இந்த 5ல், நீங்க எந்த வகையான முட்டாள்?

Posted By:
Subscribe to Boldsky

நானொரு முட்டாளுங்க.... சந்திரபாபுவின் ஹிட் பாடல்களில் மறக்க முடியாத பாடல்.

இந்த உலகில் யார் முட்டாள்? ஒருவர் முட்டாள் என்பதை எதை வைத்து அறிந்துக் கொள்வது? இந்திந்த தகுதிகள் இருந்தால் அவர் முட்டாளா? பல சமயங்களில் நமது சமூகம் வெகுளிகளை, ஏமாளிகளை முட்டாளாக சித்தரித்திவிடுகிறது. உண்மையில் அவர்கள் தான் உன்னதமான மனிதர்கள். தங்களுக்கு தீமை செய்பவர்களுக்கும் தீங்கு எண்ணாத புண்ணியவான்கள்.

Which Type of Fool You Are?

உண்மையான முட்டாள் மிக மிடுக்காக, நீட்டாக தான் திரிகிறான். தன்னை ஒரு யோக்கியனாக, அறிவாளியாக, எல்லாம் அறிந்தவனாக காட்டிக் கொள்ளும் முட்டாள்கள் தான் நமது சமூகத்தில் அதிகம்.

இந்த ஐந்து வகை முட்டாள்களை நீங்கள் உங்கள் அன்றாக வாழ்வில் அதிகம் கண்டிருக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நான் தான் அறிவாளி...

நான் தான் அறிவாளி...

இந்த உலகிலேயே நான் தான் பெரிய அறிவாளி, என்னை தவிர மற்றவர் எல்லாம் அறிவில் குறைந்தவர்கள், என்னை போன்ற ஒரு அறிவி ஜீவி இல்லை. நான் செய்யும் வேலையே சிறந்தது என்ற எண்ணம் கொண்டிருப்பவனே இந்த உலகில் ஆகசிறந்த முதன்மை தன்மை கொண்ட முட்டாள்.

கற்றது கையளவு, கல்லாதது கடலளவு என்பது அறியா மூடர் வகையை சேர்ந்தவர்கள் அவர்கள். இவர்கள் மற்றவர்களை எப்போதும் ஏளனமாகவும், பிற வேலை செய்பவர்களை கீழ்த்தரமாகவும் காணும் மனோபாவம் கொண்டிருப்பார்கள்.

என்ன அறிவு இருந்தாலும், மனதில் ஒழுக்கம் இல்லை எனில், இருந்தென்ன பயன், இறந்தென்ன பயன்?

நான் ஒரு முட்டாளுங்க...

நான் ஒரு முட்டாளுங்க...

தன்னை தானே முட்டாள் என்று எண்ணும் நபர்கள், இந்த உலகில் நடமாடும் பிணங்கள். யானைக்கு பலம் தும்பிக்கை, மனிதருக்கு பலம் நம்பிக்கை என்பார்கள். இரண்டு கைகள், கால்கள் இல்லாமல், தன்னம்பிக்கை மட்டுமே கொண்டு சாதனையாளராக, மற்றவருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் உத்வேக பேச்சாளாராக இருப்பவர் நிக் வ்யூஜிக்.

முதலில் உங்களை நீங்களே மதிக்க, மதிப்பளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இல்லை எனில், பிற நபர்கள் ஒருபோதும் உங்களை சல்லிக்காசுக்கு கூட மதிக்க மாட்டார்கள்.

மூளை குருடன்!

மூளை குருடன்!

இந்த மூளை குருடன் வகை சேர்ந்த முட்டாள்களை நாம் அதிகம் சமூக தளங்களில் பார்க்கலாம். மூளை என்பது எதற்கு இருக்கிறது? எதுவாக இருந்தாலும், சிந்திக்க, ஆராய்ந்து செயற்பட. வானத்தில் இயேசு, கிருஷ்ணன் தெரிந்தார், இதை பகிர்ந்தால் உங்களுக்கு நாளைக்கே ஒரு நல்ல விஷயம் நடக்கும். இதை பகிராவிட்டால் உங்கள் அம்மா இறந்துவிடுவர் என கூறப்பட்டிருக்கும் பதிவுகளை நம்பும் மூடர்கள்.

சமூக தளங்களில் மட்டுமல்ல, நேருக்கு நேர் கூறும் தகவல்களை கூட அது மெய்யா, பொய்யா என அறியாமல், அப்படியே உண்மை தான் என நம்பி பரப்பும் இவர்களை போல மூடர்களால் தான் இன்று உலகில் பல தகவல்கள் பொய்யாக பரவி, மக்கள் மத்தியில் அச்சம் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.

அட, அன்னிக்கி இப்படிதானுங்க....

அட, அன்னிக்கி இப்படிதானுங்க....

வேறு ஒருவர் கூறிய தகவலை, தானே, தன் வாழ்விலே கண்டது போல திரித்து பேசும் மூடர்கள். அந்த தகவலை ஒருபோதும் இவர்கள் அப்படியே திரித்து கூறமாட்டார்கள். அதனுடன் தங்கள் சுய கற்பனைகளை கலந்து சுவாரஸ்யமாக கூறுவார்கள். தாங்கள் செய்வது தவறு என்றும், இது முட்டாள்தனமான செயல் என்றும் அறியாதவர்கள் இவர்கள்.

தான் எல்லாம் அறிந்த ஞானி என்பதை காட்டிக் கொள்ள இவ்வகை மூடர்கள், இச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

மூடநம்பிக்கை மூடர்கள்!

மூடநம்பிக்கை மூடர்கள்!

சான்றோர் பெருமக்கள், நன்றே செய், அதையும் இன்றே செய் என்று கூறியுள்ளனர். ஆனால், இவர்கள் இந்த கிழமை தான் எனக்கு உகந்தது, இந்த நாளில், இந்த நேரத்தில் செய்தால் தான் அது விளங்கும் என மூட நம்பிக்கை கொண்டு, தனது வெற்றியை, மேன்மையை தானே தள்ளிபோடும் மூடர்கள்.

உங்கள் வட்டத்தில் இப்படி சிலரை நீங்கள் கண்டிருக்கலாம், முக்கியமான விஷயம் என்றால் அன்று தங்கள் ராசியான சட்டையை எடுத்து மாட்டிக் கொள்வார்கள். முக்கியமான கோப்பு கையெழுத்திடும் போது, தேர்வு எழுதும் போது தங்கள் ராசியான பேனாவில் தான் எழுதுவார்கள். இன்னும் இந்த பட்டியலில் இவ்வகை மூடநம்பிக்கை மூடர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Which Type of Fool You Are?

Which Type of Fool You Are?
Story first published: Thursday, September 21, 2017, 13:04 [IST]