குற்றப் பரம்பரைச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட இனங்களின் ஓலக்குரல்!

Posted By:
Subscribe to Boldsky

தீரன் படத்திற்கு பிறகு எத்தனை பேருக்கு பாவரியாஸ் பற்றியும் குற்றப் பரம்பரைச் சட்டம் குறித்து தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால், தீரம் படத்தைப் பார்த்தப் பிறகு சினிமா ரசிகர்கள், சினிமா விமர்சனகர்கள் என பலரும் தேடித் தேடித் படிக்கும் ஆய்வுப் பொருளாக மாறியுள்ளது குற்றப் பரம்பரைச் சட்டமும், அதனால் படுகுழியில் தள்ளப்பட்ட இனங்களும்.

முக்கியமாக இத்திரைப்படத்தின் (குற்றவாளிகளாக காண்பிக்கப்பட்ட) மூலமாக அதிகமாக அறியப்பட்ட இனமான பாவரியாஸ் பற்றி பலரும் அறிந்துக் கொள்ள மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், இந்த குற்றப் பரம்பரைச் சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் பாவரியாஸ் மட்டுமல்ல. நம் தமிழ் மாநிலத்தை சேர்ந்த படையாச்சி, கள்ளர், மறவர் என பல கூட்டங்களை சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த கூட்டங்களில் இருந்த அனைவரும் கெட்டவர்கள் அல்ல. பகுதி மக்களின் செயலால் ஒட்டுமொத்த இனத்தையும் கூண்டோடு கூண்டாக முடக்கியது தான் இந்த குற்றப் பரம்பரைச் சட்டம். இந்த சட்டத்தின் வரலாறு என்ன? இதனால் இந்தியா முழுக்க பாதிக்கப்பட்டவர்கள் யார், யார்? எதற்காக இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டது? பின்னாளில் இந்த சட்டத்தை ரத்து செய்ய என்னென்ன போராட்டங்கள் எல்லாம் இந்திய திருநாட்டில் நடந்தது என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வடக்கு பகுதிகள்...

வடக்கு பகுதிகள்...

1871ல் இருந்து இந்தியாவில் பல்வேறு காலக்கட்டங்களில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக ஆங்கிலேய அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டம் தான் இந்த குற்றப் பரம்பரைச் சட்டம். குறிப்பாக வட இந்தியாவை சேர்ந்த பல சமூகத்தினரை குறிவைத்து இந்த சட்டம் இயற்றப்பட்டது என கூறப்படுகிறது.

Image Source:wikipedia

சென்னையில்...

சென்னையில்...

பிறகு 1876ல் வங்காள தேச பகுதியிலும் இந்த சட்டம் அமலானது. 1911ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் சென்னை மாகாணத்திலும் இந்த சட்டம் அமல்ப்படுத்தப்பட்டது. குற்றப் பரம்பரைச் சட்டம் இயற்றப்பட்ட நாளில் இருந்து பல திருத்தங்களுக்கு உள்ளானது. கடைசியாக 1924ம் ஆண்டுடன் குற்றப் பரம்பரைச் சட்டம் ஆறாவது திருத்தத்துடன் இந்தியா முழுவதும் அமலானது.

Image Source:commons.wikimedia

திருடர்கள்!

திருடர்கள்!

இந்தியாவில் குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்தவர்களை, இவர்கள் திருட்டை மட்டமே தொழிலாக கொண்டு வாழ்ந்து வருபவர்கள் என கூறி, இந்தியாவின் ஆளுநர் அதிகாரத்தின் கீழ் 1871 அக்டோபர் மாதம் 12ம் தேதி இந்த குற்றப் பரம்பரைச் சட்டம் இயற்றப்பட்டது.

Image Source:commons.wikimedia

கைது!

கைது!

இந்த சட்டத்திற்கு பிறகு, இதன் கீழ் வரையறுக்கப்பட்ட பல சமூகத்தை சேர்ந்த மக்களை கொத்துக் கொத்தாக கைது செய்து, பிணையில் வெளிவர முடியாத அளவில் வழக்கு தொடர்ந்து தண்டனை அளித்து சிறையில் அடைத்து ஆங்கிலேய அரசாங்கம்.

Image Source:commons.wikimedia

கையொப்பம்!

கையொப்பம்!

இதன் படி, குறிப்பிட்ட அந்த சமூகத்தை சேர்ந்த கூட்டங்களில் வாழும் ஆண்களும், குழந்தைகளும், வாரம் ஒருமுறை அருகே இருக்கும் காவல் நிலையம் சென்று தாங்கள் ஊரில் தான் இருக்கிறோம் என தங்கள் இருப்பை நிரூபிக்க கையொப்பம் இட வேண்டும் என்ற சட்டமும் இருந்தது. ஒருவாரம் கையொப்பம் இட தவறினாலும் போலீஸ் வீடு தேடி வந்த அடித்து இழுத்து செல்லும்.

