நீங்க ஹோட்டல்ல யூஸ் பண்ண பாதி மீத சோப்பை என்ன பண்றாங்கன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

வெளியூர் சென்றால் ஹோட்டல்களில் தங்குவது சிலருக்கு அலாதி பிரியம் அளிக்கும். ஒரு புதிய உணர்ச்சி எழும், புதிய இடம், நம்மளை உபசரிக்க சிலர் , எப்படியும் நாம் சுற்றிபார்க்க தான் சென்றிருப்போம். ஆகையால், மனதில் ஒரு பட்டாம்பூச்சி பறந்துக் கொண்டே இருக்கும்.

வெளியே சொல்ல முடியாத சில விஷயங்களும் நாம் செய்ய தவற மாட்டோம். முக்கியமாக பாத்ரூம் செயல்கள். ஆம்! எப்படியும் புதிய பிரஷ், சோப்பு, ஃபேஷ் வாஷ் க்ரீம், ஷாம்பூ எல்லாம் அவர்கள் வைத்திருப்பார்கள். தினமும் மாற்றி, மாற்றி புதியதை வைப்பார்கள்.

பலர் பாதி பயன்படுத்திய அவற்றை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். சிலர் "நாம இதுக்கும் சேர்த்து தானே காசு தரோம்..." என அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டு வந்துவிடுவார்கள்.

உண்மையில், நாம் பாதி பயன்படுத்திய மீத சோப்பு, க்ரீம் எல்லாம் அவர்கள் என்ன செய்கிறார்கள் என உங்களுக்கு தெரியமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமெரிக்காவில் மட்டும்...!

அமெரிக்காவில் மட்டும்...!

அமெரிக்காவில் மட்டுமே 46 லட்சம் ஹோட்டல் அறைகள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு ரூமிலும் பாதி சோப்பு என்று கணக்கு போட்டு பாருங்கள். எவ்வளவு சோப்பு வீணாகின்றன? சோப்பு மட்டுமா? ஷாம்பூ, ஃபேஷ் வாஷ் க்ரீம் என அனைத்தும் தான் வீண் ஆகின்றன.

ஆனால், நீங்கள் நினைப்பது அங்கே நடப்பது இல்லை.

கிளீன் தி வேர்ல்ட்!

கிளீன் தி வேர்ல்ட்!

குளோபல் சோப்பு பிராஜக்ட் உடன் இணைந்து கிளீன் தி வேர்ல்ட் எனும் அமைப்பு, அந்த பாதி மீத சோப்பு, க்ரீம்களை ரீசைக்கிள் செய்து, அதை வளரும் உலக நாடுகளில், பின்தங்கிய நாடுகளில் சுகாதார வசதிகள் அல்லது இயலாதோருக்கு புதியதாக கொடுத்து உதவுகிறார்கள்.

சுகாதாரம்!

சுகாதாரம்!

உங்களுக்கு தெரியுமா? உயிர்க்கொல்லி வைரஸ்கள் மற்றும் விபத்துகள், இயற்கை சீற்றங்கள் போன்ற காரணத்தால் உயிரிழக்கும் அதே எண்ணிக்கையில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத ஒரே காரணத்தினால் பலர் இறக்கின்றனர்.

முக்கால் அமெரிக்க டாலர்!

முக்கால் அமெரிக்க டாலர்!

ஒரு ஹோட்டல் அறையில் வீணாகும் பாதி பொருட்களை மீண்டும் ரீசைக்கிள் செய்ய முக்கால் அமெரிக்க டாலர் செலவாகிறது. அதாவது 0.75 டாலர். இதை சுத்தம் செய்து, அதை பியூரிட்டி சரிபார்த்து சுகாதரா பொருட்கள் வாங்க முடியாத நிலையில் இருக்கும் மக்களுக்கு இந்த அமைப்புகள் கொடுத்து உதவுகிறார்கள்.

மற்றும் சிலர்...

மற்றும் சிலர்...

இந்த அமைப்பு மட்டுமின்றி... பல ஹோட்டல்களில் தங்கள் அறைகளில் மீதமாகும், வீணாய் போகும் பொருட்கள் சுகாதார தரம் பிரித்து வீடுகள் இல்லாதவர்கள், ஏழை மக்களுக்கு அளித்து உதவுகிறார்கள்.

இது போன்ற செயல்களில் ஆங்காங்கே சிலர் செய்துக் கொண்டிருந்தாலும். அனைவரும் செய்து வந்தால் பெரும் மாற்றமாகவும், உதவியாகவும் இருக்கும்.

இதில் இருந்து நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது. இனிமேல், அநாவசியமாக நம் வீட்டில் பொருட்களை வீண் செய்யக் கூடாது என்பதே ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ever Wonder What Happens to Half-Used Hotel Soap?

Ever Wonder What Happens to Half-Used Hotel Soap?
Subscribe Newsletter