வேறு வழியின்று மகளை சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் தந்தை! #Prostitution #Bangladesh

Posted By:
Subscribe to Boldsky

உலக நாடுகளில் பெண்களை அதிகம் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் அல்லது பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் நாடு வங்காள தேசம் என கூறலாம்.

அங்கிருக்கும் இளம் பெண்கள், சிறுமிகளை வயது வித்தியாசம் பாராமல் கடத்தி பாலியல் தொழில் தள்ளும் ப்ரோக்கர்கள் (அரக்கர்கள்) அதிகம். இதில் இருந்து தங்கள் மகள்களை காக்க பலர் போராடி வருகிறார்கள்.

Poor Father Chains His Own 10 YO Daughter to Save Her From Prostitution!

Cover Image Credit: GMB Akash

ஓரிரு நாட்களுக்கு முன்னர் வங்காள தேசத்தை சேர்ந்த ஆகாஷ் எனும் புகைப்பட கலைஞர், காலில் சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு சிறுமியின் படம் பகிர்ந்து அதனுடன் ஒரு சோகமான பதிவையும் கூறியிருந்தார்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செருப்பு தைக்கும் தொழிலாளி!

செருப்பு தைக்கும் தொழிலாளி!

சாண்டா எனும் அந்த பெண்ணின் தந்தை செருப்பு தைக்கும் தொழிலாளி. இப்பெண்ணி தாய் இறந்துவிட்டார். அம்மா இறந்ததில் இருந்து அவ்வப்போது தந்தையிடம் இருந்து தப்பித்து ஓட முற்சிப்பார் சாண்டா. சாண்டா பாலியல் தொழிலாளிகள் இருக்கும் இடத்தில் காணப்படுவதை அறிந்து அவர் சென்று மீட்டு வருவார்.

போதை அடிமை!

போதை அடிமை!

சாண்டா, பத்து வயது சிறுமி. இந்த சிறு வயதில் அவர் போதைக்கு அடிமையாகி இருக்கிறார். இதில் இருந்து எப்படி தனது மகளை வெளிக் கொண்டு வருவது என அறியாமல் தவித்து வருகிறார் உதவியற்ற நாற்பது வயது செருப்பு தைக்கும் தொழில் செய்து வரும் தந்தை.

அடிக்கடி மகள் ஓடிவிடுவதும், இவர் தேடி கண்டுபிடித்து வருவதுமே தொடர் கதையாக இருந்தது. இதில் மனம் வருந்தி போன தந்தை, சாண்டாவின் காலில் சங்கிலி ஒன்று கட்டி, வீட்டில் கட்டிவைத்து விட்டார்.

பல இரவுகள்!

பல இரவுகள்!

தாய் இறந்த பிறகு சாண்டா பல இரவுகளில் காணாமல் போயிருக்கிறார். பிறகு இரவு முழுக்க தன் மகளை தேடி பாலியல் தொழில் செய்யும் பெண்கள் இருக்கும் இடத்தில் கண்டு பிடித்துள்ளார் கமல் ஹாசின் (சாண்டாவின் தந்தை).

முதல் முறை பத்து நாட்கள் தொலைந்து போனார் சாண்டா. பிறகு ஊரில் பல இடங்களில் தேடி கடைசியாக விலைமாது இடத்தில் தான் கண்டு பிடித்தார்.

மோப்பம்!

மோப்பம்!

அங்கிருந்து சாண்டாவை மீட்டு வந்த கமல் ஹாசினுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு நாள் சாண்டா கமல் ஷூ தைக்க பயன்படுத்தும் பையில் இருக்கும் கம் (Gum) வாசத்தை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தார் சாண்டா.

அப்போது தான் தனது மகள் போதைக்கு அடிமை ஆகியிருப்பது கமல் அறிந்தார். கடந்த எட்டு மாதங்களில் சாண்டா இது போல பல முறை காணாமல் போயிருக்கிறார்.

எப்போதெல்லாம் சங்கிலியை அவிழ்த்து விடுகிறாறோ, அப்போதெல்லாம் சாண்டா காணாமல் போய்விடுகிறார்.

மரண வலி!

இப்படி என் மகளை சங்கிலியில் கட்டி போட்டு வைத்திருப்பது எனக்கு மரண வலியை அளிக்கிறது. ஆனால், அவர் செல்லும் பாதை தவறாக இருப்பதால், மனதை கல்லாக்கி கொண்டு செய்து வருகிறேன் என்கிறார் ஏழை தந்தை கமல் ஹாசின்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Poor Father Chains His Own 10 YO Daughter to Save Her From Prostitution!

Poor Father Chains His Own 10 YO Daughter to Save Her From Prostitution!
Subscribe Newsletter