For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலநூற்றாண்டுகளாக தமிழர் பண்பாட்டை கடைபிடித்து வரும் மடகாஸ்கர் மக்கள்!

ஜல்லிக்கட்டு போன்றே மடகாஸ்கரில் நடத்தப்படும் வீர விளையாட்டு!

|

உலகில் ஒருவரை போலவே ஏழு பேர் இருப்பார்கள் என்பது நம்பப்படுகிறது. சில சமயங்களில் நாம் வெளியூர் எங்கேனும் போனால், அங்கே நமக்கு தெரிந்தவர் போலவே முக தோற்றம் கொண்ட நபர்களை கண்டு ஆச்சரியம் அடைந்திருப்போம்.

இதே போல, உலகின் ஒருசில பகுதியல் ஒரே மாதிரியான கலாச்சாரங்களும் பின்பற்று வருவதை நாம் அவ்வப்போது வியப்புடன் காண முடியும். அந்த வகையில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போலவே ஆப்ரிக்காவை சேர்ந்த மடகாஸ்கர் தீவில் சவிகா எனும் விளையாட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டு!

பொங்கலுக்கு அடுத்த நாளான மாட்டு போன்களின் போது நாம் காளை அடக்குதல் அல்லது ஏறுதழுவுதல் விளையாட்டில் பங்குபெறுவோம். இதை ஜல்லிக்கட்டு என்ற பெயரில் நாம் நடத்தி வருகிறோம். ஜல்லிக் கட்டு போன்றே சவிகா எனும் விளையாட்டு பல நூற்றாண்டுகளாக மடகாஸ்கரின் சென்ட்ரல் ஹைலாண்டு என்ற பகுதியில் நடத்தி வருகிறார்கள்.

Image Credit : lonelyplanetwp

இரண்டு வகை!

இரண்டு வகை!

சவிகா என்ற ஜல்லிக்கட்டு போன்ற இந்த போட்டியில்... இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று ப்ரோபஷ்னல் மற்றொன்று கல்சுரல் சுவிகா. ஓர் ரிங் இருக்கும் அதற்குள் காளைகள் அவிழ்த்துவிடப்படும். அந்த காளையை ஆண்கள் அடக்க வேண்டும். இது ஏறத்தாழ தமிழ்நாட்டில் நாம் பின்பற்ற வந்த அதே முறையிலான ஜல்லிக்கட்டு முறை தான்.

Image Credit : lonelyplanetwp

வீரம்!

வீரம்!

நாம் எப்படி ஆண்களின் வீரமும், காளைகளின் மீதான பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த ஏறுதழுவுதல் நடத்துகிறோமோ அதேபோல தான் சவிகா என்ற போட்டியையும் ஆண்களின் வீரத்தின் அடையாளமாக காலம், காலமாக நடத்தி வருகிறார்கள் சென்ட்ரல் ஹைலாண்டு பகுதியை சேர்ந்த மக்கள்.

Image Credit : lonelyplanetwp

கிராம மக்கள்!

கிராம மக்கள்!

இந்த போட்டியை காண அக்கம்பக்கத்து கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் கூட்டம், கூட்டமாக வருகிறார்கள். வீரர்களுக்கு அடிபடாமல் இருக்க அந்த ரிங்கின் நிலப்பரப்பில் சேறு மற்றும் மாட்டு சாணம் நிறைத்து குலைக்கப்படுகிறது.

சுற்றி இருக்கும் ஊர் மக்கள் இதை ஆர்வத்துடன் வந்து கண்டுகளித்து செல்கிறார்கள். புதியதாக வரும் வெளியூர் பயணிகளுக்கு இது வினோதமாக இருக்கிறது.

சவிகா விளையாட்டில் பங்குபெறும் பலர் கை, கால் எலும்பு முறிவுடன் வீடு திரும்புகிறார்கள். இதை காண மிகவும் பாவமாக, சோகமாக இருக்கிறது என வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூறுகிறார்கள்.

Image Credit : lonelyplanetwp

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Every Year Jallikattu Kind of Bull Fight Has Been Conducted in Madagascar For Love!

Every Year Jallikattu Kind of Bull Fight Has Been Conducted in Madagascar For Love!
Story first published: Saturday, October 7, 2017, 16:13 [IST]
Desktop Bottom Promotion