ஸ்கூல் படிக்கும் போது ஒரு பொண்ண இம்ப்ரஸ் செய்ய இதெல்லாம் பண்ணிருக்கீங்களா?

Posted By:
Subscribe to Boldsky

துளிர் விடாத செடியை தடவி பார்ப்பது போல, முளைக்காத மீசியை முறுக்கிக் கொண்டு திரியும் காலம் அது. ஒன்சைடு டக்கின் செய்து, காலரை தூக்கிவிட்டு, பிடிக்க தெரியாமல் தம் பிடித்து இருமி கெத்து காண்பிக்கும் வயது.

பெரும்பாலும் அந்த வயதில் ஆசை தான் வருமே தவிர காதல் வராது. ஆனால், அதை எட்டிப்பிடிக்க நாம் செய்யாத லீலைகளே இல்லை.

அப்படி, பள்ளி படிக்கும் போது பள்ளி அல்லது வகுப்பில் படிக்கும் பெண்ணை இம்ப்ரஸ் செய்ய அல்லது அவரது பார்வை தன் மீது திரும்ப இந்த விஷயம் எல்லாம் நீங்க பண்ணிருக்கீங்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபேஷன்!

ஃபேஷன்!

லோ-ஹிப் ஆடைகள் உடுத்துவது, ஹேர் ஸ்டைல் மாற்றுவது, மற்றவர்களில் இருந்து தங்களை ஃபேஷனபல் நபராக காண்பித்துக் கொள்வது போன்றவற்றை செய்வார்கள்.

Image Source

விடை!

விடை!

வகுப்பில் இருக்கும் பெண்களை தன் பக்கம் திரும்ப செய்ய, அன்றாட பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு டக்கு டக்கென்று முதல் ஆளாக பதில் சொல்வார்கள். புத்திசாலியாக இருந்தால் பெண்களிடம் டவுட் கிளியர் செய்வது போல அதிகம் பேசலாம் என கருதுவார்கள்.

Image Source

நானும் ரவுடி தான்!

நானும் ரவுடி தான்!

தன்னை ஒரு பெரிய பலசாலி போல காண்பித்துக் கொள்ள பிளான் செய்து ஆள் செட் செய்து சண்டை போட்டு வீரனாக காண்பித்துக் கொள்வார்கள். அந்த வயதில் பெண்களுக்கும் அப்படி ஒரு வீரனை தான் பிடிக்கும்.

Image Source

சாம்பியன்!

சாம்பியன்!

ஏதேனும் ஒரு போட்டியில் பெஸ்ட் ப்ளேயராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள விரும்புவார்கள். முக்கியமாக கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில். இவை அவர்களை ஹீரோ போல உணர செய்யும்.

Image Source

தல!

தல!

வகுப்பில், ஸ்போர்ட்ஸ் என ஏதேனும் ஒன்றில் தாங்கள் தலைமை பொறுப்பில் இருக்க விரும்புவார்கள். தலைமை பொறுப்பில் இருந்தால், எப்படியும் ஏதேனும் உதவிக்கு தங்களை நாடி வந்தாக தான் வேண்டும் என்ற நிலை வரும். அதை வைத்து அவர்களது ஈர்ப்பை பெற செய்யலாம்.

Image Source

பாதுகாப்பு!

பாதுகாப்பு!

அதே போல அந்த பெண் ஏதாவது பிரச்சனையில் சிக்கினால், முதல் ஆளாக சென்று அவரை காக்க முயல்வார்கள். வகுப்பாசிரியராகவே இருப்பினும், அந்த பெண் மீது குற்றம் இல்லை என வக்காளத்து வாங்குவார்கள்.

Image Source

தோழி!

தோழி!

கவனம் பெற விரும்பும் பெண்ணின் தோழியுடன் நட்பு பாராட்டுவார்கள். அவர்கள் மூலமாக தன்னை நல்லவனாக, சிறந்தவனாக நிலை நிறுத்திக் கொண்டு. இதன் மூலமாக அந்த பெண் தன் மீது கவனம் செலுத்த ஆரம்பிப்பாள் என எண்ணுவார்கள்.

Image Source

பொறாமை!

பொறாமை!

அல்லது முந்தைய பாயிண்ட்டுக்கு நேரெதிராக, அந்த பெண்ணை பொறாமைப்பட செய்வதற்கு வேண்டி, அந்த பெண்ணை தவிர்த்து மற்ற எல்லா பெண்களிடமும் பேசுவார்கள்.

Image Source

லுக்கு!

லுக்கு!

ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, "திரும்பிடு, திரும்பிடு.." என மனதில் உச்சரித்தப்படி அவர்களை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

Image Source

ஒரே நேரத்தில்...

ஒரே நேரத்தில்...

தண்ணீர் குடிக்க, இடைவேளை நேரம் என அந்த பெண் வகுப்பில் இருந்து வெளியே செல்லும் அதே நேரத்தில் வெளியே செல்வார்கள்.

Image Source

அருகே அமர்வது!

அருகே அமர்வது!

எப்போதெல்லாம் அந்த பெண் அருகே உட்கார வாய்ப்பு கிடைக்கிறதோ, அதை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்வார்கள்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things Every Boy Did In School Just To Get Attention From Girls

things boys do to impress any girl, school boys love story, what school boys do to get attention from girls,