பாண்டவர்களுடனான திரௌபதியின் தாம்பத்திய வாழ்க்கையும் நாரதரின் குறுக்கீடும்!

Posted By:
Subscribe to Boldsky

மகாபாரதத்தின் முக்கியமான கதாபத்திரங்களில் ஒருவர் திரௌபதி. இவரது திருமண சுயம்வர நிகழ்ச்சிக்கு பாண்டவர்கள் உட்பட பல நாட்டு இளவரசர்கள் பங்கெடுத்தனர்.

அதில், அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் மீனின் கண்களை, தலையை குனிந்தபடி, கீழே வைத்திருக்கும் நீரை கண்டு யார் ஒருவர் சரியாக குறிவைத்து அம்பு எய்கிறார்களோ அவரே திரௌபதயின் கணவர் என்ற போட்டி நடந்தது.

இப்போட்டியில் வென்ற அர்ஜுனன், திரௌபதியை அழைத்து கொண்டு வீடு திரும்பினான். அங்கே வீட்டில் வேலை செய்துக் கொண்டிருந்த தாய், பாண்டவர்களின் வருகையை உணர்ந்து, நீங்கள் கொண்டுவந்ததை, ஐவரும் சமமாக பகிர்ந்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டார்.

திரும்பிய பிறகு தான், தனது மகன்களாகிய பாண்டாவர்கள் திரௌபதியுடன் வந்தது அறியவந்து அதிர்ந்து போனார். தாயின் சொல்லிற்கு இணங்கி, பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை மனைவியாக ஏற்றுக் கொண்டனர் என்பது மகாபாரத வரலாறு கூறும் தகவல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாரதர் கதை!

நாரதர் கதை!

இவர்களது இல்லற வாழ்க்கை எப்படி அமைந்தது என்பது குறித்து பல தகவல்கள் அறியப்படுகின்றன. அதில் நாரதரின் அறிவுரைப்படி திரௌபதியுடனான பாண்டவர்களின் இல்லற வாழ்க்கை எப்படி அமைந்தது என்ற கதையை பற்றி தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்.

திருமனத்திற்கு பிறகு!

திருமனத்திற்கு பிறகு!

குந்தியின் சொல், அவரை மட்டுமின்றி, பாண்டவர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், அந்த வாக்கினால் மிகுதியாக பாதிக்கப்பட்டவர் திரௌபதி தான்.

சிலர், திரௌபதியுடனான பாண்டவர்களின் முதலிரவு யுதிஷ்டிரன், பீமா, அர்ஜுனன், நகுலன் மற்றும் சகாதேவன் என ஒருவர், பின் ஒருவர் என ஐவருடனும் நடந்தது என எண்ணுகிறார்கள்.

ஆனால், இங்கு தான் நாரதரின் பங்கு உள்ளே வந்துள்ளது.

கதை!

கதை!

பாண்டவர்களின் இந்த திருமண பந்தத்தை அறிந்து வந்த நாரத முனி முன்னாடி வாழ்ந்த சந்த மற்றும் உப்சந்த் என்ற கடவுளை வெற்றிக் கண்ட சகோதரர்களின் கதையை கூறினார். அவர்கள் மத்தியில் வந்த ஒரு பெண்ணால் அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றுக் கொண்டனர்.

இது, உங்கள் மத்தியிலும் ஏற்பட்டு விட கூடாது என நான் கருதுகிறேன் என ஒரு விதியை பரிந்துரை செய்தார்.

நாரதரின் பரிந்துரை!

நாரதரின் பரிந்துரை!

பாண்டவர்கள் ஐவருடனும் திரௌபதி வாழ்க்கை நடத்த தான் போகிறார். ஆயினும், இதில் ஐவரும் ஒரு விதியை பின்பற்ற வேண்டும் என கூறினார் நாரதர்.

ஒருவர் திரௌபதியுடன் தனிமையில் நேரம் செலவழிக்கும் போது, வேறு எந்த சகோதரரும் அங்கு செல்லக் கூடாது என்பது தான் அந்த விதி. அதை மீறினால், அவர் வனவாசம் செல்ல வேண்டும் என பரிந்துரைத்தார்.

அர்ஜுனன்!

அர்ஜுனன்!

ஒருநாள் திரௌபதியுடன் யுதிஷ்டிரன் தனிமையில் இருக்கும் போது அர்ஜுனன் குறிக்கிடும் சூழல் அமைந்தது. தனது கால்நடைகளை கொள்ளையர்கள் திருடி சென்றுவிட்டனர், அதை மீட்டுக் கொடுக்க வேண்டும் என அர்ஜுனனிடம் உதவி கேட்டு ஒருவர் வந்தார்.

யுதிஷ்டிரன் திரௌபதியுடன் இருப்பதை அறிந்தும், அந்நபருக்கு உதவ வேண்டி, அந்த அறையில் இருக்கும் தனது போர்கருவிகள் எடுக்க அர்ஜுனன் முற்பட்டான். இதற்காக தண்டனையும் அனுபவித்தார் அர்ஜுனன்.

திரௌபதியின் உறவு!

திரௌபதியின் உறவு!

ஒருமுறை சத்தியபாமா திரௌபதியிடம், "உண்மையிலேயே நீ ஐவருடன் மகிழ்ச்சியாக தான் இருக்கிறாயா?" என கேள்விக் கேட்டார். அதற்கு திரௌபதி,"எனது கோபம், இச்சை மற்றும் அகந்தையை தவிர்த்து, நான் தூய்மையுடன் அவர்களுக்கு பணிவிடை செய்கிறேன். அவர்கள் முன்னிலையில் நான் குளிப்பதற்கு கூட செல்வதில்லை" என பதிலளித்தார்.

வலிமையின் மறுவடிவம்!

வலிமையின் மறுவடிவம்!

பாண்டவர்கள் ஐவரை திருமணம் செய்திருந்தாலும், வரலாற்றில் திரௌபதி தன்னை ஒரு நற்விளைவு ஏற்படுத்தும் பெண்ணாக தான் நிலைப்படுத்திக் கொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Draupadi Managed Her Intimate Life With Pandavas?

How Draupadi Managed Her Intimate Life With Pandavas?