நீங்க 90-களின் குட்டி சுட்டியா? இதெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கா?

Posted By:
Subscribe to Boldsky

80-களின் இறுதியில் இருந்து, 90-களின் ஆரம்பக் காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகள் ஏதோ ஒரு ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள் என கூறலாம். அவர்கள் மட்டுமே முழுமையான பாரம்பரியம் முதல், தொழில்நுட்பத்தின் பிறப்பு, வளர்ச்சி, புரட்சி என அனைத்தும் கண்ட தலைமுறை.

ஊர் சுற்றியும் விளையாண்டு மகிழ்ந்தவர்கள், கம்ப்யூட்டர் கேம்ஸ்-களையும் ஒரு கை பார்த்தவர்கள். ஒருவேளை நீங்களும் 90-களின் குட்டி சுட்டியாக இருந்திருந்தால்... இந்த புகைப்பட தொகுப்பு உங்களுக்கு ஒரு டைம் டிராவல் மெஷினாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எம்புட்டு...

எம்புட்டு...

ரப்பர் வெச்ச பென்ஸில் அடம்பிடிச்சு வாங்கி... அதை மென்னு துப்பி, செதச்சு ... மறக்க முடியுமா அந்த நினைவுகள? இப்போ எல்லாம் ரெண்டு கால் எடுத்து வெச்சு நடக்குறதுக்குள்ள ஸ்மார்ட் போன் நோண்ட ஆரம்பிச்சிடுறாங்க...

பேட்...

பேட்...

நீங்க இந்த எக்ஸாம் பேட் பின்னாடி பதில் எழுதி வெச்சி பிட்டு அடிச்சதுண்டா? அதுல இருக்க கிக்கு காலேஜ் நாட்கள்'ல கூட வராது..

கவ்பாய்!

கவ்பாய்!

இந்த வகை தீபாவளி துப்பக்கி வாங்கி ரோல்கேப் போட்டு சுட்டு விளையாடும் போது... எல்லாரும் கவ்பாயா மாறிடுவாங்க. இப்போ தீபாவளியே கொண்டாட மாட்டேன்கிறாங்க...

வாவ்!

வாவ்!

25 பைசா தான். ரூபாய்க்கு நாலு வாங்கி பாக்கெட்டுல போட்டுக்கிட்டு ஸ்கூல் பிரேக் டைம்ல, டீச்சர் பார்க்காத நேரத்துலன்னு ஒவ்வொன்னா சாப்பிட்டது... தனி சுகம்!

முதல் சூயிங்கம்!

முதல் சூயிங்கம்!

எனக்கு நினைவு தெரிஞ்சதுல பிக் ஃபன் தான் முதல் சூயிங்கம். ஒரு ரூபாய்ன்னு நினைக்கிறேன். இதுக்கு ஸ்டிக்கர் ஃப்ரீயா தருவாங்க.

நினைவிருக்கா...

நினைவிருக்கா...

இதை மட்டும் தொலைச்சுட்டோம் அம்புட்டு தான். அந்த பொம்மையும் வீணா போயிடும். கீ கொடுத்தா ஆடுற பொம்மைங்க எத்தன வகை...

வாக்மேன்!

வாக்மேன்!

இப்போ எல்லாம்... ப்ளூடூத் ஹெட்செட் போட்டுக்கிட்டு சுத்துறது தான் ஃபேஷன். அப்போ எல்லா வாக்மேன் ஒருத்தர் வெச்சிருந்தா அவரு பெரிய பணக்கார ஆள்னு கண்டுப்பிடிச்சிடலாம்...

கப்பல்!

கப்பல்!

இந்தியன் படத்துல கமல் பொண்ணுக்காக விட்ட நூறு ரூபா நோட்டு கப்பல் பார்க்கும் போதெல்லாம் இந்த ஞாபகம் கண்ணு முன்ன வந்து வந்து போகும். இதுக்காகவே மழை பெய்யாதான்னு சாமிக்கிட்ட வேண்ட தோணும்.

99999 இன் 1

99999 இன் 1

இருந்தது என்னவோ ஐம்பது கேம்ஸ் தான். ஆனா... 99999 இன் 1-ன்னு போட்டிருக்கும். அதையும் நம்பின காலம் அது.

நடராஜ்!

நடராஜ்!

கேமல், நடராஜ் ஜியாமென்ட்ரி பாக்ஸ். அப்போ இருந்து இப்போ வரைக்கும் அந்த டிவைடர் எதுக்கு இருந்துச்சுன்னே தெரியல...

லைட்டு வெச்ச ஷூ!

