எங்க வீட்டு பொண்ணு ஓவியா... மக்களின் சைக்கலாஜிக்கல் பார்வை!

Posted By:
Subscribe to Boldsky

ஒருவர் மீது காதல் வயப்படுவது என்பது இயல்பு. ஆனால், ஒருவர் மீது பல ஆயிரக்கணக்கான நபர்கள் காதல் கொள்வது என்பது அதிசயம். மக்கள் எளிதில் யார் மீதும் காதல் வயப்பட மாட்டார்கள்.

பிரபலங்களாகவே இருப்பினும் பலதரப்பட்ட மக்களிடம் இருந்து வேறுபாடற்ற அன்பினை பெறுவது மிகவும் கடினம். அதனால் தான் எம்.ஜி.ஆர் மக்கள் திலகம் எனும் புகழ்பெற்றார்.

மக்கள் பேரன்பு விலைமதிப்பற்றது. அதை காசு கொடுத்து வாங்கிவிட முடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஓவியா பெற்றிருப்பது அப்படிப்பட்ட ஒரு அளவுகடந்த அன்பு தான். இது எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவதல்ல. மக்களின் அன்புடன் ஒப்பிடுவது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேர்மை!

நேர்மை!

எல்லாருக்குள்ளும் இரு முகங்கள் இருக்கும். அதில் நேர்மையான ஒன்றும், அதற்கு புறமான ஒன்றும் இருக்கும். எப்போதும் நேர்மையாக தான் இருக்க வேண்டும் என நமது மனம் சொல்லும்.

ஆனால், காலம், சூழல், நமக்கு சாதகம் மற்றும் மனிதர்களை சம்பாதிக்க நாம் நம்மை அறிந்தும், அறியாமலும் பல சமயங்களில் நேர்மைக்கு புறம்பாக நடந்துக் கொள்வோம்.

இயல்பு!

இயல்பு!

நம்மால் இருக்க முடியாத ஒரு இயல்பு நிலையில் வேறொருவர் வாழ்கிறார். நாம் வெளிக்காட்ட முடியாதவற்றை வேறோருவர் செய்கிறார் எனும் போது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாம் அவருக்கு விசிறியாகிவிடுவது வழக்கம்.

எம்.ஜி.ஆர் முதல் ரஜினி வரை பலரும் அன்று பெரும் ரசிகர் கூட்டம் பெற்றது இப்படி ஒரு செயலால் தான். நிஜத்தில் முடியாததை, அவர்கள் திரையில் செய்துக் காண்பித்தனர். அது மக்களை ஈர்த்தது.

சின்னத்திரை!

சின்னத்திரை!

ரியாலிட்டி ஷோவில் ஓவியாவின் சுட்டித்தனமான நடவடிக்கைகள், துணிச்சலான பேச்சு, செயல்கள், புரளி பேசாத குணம், நேரடியாக, வெளிப்படியாக முகத்திற்கு நேராக பேசும் தைரியம் போன்றவை உளவியல் ரீதியாக மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் மதிப்பை பெற்று தந்துள்ளது.

இதன் காரணமாகவே மற்ற பிக் பாஸ் வீட்டார் மீது மக்கள் வெறுப்பு அடைவதற்கும், ஓவியா மீது அதீத காதல் கொள்வதற்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.

சோகம்!

சோகம்!

மேலும், என்ன தான் ஒருவர் தவறு செய்தாலும், அவர் நம்ம வீட்டு பிள்ளையாக இருந்தால் நாம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். தட்டிக் கொடுத்து இனிமேல் இப்படி செய்யாதே, மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்த வேலையை பார் என்றே கூறுவோம்.

அப்படி தான் ஓவியா மீதான மக்களின் பார்வை இருக்கிறது. ஓவியாவை சாதாரண மக்களில் இருந்து, பிரபலங்கள் வரை தங்கள் வீட்டு பெண்ணாக காண துவங்குகியுள்ளனர். இதற்கு காரணம், அவருக்குள் புதைந்திருக்கும் சோகமும் கூட.

அப்பா - அம்மா!

அப்பா - அம்மா!

நமது வீட்டருகே, அல்லது தெரிந்தவர் மத்தியில் அப்பா - அம்மா இல்லாத குழந்தைகள் சொந்த காலில் நிற்பதை காணும் போது அவர்கள் மீது நமக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படும். அதிலும், அவர்கள் நேர்மையாக வாழ்ந்து காட்டும் போது, அவரை மற்றவர்களிடம் ஒரு உதாரணமாக எடுத்துக் கூறுவோம்.

ஓவியா அப்படி ஒரு உதாரணமாக மாறி வருகிறார். மக்கள் ஓவியா மீது வைத்திருக்கும் அன்பிற்கு முழுக்க, முழுக்க உளவியல் ரீதியான காரணங்கள் தான் இருக்கின்றன.

நமக்கு பிடிக்கும் நபர்களை ஒருவர் திட்டும் போது, அவர் மீது நாம் நிச்சயம் கோபம் கொள்வோம். அப்படிப்பட்ட கோபங்கள் தான் பிக் பாஸ் வீட்டில் வாழும் இதர பிரபலங்கள் மீது பிரதிபலிக்கின்றன.

ஆட்டோ டிரைவர் முதல்...

ஆட்டோ டிரைவர் முதல்...

ஆட்டோ டிரைவர் முதல் பூக்கட்டும் அக்கா வரை... கல்லூரி மாணவி முதல் நடிகை ஸ்ரீப்ரியா வரை என ஓவியாவின் ரசிகர் பட்டாளம் தமிழகம் எங்கும் பரவிக் கிடக்கிறது. அவர் நிஜமாகவே நிகழ்சியில் ஒரு தவறு செய்தாலும், அதை மக்கள் அந்த தொலைக்காட்சி செய்யும் சதி என்ற கோணத்தில் தான் காண்கின்றனர்.

அடிக்ஷன்!

அடிக்ஷன்!

ரசிப்பு, விருப்பம் என்பதை தாண்டி சிலர் ஓவியாவிற்கு அடிக்ட்டாகி இருக்கிறார்கள் என்பதும் ஒருபுறம் காணப்படுகிறது. ஓவியாவை யாரேனும் திட்டினால், எதிர்த்தால் சிலர் அதை குறித்து சமூக தளங்களில் சோகமான பதிவுகள் இடுவதையும் காண முடிகிறது.

நாம் நேர்மையாக இருந்தால் எதிர்ப்போர் எண்ணிக்கையை காட்டிலும், நம்மை சுற்றி நம்மை அரவணைக்கும் நபர்கள் மற்றும் பெரிய பாசிட்டிவ் வைப் அதிகரிக்கும் என்பதற்கு ஓவியா ஒரு உதாரணமாக காணப்படுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why People Love Oviya but not Julie? Psychological Things From People Point of View!

Why People Love Oviya but not Julie? Psychological Things From People Point of View!