸ்ட் காரணமாக எதிர்பாராத நேரத்தில் திடீரென மரணம் அடைந்தார்.

பலரும் ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரஸ்ட் இரண்டும் ஒன்றென தவறாக கருதி வருகிறார்கள். உண்மையில், இவை இரண்டும் வெவேறு. இவை உண்டாக கூறப்படும் காரணிகளும் வேறுபடுகின்றன. ஸ்ரீதேவி மட்டுமின்றி, இதற்கு முன் இது பல திடீர் கார்டியாக் அரஸ்ட் காரணமாக பல பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களை குறித்து சிறிய தொகுப்பு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அன்னை தெரசா!

அன்னை தெரசா!

ரோமன் கத்தோலிக்க சர்ச்சில் மதபோதகராக, சிஸ்டராக பணியாற்றி வந்த சமூக சேவகி அன்னை தெரசா. இவர் பல ஏழை எளிய மக்களுக்கும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவியுள்ளார். தனது கடைசி வாழ்நாளில் 14 ஆண்டுகள் பல்வேறு இதய கோளாறுகளால் அவதியுற்று வந்தார் அன்னை தெரசா. திடீரென செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி 1997ம் ஆண்டு அன்னை தெரசா கார்டியாக் அரஸ்ட் காரணமாக உயிரிழந்தார்.

மைக்கல் ஜாக்சன்!

மைக்கல் ஜாக்சன்!

தி கிங் ஆப் பாப் என்று பரவலாக புகழப்படும் பாடலாசிரியர், நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் டான்சர், இசை அமைப்பாளர் தயாளு குணம் கொண்டவர் மைக்கல் ஜாக்சன். இவர் கடந்த ஜூன் 25ம் நாள் 2009ல் லாஸ் ஏஞ்சலஸில் தனது நிகழ்ச்சி ஒன்றுக்காக பயிற்சி மேற்கொண்டு வந்த சமயத்தில் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இவரது மரணத்திற்கு காரணம் இவர் உட்கொண்டு வந்த வலிநிவாரண மருந்துகள் என்றும் கூறப்பட்டது.

ஓம் புரி!

ஓம் புரி!

அனுபவம் மிகுந்த நடிகர் ஓம் புரி 'அர்த் சத்யா',' பார்', மற்றும் 'ஜானே பி தோ யாரோ' போன்ற தனது கதாப்பாத்திரங்கள் படங்களில் மூலம் பெரும் பெயர் பெற்றவர். இவர் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 6ம் நாள் கார்டியாக் பிரச்சனை காரணமாக திடீரென மரணம் அடைந்தார். பின்னர் மருத்துவ பரிசோதனையின் போது இவருக்கு பெரியளவில் மாரடைப்பு ஏற்பட்டது அறிய வந்தது. இறந்த போது இவரது வயது 66.

ரீமா!

ரீமா!

ரீமா லகோ, பல்வேறு இந்தி, மாரத்தித் திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஆவார். இவர் தனது 59வது வயதில் திடீரென ஏற்பட்ட கார்டியாக் அரஸ்ட் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் தனது திரை பயணத்தை மராத்தி தியேட்டர் ஸ்டேஜ் ஆர்டிஸ்டாக ஆரம்பித்தவர் ஆவார். இவர் பல இந்தி படங்களில் துணை நடிகையாக நடித்தவர். 2017ல் மே மாதம் 17ம் நாம் நாம்கரன் எனும் டிவி சீரியலில் நடித்து முடித்த போது இரவு ஏழு மணியளவில் திடீரென நெஞ்சு வலிக்கிறது என்று கீழே விழுந்தார். அருகே இருந்த மருத்துவமனையில் இவரை சிகிச்சைக்க சேர்ந்தனர். அதிகாலை மூன்று மணியளவில் திடீரென ஏற்பட்ட கார்டியாக் அரஸ்ட் காரணமாக ரீமா இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.

ரசாக் கான்!