லைட்டு வெச்ச ஷூ!

இதுக்கு அடம்பிடிச்சு இது கிடைக்காம ஏங்கி போன குழந்தைகள் எத்தனையோ பேரு இருந்திருப்பாங்க. இப்போ ஐ-போன் வெச்சிருந்தா கெத்து. அப்போ எல்லாம் இந்த ஷூ போட்டிருந்தா தான் பெரிய கெத்து.

பம்பரம்!

பம்பரம்!

கோலிகுண்டு, பம்பரம், பச்சை குதிர-ன்னு எம்புட்டு விளையாட்டு... எல்லா வீட்டுலையும் பரண்மேல கண்டிப்பா இது கிடக்கும். எக்ஸாம் முடிச்ச கையோட அத எடுத்துக் கொடுக்க சொல்லி விளையாண்ட அனுபவம் மறக்கவே முடியாது.

சுவிட்ச்!

சுவிட்ச்!

கடைசியா எங்க பாட்டி வீட்டுல பார்த்ததா நினைவிருக்கு. இன்னும் ஏதோ ஒண்ணு, ரெண்டு பழைய வீடுகள்ல இது இருக்க வாய்ப்பிருக்கு. முதல் சுவிட்ச் பாக்ஸ்.

போஸ்ட்!

போஸ்ட்!

பல இடங்கள்'ல இந்த போஸ்ட் பாக்ஸ் ஒரு நினைவு சின்னமா தான் இருக்கு. பழைய யூனிவர்சிட்டி-க்குள்ள இன்னும் ஒரு மூலையில சாஞ்சு நின்னிக்கிட்டு இருக்கும்.

கார்ட்ஸ்!

கார்ட்ஸ்!

கிரிக்கெட் கார்ட்ஸ், WWE கார்ட்ஸ்.. விளையாண்டத விட, ஏமாத்தி சண்டை போட்டது தான் அதிகம். பிக் ஷோ, கேன், அண்டர் டேக்கர் கார்டு எல்லாம் ஒருத்தன் கிட்ட சிக்கிட்டா அவன் தான் வின்னர்.

பாட்டு கேசட்!

பாட்டு கேசட்!

இப்போ மெம்மரி கார்டு, இன்டர்னல் மெம்மரி-ன்னு இருக்கு. அப்போ எல்லாம் பாட்டு கேசட்டு தான். A, B ன்னு ரெண்டு சைடு.. ஒரு சைட்'ல பாட்டோட நீளத்த பொறுத்து 7-8 ரிகார்டு பண்ணலாம்.

ஃப்ரூட்டி!

ஃப்ரூட்டி!

ஸ்ட்ரால உறுஞ்சி குடிக்கவே இத தேடி வாங்குவோம். ஐஞ்சு ரூபா கொடுத்து இத வாங்க ஒரு வாரம் காசு சேர்த்து வைக்கணும்.

லாந்தர் விளக்கு!

லாந்தர் விளக்கு!

அப்போ எல்லா கரண்ட் போச்சுன்னா மண்ணெண்ணெய் ஊத்தி இதத்தான் பத்த வெக்கணும். ஒருதடவ ரெண்டு மூணு நாள் கரண்ட் இல்லாம போய்... ரெண்டு, மூணு வீட்டுல இருந்து இந்தலாந்தர் விளக்கு எடுத்திட்டு வந்து வீதியில நைட்டு நடுரோட்ல வெச்சு, நடுவுல பசங்க எல்லாம் டான்ஸ் அடி சந்தோசமா இருந்த நினைவுகள் இப்போ கூட கண்ணு முன்ன வந்து போகுது.

வாட்டர் பாட்டில்!

வாட்டர் பாட்டில்!

90-களின் குழந்தைகள் அதிகம் பயன்படுத்திய வாட்டர் பாட்டில். பின்னாடி ஸ்கூல் பேக், முன்னாடி வாட்டர் பாட்டில்... கையில லன்ச் பேக்... ஆடிட்டே ஸ்கூலுக்கு போயிட்டு வந்த அனுபவம் உங்களுக்கு இருக்கா?

இன்க்

இன்க்

மூணாம் வகுப்பு படிக்கிற வரைக்கும் பென்ஸில் தான். நாலாம் வகுப்பு போனாதான் பேனா. அதுவரைக்கும் அண்ணா, அக்கா இன்க் பேனால இன்க் ஊத்துறத முட்ட, முட்ட முழிச்சு வேடிக்கை பார்த்திருக்கீங்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

90s Childhood Memories!

90s Childhood Memories!