For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

15 வயதில் அமில வீச்சு தாக்குதல். இன்று! உலக மேடையில் வெற்றிநடை... - # Her Story

|

பிற பதின் வயது பெண்களை போலவே படித்துக் கொண்டும், தன்னுள் இருந்த கனவுகளை எப்படியாவது எட்டிப்பிடித்து விட வேண்டும் என்றும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த பெண் தான் அவள். அப்பா, அம்மா, தோழிகள், குடும்பம் என்று சிறிய வட்டமாக இருந்த தன் வாழ்க்கை உலக மேடைகளை காணும், தான் விருதுகளை வெல்வேன் என்று ஒரு போதும் அவள் நினைத்திருக்க வில்லை.

தன் முகம் மற்றவர் பார்த்து முகம் சுளிக்கும் படி அகோரமாக மாறும் என்றும் கூட அவள் நினைத்திருக்கவில்லை. ஆனால், தான் கடந்து வந்த ஒரு கடினமான சூழலுக்கு பிறகு, அழகு முகத்தில் இல்லை அகத்திலும், பெண்களின் வீரத்திலும், தைரியத்திலும் தான் இருக்கிறது என்று இந்த உலகிற்கு பறைசாற்ற அவள் மறக்கவில்லை.

அந்த பெண்மணி தான் லட்சுமி அகர்வால்... அமில வீச்சுக்கு தன் முகத்தை பறிக்கொடுத்து... அதற்கு எதிராக போராடி இன்று உலக மேடையில் ஒரு பெருமைக்குரிய இந்தியப் பெண்ணாக வலம்வருகிறார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
15 வயதில்...

15 வயதில்...

அது 2005ம் ஆண்டு. லட்சுமியும் பிற பெண்களை போல ஒரு சாதரணமான வாழ்க்கையை வாழ்ந்த கடைசி வருடம் என்றும் குறிப்பிடலாம். லட்சுமியின் அழகால் ஈர்க்கப்பட்ட குட்டா என்கிற நயீம் கான் (32) தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

குட்டாவின் காதலை நிராகரித்ததற்கு லட்சுமி பெற்ற பரிசு, அமில வீச்சு. சற்றும் எதிர்பாராத ஒரு நாளில் குட்டா லட்சுமியின் மீது அமிலத்தை வீசி தாக்குதல் நடத்தினான்.

முடங்கிவிடவில்லை!

முடங்கிவிடவில்லை!

அமில வீச்சு தாக்குதலுக்கு ஆளான எத்தனயோ பெண்கள் இந்தியாவில் வெளியே முகம் காட்ட முடியாமல் முடங்கி, ஒதுங்கி இருக்கின்றனர். ஆனால், லட்சுமி அப்படி ஒதுங்கிவிடவில்லை. மாறாக வெகுண்டு எழுந்தார் லட்சுமி, தனக்காக என்று மட்டுமின்றி, தன்னை போல அமில வீச்சுக்கு ஆளான பல பெண்களுக்காக போராட துவங்கினார்.

விழிப்புணர்வு!

விழிப்புணர்வு!

அமில வீச்சு தாக்குதலுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்கள் எல்லாம் நடத்தினார் லட்சுமி. இந்துஸ்தான் நாளிதழில் லட்சுமியின் பயணம் பிரசுரம் ஆனது. பல அமில வீச்சு தாக்குதலுக்கு ஆளான பெண்களுக்கு எதிராக வாதாடினார். 27,000 பேரிடம் இருந்து அமிலத்தை விற்பனை செய்வதில் கட்டுப்பாடு வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இதை சுப்ரீம் கோர்ட் வரையிலும் எடுத்து சென்றார் லட்சுமி.

மனு!

மனு!

