இவர ஞாபகம் இருக்கா? - இப்ப இவர் ஒரு லட்சாதிபதி!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய உலகில் இன்டர்நெட் ஒரு சக்தி மிகுந்த கருவியாக மாறியுள்ளது. க்ரவுட் ஃபன்டிங் எனும் முறையில் எத்தனையோ உயிர்கள், முகம் தெரியாத நபர்களால், பெயர் கூட தெரிவிக்காமல் உதவும் நல்ல உள்ளங்களால் காக்கப்படுகின்றன.

மருத்துவம், படிப்பு என இந்த இரண்டுக்கும் உதவி செய்ய பலகோடி நல்ல உள்ளங்கள் காத்துக்கிடகின்றன. ஒரு ஊரில் வெள்ளம், இயற்கை சீற்றத்தினால் பேரழிவு என்றால் முதல் ஆளாக இவர்கள் உதவ முன்வருகின்றனர்.

இன்டர்நெட்டில் சென்ற வருடம் பல படங்கள் வைரலாக பரவின. அதில் நெஞ்சை பாரமாக்கிய படம் டானா மஜ்ஹி எனும் ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த நபருடையது. ஒருவர் உதவியிருந்தால் அன்று அவர் வைரலாகி இருக்கமாட்டார்.

ஆனால், இன்றுவரையும் அவருக்கு பலர் அவருக்கு உதவி வருகிறார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டானா மஜ்ஹி!

டானா மஜ்ஹி!

டானா மஜ்ஹியை அவ்வளவு எளிதால் இந்தியர்களால் மறந்துவிட முடியாது. உலகில் எந்த ஒரு கணவனுக்கும் வந்துவிடக் கூடாது நிலையை கடந்தவர் மஜ்ஹி.

இறந்த மனைவியின் சடலத்தை வண்டி வைத்து எடுத்து வர பணம் இல்லாமல், பல கிலோ மீட்டர் தன் தோளில் சுமந்து எடுத்து வந்தவர். ஒற்றை புகைப்படம் மூலம் இன்டர்நெட்டில் செய்திகளில் மிகவும் வைரல் ஆனார் மஜ்ஹி.

ஓடிஸா!

ஓடிஸா!

மஜ்ஹி ஓடிஸா மாநிலத்தை சேர்ந்தவர். இவரது சொந்த ஊர், காளஹந்தி எனும் பின்தங்கிய கிராமம் ஆகும் . இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் வயது இப்போது 13.

இறந்த தாயை நினைத்து அழுவதா? தந்தை தாயின் உடலை தூக்கி செல்வதை வேடிக்கை பார்க்கும் மக்களை கண்டு அழுவதா? அல்ல தனது இயலாமை நிலையை கண்டு அழுவதா? என அறியா நிலையில் கண்ணீர் சிந்தினார் அன்று அந்த பதின் வயது மகள்.

உதவ யாரும் இல்லை!

உதவ யாரும் இல்லை!

மஜ்ஹியின் மனைவி இறந்த போது யாரும் உதவவில்லை. மருத்துவமனையும் அரசு ஊர்தி தந்து உதவவில்லை. ஆனால், மஜ்ஹிக்கு இந்த செய்தி அறிந்து பஹ்ரைன் பிரதமர் 9 லட்ச ரூபாய்க்கான காசோலை அனுப்பி வைத்தார்.

பஹ்ரைன் எம்பஸி மூலமாக டெல்லியின் பஹ்ரைன் வங்கியில் மஜ்ஹிக்கான பணம் காசோலையாக செலுத்தப்பட்டது.

உதவிய நெஞ்சங்கள்!

உதவிய நெஞ்சங்கள்!

இந்த செய்தி உலகம் முழுக்க வைரலாகவே பரவ உலகம் முழுவதிலும் இருந்து மஜ்ஹிக்கு நிறைய பண உதவி கிடைத்தது. தன் மனைவியின் இறந்த உடலை எடுத்து வர அன்று வாடகை வண்டி ஏற்பாடு செய்ய முடியாத ஏழ்மை நிலையில் இருந்த மஜ்ஹி, இன்று பலரது நல்ல உள்ளத்தினாலும், அவர்கள் செய்த உதவியினாலும் லட்சாதிபதியாக மாறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Odisha tribal Dana Majhi who carried wife’s body Becomes Rich!

Odisha tribal Dana Majhi who carried wife’s body Becomes Rich!
Subscribe Newsletter