ரசாக் கான்!

காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரசாக் கான். இவர் 2016 ஜூன் 1ம் தேதி அதிகாலை திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.

ஐதராபாத்தில் பிறந்த ரசாக் 1986-87ல் வெளியான டிவி நிகழ்ச்சியில் சிறிய தோற்றத்தில் தோன்றி அறிமுகமானார். பிறகு இவர் 1993ல் இந்தி சினிமாவில் அறிமுகமானார். தனது 23ஆண்டுகால திரை பயணத்தில் இவர் 93 படங்களில் நடித்துள்ளார்.

இந்திர குமார்!

இந்திர குமார்!

பாலிவுட் நடிகர் இந்திர குமார். வான்டட், தும்கோ நா போல் பாயங்கே, கஹின் பார் நா ஹோ ஜாயே போன்ற படங்களின் மூலம் பிரபலமான நடிகர். எதிர்பாராத விதமாக கடந்த வருடம் ஜூலை மாதம் 28ம் தேதி தனது 44வது வயதில் மரணம் அடைந்தார் இந்திர குமார்.

ஜியார்ஜ் பர்ன்ஸ்!

ஜியார்ஜ் பர்ன்ஸ்!

பல திறமைகள் கொண்ட நடிகர் ஜியார்ஜ். இவர் சிறந்த காமெடியன் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. தனது புருவங்களை உயர்த்தும் பாவனை மற்றும் புகைக்கும் ஸ்டைல் மூலமாக தனி டிரெட் மார்க் பதித்தவர் ஜியார்ஜ் பர்ன்ஸ்.

ஆனால், எதிர்பாராத விதமாக 1996 மார்ச் 9ம் நாள் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் ஜியார்ஜ்.

ஜேம்ஸ் ஸ்டீவார்ட்!

ஜேம்ஸ் ஸ்டீவார்ட்!

அகாடமி விருது வென்ற சிறந்த நடிகர் ஜேம்ஸ் ஸ்டீவார்ட். இவர் தனது எளிமையான மற்றும் மதிப்பிற்குரிய பண்புகளால் பெரிதும் ரசிகர்களாலும், உடன் நடிக்கும் நடிகர், நடிகையராலும் ஈர்க்கப்பட்டவர். ஸ்டீவார்ட் ஏற்கனவே பேஸ்மேக்கர் வைத்திருந்தார்.

ஒரு நாள் 1996 டிசம்பர் மாதம் தனது பேஸ் மேக்கர் பேட்டரி மாற்றாத காரனத்தால் கார்டியாக் அரஸ்ட் ஆகி மரணம் அடைந்தார் ஸ்டீவார்ட். 45 வயதில் இவர் மரணம் அடைந்த போது, இவரை சுற்றியும் இவரது உறவினர்கள் சூழ்ந்திருந்தனர்.

காதல் தண்டபாணி!

காதல் தண்டபாணி!

காதல், இங்கிலீஷ் காரன், வருத்தபடாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்தவர் 'காதல்' தண்டபாணி. இவர் சரத் குமாருடன் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது மரணம் அடைந்தார். 2014 ஜூலை 19ம் தேதி இரவு, தண்டபாணிக்கு திடீர் கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டது. இதன் காரணமாகவே இவர் மரணம் அடைந்தார்.

ஸ்ரீதேவி!

ஸ்ரீதேவி!

70கள் முதல் தனது நடிப்பின் ஆதிக்கத்தை செலுத்தி வந்த நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக துபாயில் நடந்த தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்தார்.

கடைசி வரை ஒரு ராணி போல உடை, அலங்காரம் செய்து மரணித்துள்ளார் இந்திய சினிமாவின் குயின் மயிலு. தனது கடைசி தருணங்களை கணவருடன் ஆடி மகிழ்ந்து கழித்தார் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Celebrities Who Died Because of Sudden Cardiac Arrest!

Celebrities Who Died Because of Sudden Cardiac Arrest!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more