சுப்ரீம் கோர்ட்டில் அமிலத்தை சர்வசாதாரணமாக விற்பதை குறித்தும் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும். அதனால் பாதிப்பிற்குள்ளாகும் அப்பாவி பெண்களின் நிலை குறித்தும் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதன் காரணமாக சூப்ரீம் கோர்ட் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அமிலத்தை விற்பனை செய்வதில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், நாடாளுமன்றத்தில் இதுக்குறித்த முடிவுகள் எடுக்கவும் கூறியது.

நிறுவனர்!

நிறுவனர்!

Chhanv Foundation எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை துவங்கி, அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களும் மறுவாழ்வுக்கு உதவி வருகிறார் லட்சுமி. கடந்த 2014ம் ஆண்டு லட்சுமிக்கு அப்போதைய அமெரிக்க முதல் பெண்மணியாக பதவி வகித்த மிச்சேல் ஒபாமா தைரியதிற்கான சர்வதேச பெண்மணி விருதினை வழங்கி லட்சுமியை கௌரவப்படுத்தினார்.

மேலும், என்.டி.டிவி. தொலைக் காட்சி இவரை இந்தியன் ஆப் தி இயர் என தேர்வு செய்து கௌரவப்படுத்தியது.

வளர்ச்சி...

வளர்ச்சி...

லட்சுமி டெல்லியில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த பெண். 15 வயதில் அமில வீச்சு தாக்குதலுக்கு ஆளான லட்சுமி, பிறகு சமூக சேவைகளில் ஈடுபட துவங்கினார். முக்கியமாக தன்னைப் போலவே அமில வீச்சு தாக்குதலுக்கு ஆளாகி வீட்டில் முடங்கி கிடைக்கும் பெண்களை ஊக்கப்படுத்த துவங்கினார்.

அமில வீச்சு தாக்குதலுக்கு ஆளான பெண்களின் ஒட்டுமொத்த குரலாக ஒரு கட்டத்தில் வளர்ந்தார் லட்சுமி. அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்கிய லட்சுமி, 2014ம் ஆண்டு நியூ எக்ஸ்பிரஸ்ல் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் பணியாற்றினார்.

லிவ்-இன்!

லிவ்-இன்!

2014ம் ஆண்டு ஜனவரி மாதம் சமூக ஆர்வலரும் தனது காதலருமான அலோக் தீக்ஷித்துடன் உறவில் இணைந்தார் லட்சுமி. ஆனால், இவர்கள் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக லிவ்-இன் உறவில் இணைந்தனர். சாகும் வரை ஒன்றாக சேர்ந்திருப்போம் என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

திருமணம் செய்துக் கொண்டால் நிச்சயம் அதற்கு பலர் வருவார்கள். அவர்கள் மணப்பெண்ணின் உருவத்தை பற்றி விமர்சனம் செய்வார்கள். மக்கள் நிச்சயம் உருவ அழகிற்கு தான் முக்கியத்துவம் அளிப்பார்கள். அதை தான் விரும்பவில்லை என கூறினார் லட்சுமி. மேலும், லட்சுமியின் இந்த முடிவுக்கு அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர் சம்மதம் தெரிவித்தினர்.

போராட்டம்!

போராட்டம்!

இப்போது லட்சுமி - அலோக் தம்பதியினருக்கு பிஹு எனும் அழகிய மகள் இருக்கிறார்.

மேலும், ஒருமுறை லட்சுமி அமில வீச்சு தாக்குதலுக்கு ஆளாகும் பெண்களுக்கு உடனடி நீதி வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டமும் நடத்தி இருந்தார். அதில், தன்னுடன் அமில வீச்சு தாக்குதலுக்கு ஆளான பிற பெண்களையும் ஒன்றிணைத்துக் கொண்டார்.

அதுமட்டுமின்றி, அமில வீச்சு தாக்குதலுக்கு ஆளாகும் பெண்களுக்கு தகுந்த மறுவாழ்வு மையமும், உதவியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Before and After Life of Laxmi Agarwal, An Acid Attack Survivor!

Before and After Life of Laxmi Agarwal, An Acid Attack Survivor!
Story first published: Friday, October 5, 2018, 14:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more