For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த காலத்து பிள்ளைங்களுக்கு அவ்வை சொன்ன அறிவுரை என்ன தெரியுமா?

நல்வாழ்வின் அரசன், அவ்வையின் கொன்றைவேந்தன். நூலைப்பற்றிய் ஒரு அறிமுகம் இந்த க்ட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Gnaana
|

அவ்வையார், சங்க காலத் தமிழ் இலக்கியத்தின் புகழ்மிக்க பெண் புலவர், மனிதர்கள் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்பதை, எளிய வகையில் பல நல்ல நெறிகளை உணர்த்திப் பாடுவது போல பல நூல்களை இயற்றி இருக்கிறார், அவை பெரும்பாலும் சிறுவர்களுக்கு சொல்லும் வண்ணம் அமைந்திருந்தாலும், அவற்றையெல்லாம் ஏற்று நடந்தால், சிறியவர் பெரியவர் என்ற பேதமில்லாமல் அனைவருக்கும் நல்வாழ்வு அமையும் என்பதுதான், அந்த நூல்களின் சிறப்பு.
அனைவருக்கும் தெரிந்த ஆத்திச்சூடி இயற்றிய அவ்வையார் எழுதிய நூல்களில் முக்கியமான நூலாக விளங்குவது, கொன்றை வேந்தன்.

எப்படி நடந்து கொண்டால், உலகில் நலமுடன் வாழலாம் எனும் நற்கருத்துக்களை கொண்ட நூல், கொன்றை வேந்தன். அக்காலங்களில் எல்லாம், நூல்களின் முதலில் கடவுள் வாழ்த்துப்பாடலில் பொதுவாக விநாயகரை வணங்கும் பாடல்களே, இடம்பெற்றிருக்கும், அந்த வகையில் கொன்றை வேந்தன் நூலில், தெய்வப்புலவர் அவ்வை,

"கொன்றைவேந்தன் செல்வன் அடியை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே"

என்ற இறைவணக்கப் பாடலின் முதல் அடியில் உள்ள சிவபெருமானைக் குறிக்கும் கொன்றைவேந்தன் எனும் முதல் சொல்லே, இந்த நூலின் பெயராக விளங்குகிறது.
இந்த நூல் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்ல அவ்வை இயற்றியது, இது நமக்கு இல்லை என்று சொல்பவர்கள், ஒருமுறை இந்த நூலை வாசித்தால், நமது அறியாமை ஒவ்வொன்றாக வெளிப்படும்.

kondari vendan- A literature guideline for children

திருக்குறள், எப்படி வாழ்ந்தால் மனிதன் நலம் பெறலாம் என்பதை, இரண்டே வரிகளில் நறுக்கென உரைத்தது என்றால்,
அதே திருக்குறளைப் போல, மனிதர்களின் வாழ்க்கைக் கடமைகளை, அவர்கள் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்க நெறிகளை, ஒரே வரியில், சுருங்கச்சொன்ன நூல்தான், கொன்றைவேந்தன்.

கொன்றைவேந்தனில் திருக்குறளைப் போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் இல்லை, நூற்றுக்கும் குறைவான பாடல்களே, ஆயினும் ஒவ்வொன்றும் மணியான பொருளை உள்ளடக்கியவை.

கொன்றைவேந்தனின் பாடல்கள் ஒரு வரியில் இருந்தாலும், மிக நுண்ணிய பொருள் கொண்ட அந்த அறிவுரைகளை எல்லோரும், எக்காலத்திலும் ஏற்று நடக்க முடியும், நடந்து நல்வழியில் வாழ்ந்து, மற்றவருக்கும் வழிகாட்டியாகத் திகழலாம்.

எல்லா மூதுரைகளும், சொல்லும் முதல் அறிவுரை, பெற்றோரை மதித்து நடப்பது மற்றும் கல்வி. இக்காலத்தில் அவசியம் தேவைப்படும் ஒரு முக்கியமான விசயம்தான் பெற்றோரை மதிப்பது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

kondari vendan- A literature guideline for children

kondari vendan- A literature guideline for children
Desktop Bottom Promotion