காதலிக்கு ரூ.50 இலட்சம் கொடுக்க, அப்பாவிடம் கடத்தல் நாடகம் போட்ட 16 வயது மகன்!

Posted By:
Subscribe to Boldsky

திரைப்படங்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியல் ஊடுருவி தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதற்கு பல எடுத்துக் காட்டுகள் உள்ளன. ஆனால், திரைப்படங்களில் வரும் காட்சிகளை கண்டு தவறுகளும் நடக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்னர் கில்லி படத்தில் மிளகாய் தூள் தூவுவதை காப்பியடித்து ஒரு திருடன் தப்பியது போலீஸ் விசாரணையில் அறியப்பட்டது. அதே, போல வேறு ஒரு படத்தின் காட்சிகளை போல ஒரு கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.

காதலியின் குடும்ப பொருளாதார சூழல் சரியில்லாத காரணத்தால், சொந்த அப்பாவிடம் தான் கடத்தப்பட்டது போல நடித்து ஐம்பது இலட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 16 வயது சிறுவனின் கடத்தல் நாடகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மும்பை!

மும்பை!

மும்பையின் சக்கி நாகா (Saki Naka) எனும் பகுதியை சேர்ந்த 16 வயது மைனர் சிறுவன் கடத்தப்பட்டதாக தகவல் தெரியவர, அந்த சிறுவனின் குடும்பத்தார் க்ரைம் பிரான்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

ரூ.50 இலட்சம்!

ரூ.50 இலட்சம்!

கடத்தல் காரன் என கால் செய்து மிரட்டிய நபர், உன் பையன் எங்களிடம் தான் உள்ளான், நீ குறித்த நேரத்தில் ஐம்பது இலட்சம் பணத்தை எங்களிடம் கொடுக்க வேண்டும். இது குறித்து போலீசிடம் கூற கூடாது என மிரட்டியுள்ளான்.

அப்பா!

அப்பா!

அந்த சிறுவனின் தந்தை, மகனை மீட்க தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு, அவர்கள் அழைத்த இடத்திற்கு சென்றார். அதே நேரத்தில், வழக்கின் அபாயத்தை அறிந்த காவல் துறை, அதே நேர்கோட்டில் விசாரணையை துவங்கியது. அப்போது, கால் வந்த செல்போன் டவரை ட்ரேஸ் செய்த போது, கடத்தல் காரனின் இருப்பிடம் அறியப்பட்டது.

லாட்ஜ்!

லாட்ஜ்!

கடத்தல் காரன் இருந்ததாக கண்டறியப்பட்ட இடத்திற்கு காவல் துறை சென்ற போது, அந்த லாட்ஜ் அறையில் 19 வயதுமிக்க இளைஞர் ஒருவன் இருந்தான். அவனிடம் விசாரித்த போது தான், அவன் அந்த 16 வயது சிறுவனின் நண்பன் என்பது தெரியவந்தது.

சதிதிட்டம்!

சதிதிட்டம்!

அந்த 16 வயது சிறுவனின் யோசனையின் பேரில் தான் இந்த கடத்தல் நாடகம் அரங்கேறியுள்ளது என்றும். அந்த சிறுவனின் காதலியின் குடும்பத்தார் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், அந்த பெண்ணுக்கு உதவ இப்படி ஒரு கடத்தல் நாடகம் போட்டதாக விசாரணையில் தகவல் கிடைத்தது.

தொடர்ந்து விசாரணை...

தொடர்ந்து விசாரணை...

காவல் துறையினர் அந்த சிறுவனையும், இளைஞரையும் தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

சூது கவ்வும் படத்தில் வரும் காட்சிகள் போல இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

To Help Her Girl Friend's Family. Lover Boy Makes Fake Kidnapping Drama!

kidnapping drama, lover kidnapping, fake own kidnapping, கடத்தல் நாடகம், பணம் கேட்டு மிரட்டல்