Image Source:maxpixel

ஒருகோடி பேர்!

ஒருகோடி பேர்!

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, இந்த சட்டத்தின் கீழ், 127 வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த ஒருகோடியே முப்பது இலட்சம் பேர் இந்த குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தகவல் அறியப்பட்டுள்ளது. மேலும், யார் ஒருவரை கைது செய்ய வேண்டும் அல்லது தேடுதல் செய்ய வேண்டும் எனில் பிடியாணை வேண்டும். ஆனால், இந்த குற்றப் பரம்பரை பட்டியலின் கீழ் இருக்கும் சமூகத்தினரை கைது செய்யவோ, தேடித் பிடிக்கவோ பிடியாணை வேண்டும் என்ற அவசியம் இல்லை என சட்டம் இயற்றப்பட்டிருந்தது. இது இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் பின்பற்றி வரப்பட்டது.

1949!

1949!

குற்றப் பரம்பரைச் சட்டத்தின் காரணமாக பல சமூகங்களை சேர்ந்த மக்கள், ஊருக்குள் நிம்மதியான வாழ்க்கை வாழ இயலாமல் கடுமையான தாக்குதலுக்கும், முடக்குதலுக்கும் ஆளானார்கள். இதன் காரணமாக இந்த சட்டத்தை 1949ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய அரசு தள்ளுபடி செய்தது. மேலும், குற்றப் பரம்பரை என்ற பெயரை குற்ற மரபு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என மாற்றியமைத்தது.

Image Source:maxpixel

சீர்மரபினர்!

சீர்மரபினர்!

பிறகு இவர்களை சீர்மரபினர் என அழைக்கும் வழக்கம் துவங்கியது. பெயர் மாற்றப்பட்டிருந்த போதிலும், ஆங்கில அரசால் பிணையில் வெளிவர முடியாத வகையில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் விடுதலை ஆகாமல் இருந்தனர். பிறகு, 1961ம் ஆண்டு சிறையில் அடைப்பட்டிருந்த அனைவருக்கும் இந்திய அரசு விடுதலை அளித்து உத்தரவிட்டது.

Image Source:commons.wikimedia

இன்றும்...

இன்றும்...

விடுவிக்கப்பட்ட போதிலும் இந்த சமூகத்தை சேர்ந்த மக்களை போலீசார் கண்காணித்துக் கொண்டே இருந்தனர். இவர்களில் பலரும் நாடோடிகளாகவும், பழங்குடியினராக காட்டிலும் தான் வசித்து வந்தனர். இன்று நாடோடிகள் மற்றும் பழங்குடியினர் என கூறப்படும் 313 சமூகங்களில் 198 சமூகத்தை சேர்ந்தவர்கள் குற்றப் பரம்பரை பிரிவில் இருந்து சீர் மரபினர் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

Image Source:maxpixel

விமுக்த ஜாதி!

விமுக்த ஜாதி!

அடையாளங்கள் மாறிய பிறகும் கூட இன்னும் இவர்களை வட இந்திய பகுதிகளில் விமுக்த ஜாதி (Denotified tribes of India) என்று அழைத்து வருகிறார்கள். ஏறத்தாழ இந்த குற்றப்பரம்பரைச் சட்டத்தினால் ஆறுகோடி பேர்வரை பாதிக்கப்பட்டிருந்தனர் என கூறப்படுகிறது. இன்றளவும் கூட இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் பல சமூகத்தை சேர்ந்த மக்கள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தீரன் படத்தில் காண்பித்தது போல, இன்னும் வெகு சில சமூகத்தை சேர்ந்த சிறு அளவிலான கூட்டங்கள் வேறு வழியின்று திருட்டை தொழிலாக செய்து வருகிறார்கள் என்பத வருந்தத்தக்கது.

Image Source:pxhere

மாநில வாரியான பட்டியல்

மாநில வாரியான பட்டியல்

குற்றச் பரம்பரைச் சட்டத்தின் கீழ் பட்டியலில் சேர்க்கப்பட்ட மாநில வாரியான சமூகங்கள்...

