அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய காமராஜரின் கடைசி நாட்கள்....

Posted By:
Subscribe to Boldsky
அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய காமராஜரின் கடைசி நாட்கள்....வீடியோ

இனி இப்படி ஒரு பெருந்தலைவர் கிடைப்பாரா என்பதற்கான பதிலை, காமராஜரின் புன்னகையை போலவே மிக எளிமையாக கூரிவடலாம். இப்படி ஒரு தலைவன் கிடைப்பது கனவிலும் எதிர்பார்க்க முடியாது.

அம்மாவிற்கு மாதம் ரூ. 120 மட்டும் அனுப்பிக் கொண்டிருந்தார். கூடுதலாக வெறும் முப்பது ரூபாய் கேட்டதற்கு அதட்டி, நீ வீண் செலவு செய்துவிடுவாய் என கூறி மறுப்பு தெரிவித்த தலைவர்.

கர்மவீரர், ஏழைக்கு உதவிய பெரும் காவலர்., கல்வி கண் திறந்தவர், கிங் மேக்கர் என பல பெயர்களுக்கு சொந்தக் காரர். ஆனால், இவரது நினைவிடங்கள் கூட இவருக்கு சொந்தமில்லை. சொந்தம் என்று இவருக்கு ஒரு அடி நிலம் கூட தமிழகத்தில் இருக்கவில்லை.

தன் வாழ்நாளின் ஒவ்வொரு பக்கங்களையும், அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி, வெகுஜன மக்களுக்கும் பாடமாக வாழ்ந்துக் காட்டி  சென்றுள்ளார் காமராஜர். அதிலிருந்து நாம் பெரிதும் அறிந்திராத சில முக்கியமான அத்தியாயங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தமிழன் என்ற கர்வம்!

தமிழன் என்ற கர்வம்!

அது முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரை அவர்களின் கீழ் நடந்துக் கொண்டிருந்த தி.மு.க ஆட்சி. அப்போது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நாகர்கோவில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது கர்மவீரர் காமராஜர் அய்யா அவர்களை காண வேண்டியிருந்தார்.

பார்க்க முடியாது

பார்க்க முடியாது

டெல்லியில் இருந்து காமாராஜர் அய்யாவை தொடர்புக் கொண்டு, செய்தியை கூறி எந்த நாள், நேரம் பார்க்க விருப்பம் என கேட்கிறார்கள். சற்றும் யோசிக்காமல் என்னால் நிக்ஸன் அவர்களை காண முடியாது என கூறிவிட்டார் காமராஜர். காமாராஜர் ஏன் இப்படி எடுத்தவுடன் பார்க்க முடியாது என கூறுகிறார் என அனைவருக்கும் பெரும் குழப்பம். பிறகு இதற்கான காரணத்தையும் அவரே கூறினார்.

தமிழன்

தமிழன்

அப்போதைய தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை அவர்கள் அமெரிக்கா சென்ற போது, அவரை காண நேரம் ஒதுக்கவில்லையாம் நிக்ஸன். வேறு கட்சிக் காரராக இருந்தாலும், தமிழன் என்ற ஒரே காரணத்தால், என் நாட்டவரை காண முடியாத நபரை நான் ஏன் காண வேண்டும் என தனது கண்டனத்தை வெளிபடுத்தியவர் காமாராஜர் அய்யா அவர்கள். தமிழ் உணர்வு மிக்க மாபெரும் தலைவர்.

மூதாட்டி!

மூதாட்டி!

நேருவும், காமாராஜர் அய்யாவும் ஒருமுறை விருதுநகர் வழியாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.அப்போது, ஒரு வயதான மூதாட்டி பொதுமக்களோடு அந்த வேகாத வெயிலில் சாலை ஓரமாக நின்றுக் கொண்டு காரில் செல்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

அம்மா!

அம்மா!

நேரு உடனே காமராஜரிடம், "அந்த மூதாட்டி யார் என உங்களுக்கு தெரியுமா?" என கேட்கிறார். காமாராஜர் சிரித்துக் கொண்டே, "அது எனது அம்மா.." என்கிறார். உடனே நேரு காரை நிறுத்தி இறங்கி, காமாராஜரின் அம்மாவிடம் சென்று, "நீங்கள் ஒரு சிறந்த மனிதரைப் பெற்றுடுத்துள்ளீர்கள்" என மனம் உருகிக் கூறி நன்றி தெரிவித்து விடைப் பெற்றாராம்.

பிரசாதம்!

பிரசாதம்!

இது காமாராஜரின் பள்ளி பருவத்தில் நடந்த சம்பவம். காமராஜர் படித்த பள்ளியில் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்து விழா நடத்தும் முறை இருந்தது. விழா முடிந்ததும் அனைவருக்கும் பிரசாதம் வழங்குவார்கள். பிரசாதம் வழங்கும் நேரத்தில், பெரும்பாலான மாணவர்கள் வரிசையில் முண்டியடித்துக் கொண்டு ஒருமுறைக்கு, பலமுறை மீண்டும், மீண்டும் சென்று பிரசாதம் வாங்கிக் கொண்டே இருந்துள்ளனர்.

ஒதுங்கினார்!

ஒதுங்கினார்!

இதை பார்த்துக் கொண்டே இருந்த காமாராஜர். ஒரு கட்டத்தில் வரிசையில் நிற்காமல், தனியாக ஒதுங்கி நின்றுக் கொண்டார். எல்லாரும் வாங்கி சென்ற பிறகு, கடைசியில் மீதமிருந்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது தாய், "எல்லாரும் அதிகமாக பிரசாதம் வாங்கி செல்லும் போது நீ மட்டும் ஏன் இவ்வளவு குறைவாக வாங்கி வந்துள்ளாய்?" என காமராஜரிடம் கேட்டுள்ளார்.

