For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த எண்ணெயில் விளக்கேற்றினால் வீட்டில் சுபிட்சம் நிலவும்!!

சுவாமிக்கு விளக்கேற்றும்போது எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும் என இந்த கட்டுரையில் காணலாம்.

By Ambika Saravanan
|

தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபடுவது இந்துக்களின் பாரம்பரியமாகும். விளக்கேற்றுவது ஆன்மீகத்தின் வெளிப்பாடு. விளக்கேற்றுவதால் அறியாமை இருள் விலகி, அறிவு பெருகுகிறது. வீடு புனிதமடைகிறது.

வளமும் ஆரோக்கியமும் செல்வமும் அதிகரிக்கிறது. நமது வாழ்வின் பாவங்களை துடைக்கின்றது. மனதின் தீய எண்ணங்களை எரிக்கின்றது.

மொத்தத்தில் விளக்கு கடவுளின் உருவமாக பார்க்கப்படுகிறது. ஆகையால் மக்கள் தினம் தினம் விளக்கு ஏற்றி கடவுளை வணங்குகின்றனர்.

which oil if good for deeparathana

விளக்கில் ஊற்றி ஏற்றப்படுவதற்காக பலரும் பல வித எண்ணெய்களை பயன்படுத்துவர். ஆன்மீகத்தில் ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு பொருள் மற்றும் பலன் உண்டு. ஒவ்வொரு மனிதனின் தேவைகள் மற்றும் துயரங்களுக்கு ஏற்ப, விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றி ஏற்றி அவர்கள் துயரங்களை களைந்து வீட்டிற்கு அமைதியை கொண்டு வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசு நெய் :

பசு நெய் :

அக்னி புராணங்களின் படி, பசு நெய் ஊற்றி விளக்கேற்றுவதால் சுற்றிலும் உள்ள வளி மண்டலத்தின் நேர்மறை அதிர்வுகள் ஈர்க்கப்படுகின்றன.

பசு நெய் பயன்படுத்துவதால் ஏழ்மை நீங்குகிறது. ஆரோக்கியம் மற்றும் செல்வம் கிடைக்கிறது. சொர்க்கத்தில் இருப்பது போன்ற மகிழ்ச்சி கிடைக்கிறது. வீடு முழுவதும் ஒரு ஒளி வெள்ளம் தோன்றுகிறது.

அன்னை மஹாலக்ஷ்மியின் அருள் நமக்கு கிடைக்கிறது.. அவரின் ஆசிர்வாதங்களும், நல்ல அதிர்ஷ்டமும் கிடைக்கப்பெற்று வளமான வாழக்கை அருளப்படுகிறது. தீய சக்திகள் அழிக்கப்படுகின்றன,

எள்ளு எண்ணெய்(நல்லெண்ணெய் ) :

எள்ளு எண்ணெய்(நல்லெண்ணெய் ) :

நல்லெண்ணையில் விளக்கேற்றுவதில் சகல தோஷங்களும் , தீய ஆவிகளும் நீக்கப்படுகின்றன. நாள் பட்ட பிரச்சனைகளுக்கும் பூர்வ ஜென்ம கர்மங்களுக்கும் இந்த எண்ணெயில் விளக்கு போடுவது ஒரு சிறந்த தீர்வாகும்.

ஏழரை சனியின் போது சனி பகவானை மகிழ்விக்க நல்லெண்ணையில் விளக்கு போட வேண்டும். இதனை செய்வதால் ஏழரை சனியின் பாதிப்புகள் குறையும்.

வேப்பெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் :

வேப்பெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் :

இந்த எண்ணெய்கள் கலவையை கொண்டு விளக்கேற்றுவதால், தாய் பராசக்தியின் அருள் கிடைக்கிறது. மற்றும் நம் குல தெய்வத்தின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்க பெறுகின்றது. வீட்டில் வளங்களும் அதிகரிக்கின்றன.

எதிரிகளால் துன்பப்படுபவர்கள், கால பைரவரை வழிபட்டு, அமாவாசையில் அல்லது கிருஷ்ணா அஷ்டமியில் வேப்பெண்ணெய்யில் 8 விளக்குகள் ஏற்றி ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்வது நல்ல பலனை கொடுக்கும்.

 விளக்கெண்ணெய் :

விளக்கெண்ணெய் :

குடும்ப சந்தோஷம், வளர்ச்சி, ஆன்மீக முன்னேற்றம், புகழ் மற்றும் வளம் பெறுக விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றுவது நல்லது. நமது உறவுகளுக்கும் இது நன்மையை செய்யும்.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றுவதால் விநாயகரின் அருளை பெறலாம். குலதெய்வத்தின் அருள் பெற்று மகிழ்தச்சியாக இருக்கலாம்.

இலுப்பை எண்ணெய் :

இலுப்பை எண்ணெய் :

சிவ பெருமானின் அருளை பெறுவதற்காக இந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம். இதன் மூலம், கடன் தொல்லை, உடல் நலக்கோளாறு போன்றவை தீரும்.

 பஞ்ச தீப எண்ணெய் :

பஞ்ச தீப எண்ணெய் :

நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் , இலுப்பைஎண்ணெய் ,மற்றும் பசுநெய் ஆகியவற்றை 3:2:1:2:2 என்ற விகிதத்தில் கலந்து செய்த எண்ணெய் பஞ்சதீப எண்ணெய் . இந்த எண்ணெயின் பயன்பாடு துன்பங்களை போக்கி எல்லா வளங்களையும் கொடுக்கும் .வீட்டில் உணவு பற்றாக்குறை நீங்கி அனைவரும் மகிழ்சியோடு இருப்பார். தீவினைகள் மற்றும் கடன் தொல்லையில் இருந்து விடைபெறுவர்.

திருஷ்டி , எதிர்மறை எண்ணங்கள் , வியாதி, ஏழ்மை போன்றவற்றை விலக்கி வளம், அதிர்ஷ்டம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, போன்றவை கிடைக்க பஞ்சதீப எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும். துன்பம் விளைவிக்கும் அதிர்வுகளை நீக்கி , நேர்மறை அதிர்வுகளை நம்மை சுற்றி ஏற்படுத்தும்.

தடங்கல், பயம் மற்றும் துன்பங்கள் விலக , அஷ்டமியில் கால பைரவரவருக்கு பஞ்சதீப எண்ணெயில் அமாவாசை அன்று விளக்கேற்றி ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

உடல் நல கோளாறுகளுக்கு அஷ்டமியில் பைரவருக்கு பஞ்ச தீப எண்ணெயில் விளக்கேற்றி விபூதி அபிஷேகம் செய்வது நல்ல பலனை தரும்.

விளக்கேற்ற கூடாத எண்ணெய்கள்:

விளக்கேற்ற கூடாத எண்ணெய்கள்:

சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கடலைஎண்ணெய்யில் விளக்கேற்ற கூடாது. இதனால் கடன் தொல்லை அதிகரித்து நிதி நிலையில் பற்றாக்குறை ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

which oil is good for deeparathana

which oil is good for deeparathana,
Story first published: Thursday, August 31, 2017, 17:09 [IST]
Desktop Bottom Promotion