வட இந்தியா:

பதக் - ராஜஸ்தான்

பக்ஹிர் - ராஜஸ்தான்

பலோச் - ராஜஸ்தான்

கஞ்சர் - ராஜஸ்தான்

மீனாக்கள் -ராஜஸ்தான்

மக்தம் - ராஜஸ்தான், பஞ்சாப்

சன்சி - ராஜஸ்தான், பஞ்சாப்

பஞ்சரா - ராஜஸ்தான், பஞ்சாப்

பவோரி - ராஜஸ்தான், பஞ்சாப்

பவரியா - ராஜஸ்தான், பஞ்சாப்

பாவரியாஸ் - ராஜஸ்தான், பஞ்சாப்

சாரா - சாராநகர், குஜராத்

வைகரி - குஜராத்

பஸ் பர்தி - மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம்

நட் - பீகார்

மேற்கு வங்காளம்:

திகரு - மேற்கு வங்காளம்

லோதா - மேற்கு வங்காளம்

சபர் - மேற்கு வங்காளம்

தேகரோ - பிர்பும், மேற்கு வங்காளம்

தென்னிந்தியா:

கோரசாஸ் - தமிழ் நாடு

முத்தரையர், வலையர் - தமிழ்நாடு

மறவர் - தமிழ்நாடு

குறவர் - தமிழ் நாடு, கேரளா

கள்ளர், பிரமலைக்கள்ளர் - தமிழ்நாடு

படையாச்சி - தமிழ்நாடு

எருகளா - ஆந்திரா பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா

லம்பாடி - ஆந்திர பிரதேசம்

பாகிஸ்த்தான்

ஹர்ஸ் - பாகிஸ்தான்

Image Source:wikipedia

தமிழகத்தில்...

தமிழகத்தில்...

தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், பிரமலை கள்ளர், வலையர் என 89 சமூகங்கள் குற்றப்பரம்பரைச் சட்டப்படி இருந்தன. இதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டு குறவர், சி.கே. குறவர் போன்ற சமூகத்தை சேர்ந்தவர்களை குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் இணைத்திருந்தனர்.

Image Source:commons.wikimedia

கைரேகைச் சட்டம்!

கைரேகைச் சட்டம்!

குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டவர்களில் 16 - 60 வயது பிரிவுடையவர்கள் காவல் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு நாளும் காவல் நிலையம் சேர்ந்து கைரேகை வைத்து வரவேண்டும். இதில், விவசாய நிலம் வைத்திருந்தவர்கள், நிலவரி கட்டி வந்தவர்கள், நிரந்தரமான வேறு தொழில் செய்து வந்தவர்கள், அலுவலக வேலையில் இருந்தவர்கள் என பலரை இந்த கைரேகைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரவில்லை.

ராத்திரிச் சீட்டு!

ராத்திரிச் சீட்டு!

இந்த பிரிவுக்கு கீழ் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால். ராத்திரி சீட்டு பெற்று தான் செல்ல வேண்டும். அதில், வாகன எண், பெயர், குற்றப்பதிவு எண், குழு எண், வெளியே போவதற்கான காரணம் என்ன என்று முழு விவரங்கள் எழுதி கொடுக்க வேண்டும்.

இந்த சீட்டு மூன்று பிரதிகள் கொடுக்கப்படும். இதில் ஒன்றை உள்ளூர் காவல் நிலையத்திலும், இரண்டாவதை அந்த நபர் செல்லும் ஊரில் இருக்கும் காவல் நிலையத்திலும் தர வேண்டும். மற்றும் மூன்றாவதை அந்த நபரிடமும் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை பயணத்தின் நடுவே வேறு ஊர்களில் தங்க நேர்ந்தால், அந்த ஊரின் தலைவரிடம் கையொப்பம் பெற வேண்டும்.

Image Source:maxpixel

போராட்டங்கள்!

போராட்டங்கள்!

இந்த சட்டத்தை எதிர்த்து, பெருங்காம நல்லூரில் 1920ல் முதல் போராட்டம் வெடித்தது. அப்போது ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் மாயாக்காள் எனும் பெண் உட்பட பிரமலைக் கள்ளர் பிரிவை சேர்ந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிறகு அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், நேரு, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு சுப்பராவ், ஹரிஜன சேவா சங்கத் தலைவர் கி.சி. தக்கா, ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, என பல தலைவர்கள் இந்த சட்டத்தை திரும்பிப் பெற கூறி வலியுறுத்தினர்.

சுப்பாராவ்!

சுப்பாராவ்!

இதன் விளைவாக 1947ல் காவல் துறை அமைச்சராக இருந்த பி. சுப்பாராவ் என்பவர், இந்த சட்டத்தை திரும்ப பெறுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இதற்கு பேகம் சுல்தான் அம்ருதீன் "நாகரீகமான நாட்டில் உள்ள சட்டப்புத்தகத்தில் எழுதப்பட்ட ஒரு கரும் புள்ளி தான் இந்தச் சட்டம்" என கூறியிருந்தார். பிறகு, சுதந்திர இந்தியாவில் தானாக இந்த குற்றப்பரம்பரைச் சட்டம் காலாவதியானது என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Some Communities Affected By Criminal Tribes Act?

How Some Communities Affected By Criminal Tribes Act?