சரிசமம்!

சரிசமம்!

எனக்கு முண்டியடித்து வாங்க விருப்பமில்லை. விழாவிற்காக அனைத்து மாணவர்களிடமும் ஐந்து காசு வாங்கினார்கள். ஆனால், பிரசாதத்தை அதே போல அனைவருக்கும் சமமாக கொடுக்கவில்லை. இது அவர்களது தவறு" என கூறியுள்ளார். சிறுவயதில் இருந்தே தீர்க்கமான முடிவுகள் எடுப்பதிலும், தவறை தட்டிக் கேட்பதிலும் முன்னுதாரணமாக விளங்கியுள்ளார் காமராஜர்.

கைநாட்டு!

கைநாட்டு!

காமராஜர் அய்யா முதன் முறையாக முதலமைச்சர் ஆனா காலம் அது. அப்போது முதலமைச்சர் கோட்டாவில் ஆண்டுக்கு 20 மருத்துவ சீட்டு ஒதுக்கப்பட்டிருந்தது. மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புகள் நூறு என்ற எண்ணிக்கையில் காமராஜரின் மேசையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது சீப் செகரட்டரி, இதிலிருந்து நீங்கள் இருபது கோப்புகளை தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு கால அவகாசம் இருக்கிறது. நிதானமாக இதை நீங்கள் படித்துப் பார்த்து தேர்வு செய்யலாம் என கூறினார்.

எந்த அடிப்படையில்?

எந்த அடிப்படையில்?

காமராஜர் அய்யா சற்றும் யோசிக்காமல். இதற்கு ஏன் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என. சரசரவென்று நூறு கோப்புகளில் இருந்து இருபதை எடுத்துக் கொடுத்தார். இதைக் கண்ட சீப் செகரட்டரிக்கு மிகுந்த வியப்பு. "அய்யா, எப்படி இவ்வளவு சீக்கிரம் தேர்வு செய்தீர்கள். எந்த அடிப்படையில் இந்த இருபது கோப்புகளை நீங்கள் எடுத்து தருகிறீர்கள்" என கேள்விக் கேட்டார்.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

இதில் என்ன வியப்பு. நூறு கோப்புகளில் எந்தெந்த கோப்புகளில் பெற்றோர் கையொப்பம் என்ற பகுதியில் கைநாட்டு இருந்ததோ அந்த கோப்புகளை தேர்வு செய்துள்ளேன். ஒரு குடும்பத்தில் சென்ற தலைமுறையில் படிக்காதவர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் இந்த தலைமுறையில் முக்கியமாக படிப்பறிவு பெற வேண்டும். அதற்கே நான் முக்கியத்துவம் அளிக்கிறேன் என காமராஜர் எப்போதும் போல தனது எளிமையான புன்னகையுடன் பதில் கூறினார்.

கடைசி நாட்கள்...

கடைசி நாட்கள்...

இந்திய அரசு தலைவர்கள் முதல் அமெரிக்க அரசியல் தலைவர்கள் வரை பெரும் புகழ் பெற்றிருந்ததால் தான் பெருந்தலைவர் காமராஜர் என போற்றப்பட்டார் காமராஜர்.

நேருவிற்கு பிறகு இந்திரா காந்தியை பிரதமராக தேர்வு செய்ய பரிந்துரை செய்தவர் காமராஜர் என அறியப்படுகிறது. ஆனால், கடைசி நாட்களில் இந்திரா காந்தி மற்றும் காமராஜர் இடையிலேயே மன கசப்பு உண்டானது.

இதனால் தேசிய அளவில் இருந்து, மாநில அளவிற்கு தனது வட்டத்தை சுருக்கிக் கொண்டார் காமராஜர். அப்போது அரசியலமைப்பில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டி வந்தார் காமராஜர்.

கைது நடவடிக்கை

கைது நடவடிக்கை

திடீரென இந்திரா காந்தி தனக்கு எதிராக செயல்கள் நடப்பதை கண்டும், தனது ஆட்சிக்கு பங்கம் ஏற்படும் என்பதை உணர்ந்தும் இந்தியாவில் அவசரநிலையை பிரகடனம் செய்தார். இதை இந்தியாவின் பல தலைவர்கள் எதிர்த்தனர். அந்த நேரத்தில் தேசிய தலைவர்களான ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தார் காமராஜர். காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் இரண்டாம் நாள் இவர்களை எல்லாம் விடுதலை செய்துவிடுவார்கள் என காத்திருந்த சமயத்தில், ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்தது இந்திரா காந்தியின் அரசு. இந்த செய்தியை கேட்ட அன்றே உயிரிழந்தார் காமாராஜர். பல ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவளித்த அவரது உயிர் மதிய உணவு அருந்திய பிறகே பிரிந்தது.

பெருந்தலைவர்!

பெருந்தலைவர்!

காமராஜரின் மறைவின் போது அவரது பையில் கொஞ்சம் பணம் இருந்தது. அதை தவிர அவருக்கு வேறு சொத்து எதுவும் இல்லை.

தமிழகத்தின் சிறந்த முதல்வர். இந்தியாவின் ஆகசிறந்த தலைவராக திகழந்த காமராஜர் தனது கடைசி நாள் வரை வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things To Learn From Karma Veerar Kamarajar!

Things To Learn From Karma Veerar Kamarajar!