கற்பழிச்சா கல்யாணம் பண்ணிக்கலாமா? இன்னும் எத்தன நாளுக்கு இந்த கொடும - My Story #081

Posted By:
Subscribe to Boldsky

நான் ஒரு நகருக்கும், கிராமத்திற்கும் இடைப்பட்ட சிறிய டவுன் பகுதியில் பிறந்த பெண். எங்கள் ஊரிலேயே கான்வண்ட் பள்ளியில் படித்த சில பெண்களில் நானும் ஒருத்தி. எனக்கு அப்போது 16 வயதிருக்கும். தன்னை நண்பனாக ஏற்றுக்கொள்ளும் படி ஒருவன் என்னை அணுகினான். அவன் எங்கள் வீட்டருகில் வசித்து வரும் ஆண் தான். எனக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை பயமாக இருந்தது. நானும் ஏதும் பேசாமல் நகர்ந்துவிட்டேன்.

நான் பதில் பேசாமல் சென்றது அவனின் அகம்பாவத்தை தொட்டுவிட்டது போல. அவன் அன்றில் இருந்து நான் எங்கே சென்றாலும் என்னை பின்தொடர ஆரம்பித்தான். அவனது செயல்களால் வீட்டில் இருந்து ஒரு அடி எடுத்து வைக்கவே அஞ்சினேன். இதுகுறித்து எப்படி எங்கள் வீட்டில் கூறுவது என தெரியவில்லை. அவர்கள் என்னை தான் திட்டுவார்கள்.

அவனுக்கு எப்படி எங்கள் வீட்டு லேண்ட்லைன் எண் கிடைத்தது என தெரியவில்லை. மூன்று மாதங்களுக்கு பிறகு அந்த எண்ணுக்கு தொடர்ந்து கால் செய்ய துவங்கினான். அவனை வந்து பார்க்கும்படி எச்சரித்துக் கொண்டே இருந்தான். அவனை வந்து பார்க்காவிட்டால் எனது தம்பியை ஏதாவது செய்துவிடுவேன் என மிரட்டினான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறு!

தவறு!

ஒரு பக்கம் வீட்டில் கூறினால் எனது படிப்பு பாதிக்கப்படுமோ என்ற அச்சம். அவனை காண்பதை தவிர்க்கலாம் என்றால், எங்கே எனது தம்பியை ஏதாவது செய்துவிடுவானோ என்ற நிலை. நான் அவனது மிரட்டலுக்கு பயப்படாமல் வீட்டில் கூறியிருக்க வேண்டும். அதைவிட்டு அவனுக்கு அஞ்சி அவனை காண சென்றது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு.

அச்சம்

அச்சம்

மிகுந்த அச்சத்துடன் அவனை காண சென்றேன். என்னை மிகவும் வலிமையாக தாக்க துவங்கினான். நான் சுயநினைவு இழந்தேன். நான் மீண்டும் சுய நினைவுக்கு வந்த போது தான் தெரிந்தது அவன் என்னை கற்பழித்துவிட்டான் என்பது. இதையே கூறி என்னை தொடர்ந்து சில மாதங்கள் சீரழித்து வந்தான் அந்த கயவன். நானே என்னை வெறுக்க ஆரம்பித்தேன். இது பற்றி யாரிடமும் கூறும் தைரியம் எனக்கு இல்லை. பேசாமல் தற்கொலை செய்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் என்னுள் அதிகரிக்க ஆரம்பித்தது.

தற்கொலை

தற்கொலை

தற்கொலைக்கும் முயன்றேன். ஆனால், எனது பெற்றோர் என்னை காப்பாற்றிவிட்டனர். அதன் பிறகு தான் எனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர்களிடம் கூறினேன். அவர்கள் என்னை திட்டுவார்கள் என்று எண்ணினேன். ஆனால், நடந்தது வேறு. அவர்கள் எதுவுமே சொல்லவில்லை. எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். அந்த சம்பவத்தில் இருந்து எப்படி வெளிவருவது என உதவினார்கள்.

கல்லூரி

கல்லூரி

கல்லூரி பயிலும் போது என் வகுப்பை சேர்ந்த மாணவன் ஒருவன் என்னை (என்னுள்) அதிக தைரியம் வளர்க்க செய்தான். என்னை நானே முழுக்க முழுக்க வெறுத்து வந்த நிலையில், அவன் என்னை மீண்டும் என்னை நேசிக்க வைத்தான். அவன் என்னை காதலிப்பதாக கூறினான். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், எனக்கு காதலில் எண்ணமும் இல்லை, நாட்டமும் இல்லை. எனது மாஸ்டர் டிகிரி முடித்துவிட்டு பெங்கலூரில் இருந்து ஒரு பெரிய நிறுவனத்தில் பணியமர்ந்தேன்.

நண்பன்

நண்பன்

என்னுடன் நட்பாக நீண்ட நாள் பழகி வந்த அவன், என்னுள் தன்னம்பிக்கை வளர்த்த அவன் திடீரென ஒருநாள் நான் காதலை ஏற்க போவதில்லை என்ற தருணத்தில் என்னைவிட்டு பிரிந்தான். காதல் இல்லை எனிலும், அவன் என் வாழ்வில் முக்கிய பங்கு கொண்டிருந்த நண்பன். இதைவிட பெரிய சோதனைகளை கடந்து வந்ததால், இது எனக்கு பெரிய வலியை கொடுத்துவிடவில்லை. ஆயினும் அவனது பிரிவு என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

காதல்

காதல்

காதலே வேண்டாம் என்றிருந்த என் வாழ்வில் காதல் பூத்தது. நான் அவனை எனது அலுவலகம் அருகே சென்றேன். நாங்கள் இருவரும் ஒரே டெக் பார்க்கில் தான் வேலை செய்து வந்தோம். அவன் மிகவும் நேர்மையானவன், ஆண்மை என்பது உடலில் இல்லை குணத்தில் இருக்கிறது என்பதை நிரூபணம் செய்தவன். அவன் மீது எந்த காரணமும் இன்றி நான் காதலில் விழுந்தேன். அவனுடன் என் வாழ்க்கை இணைந்தால், எனது மீதி வாழ்க்கை நிச்சயம் இன்பமயமாக அமையும் என கருதினேன்.

மீண்டும் அவன்...

மீண்டும் அவன்...

ஆனால், என் வாழ்க்கையில் நிம்மதி என்பது தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருந்தது போல. என் வாழ்க்கையை சீரழித்த அந்த கயவன் மீண்டும் என் வாழ்வில் நுழைந்தான். அவனது வீட்டில் இருந்து என்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்கள். எனது பெற்றோர் இந்த செய்தியை கேட்டு மகிழ்ந்தனர்.

மகிழ்ச்சி?!

மகிழ்ச்சி?!

ஆனால், என்ன செய்ய... அவன் என்னை கற்பழித்தவன் என்றே ஒரே காரணத்தால் நான் அவனை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளானேன். நல்லது நடக்கும் என்ற எந்த நம்பிக்கையும் இன்றி எனக்கும் அவனுக்கும் திருமணம் நடந்தது. ஆனால், என் உடலை மட்டுமே அவன் சொந்தம் கொண்டாட முடியும். நான் கூறாத காதலுக்கு உரியவனிடம் தான் எனது மனம் சிறைப்பட்டு கிடைக்கிறது.

மகிழ்ச்சி என்பதும் ஒரு வரம் தான் போல. அது அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story: He Raped Me And Now I'm Forced To Marry Him!

My Story: He Raped Me And Now I'm Forced To Marry Him!
Story first published: Saturday, November 25, 2017, 18:21 [IST]