இந்த பூவிழி வாசலிலே பேபி, இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அச்சம், பாசம், அழுகை எல்லா உணர்வுகளையும் பூவிழி வாசலிலே படத்தில் அந்த குழந்தை படம் முழுக்க வெளிகாட்டி பேசியே ஒரே வார்த்தை... அல்ல எழுத்து... "லா.. லா..." மட்டும் தான். காது கேளாத, வாய் பேச முடியாத கதாபாத்திரம்.

இன்றும் பூவிழி வாசலிலே என்ற வார்த்தை கேட்டவுடன் முதலில் நினைவிற்குக் வருவது இந்த குழந்தையின் பால் வடியும் முகமும், அந்த அசத்தல் நடிப்பும் தான்.

What This Poovizhi Vasalile Kid Doing Now?

சரி, இந்த குழந்தை யார், இவர் இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என உங்களுக்கு தெரியுமா? டிவி, சினிமா உலகை தாண்டி வெகு சிலருக்கு மட்டுமே இவர் யார் என்று தெரியும்.

ஏன், உங்களுக்கும் இவரை தெரியும். ஆனால், இவர் தான் அந்த பூவிழி வாசலிலேவில் நடித்த குழந்தை என்பதை தவிர்த்து...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுஜிதா!

சுஜிதா!

தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள, நடித்துக் கொண்டிருக்கும் சுஜிதா தான் பூவிழி வாசலிலே படத்தில் நடித்த அந்த குழந்தை.

41 நாட்களில்!

41 நாட்களில்!

இவர் பிறந்த 41வது நாளில் இருந்தே நடிக்க துவங்கிவிட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்! இவர் பிறந்தது ஜூலை 12, 1983ல். அதே ஆண்டில், தான் பிறந்த 41வது நாளில் இவர் அப்பாஸ் எனும் மலையாள படத்தில் நடிகை கே.ஆர். விஜயாவின் பேத்தியாக நடித்திருந்தார்.

சொந்த ஊர்!

சொந்த ஊர்!

சுஜிதா கேரளாவின் திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். இவருக்கு ஒரு அண்ணனும், தங்கையும் இருக்கிறார்கள். இவரது பெற்றோர் டி.எஸ் மனு மற்றும் ராதா.

இயக்குனரின் தங்கை!

இயக்குனரின் தங்கை!

இவரது அண்ணன் சூர்யா கிரண் எனும் இயக்குனர் ஆவார். சூர்யா கிரண் நடிகை கல்யாணி என்கிற காவேரியை திருமணம் செய்துக் கொண்டவர்.

இவர் காசி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாகவும், சமுத்திரம் படத்தில் சரத் குமாரின் தங்கையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்!

திருமணம்!

சுஜிதா 2012ல் விளம்பர தயாரிப்பாளர் தனுஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

சினிமா என்றால் என்ன, கேமரா என்றால் என அறியும் முன்னரே நடிக்க துவங்கியவர் சுஜிதா.

விருதுகள்!

விருதுகள்!

சுஜிதா 1987 மற்றும் 1988ம் வருடத்திற்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி விருதை வென்றிருக்கிறார்.

2011ல் ஆசியாநெட் டிவி விருதுகளில் சிறப்பு ஜூரி விருதை ஹரிச்சந்தனம் என்ற தொடருக்காக பெற்றார்.

இது போக, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹீரோ ஹோண்டா விருதும் இவர் பெற்றுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What This Poovizhi Vasalile Kid Doing Now?

Do You Know What This Poovizhi Vasalile Kid Doing Now?