For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண் தெய்வங்களுக்கு அர்ச்சிக்க பயன்படும் மலர்கள் எவை எனத் தெரியுமா ?

பெண் தெய்வங்களுக்கு அர்ச்சிக்க பயன்படும் பூக்களைப் பற்றிய தொகுப்புதான் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

|

மலர்கள் என்பவை நமது இந்துக்களின் வழிபாட்டில் மிகவும் முக்கியமான இடம் பெறக் கூடியது. இந்த மலர்களை தெய்வங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கும் போது நமக்குள்ளே இருக்கும் தீவிர பக்தியையும் அவர்கள் மீதுள்ள அளவு கடந்த நம்பிக்கையும் காட்டுகிறது.

நிறைய வெவ்வேறான மலர்கள் வெவ்வேறான கடவுளுக்கு படைக்கப்படுகின்றனர். இப்படி சரியான மலர்களை ஒரு குறிப்பிட்ட தெய்வங்களுக்கு சமர்ப்பிக்கும் போது கடவுளின் அருளுக்கும் வரங்களுக்கும் ஆளாகுகின்றோம். நாம் வழிபடும் பெண் தெய்வங்களுக்கும் வெவ்வேறான மலர்கள் வைத்து வழிபடுவது வழக்கம்.

உலகம் முழுவதும் இந்த பெண் தெய்வங்களுக்கு நிறைய வெவ்வேறான மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. இங்கே நாம் அன்னை தேவி களுக்கு எந்த மாதிரியான மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவி துர்கா

தேவி துர்கா

அன்னை பார்வதி தேவியின் முக்கியமான திருவுருவம் தான் இந்த தேவி துர்கா அவதாரம். இந்த அன்னை வீரம், விவேகம் மற்றும் போர் போன்றவற்றை பறைசாற்றும் திருவுருவமாக எழுந்தருளுகிறார். இவர் தேவி பவானி என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு பொதுவாக சிவப்பு நிற ஆடைகளை அணிந்து மலர்களை கொண்டு வழிபடுவது வழக்கம்.

தேவி துர்காவிற்கு வழிபட ஏற்ற மலர்கள் சிவப்பு செம்பருத்தி, சிவப்பு செவ்வரளி, தாமரை மற்றும் மற்ற சிவப்பு நிற மலர்கள் போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.

மேலும் சங்கு புஷ்பம் அன்னை தேவி துர்காவிற்கு விருப்பமான மலராகும். இந்த மலரிற்கு அபரஜித்தா என்ற பெயரும் உண்டு. இதற்கு எவரும் வீழ்த்த முடியாதவர் என்று பொருளாகும்.

இந்த சங்கு புஷ்பம் நான்கு வண்ணங்களில் காணப்படுகிறது. வெள்ளை, பழுப்பு ஊதா நிறம், லேசான நீல நிறம், ராயல் புளூ கலர் என்ற நிறங்களில் காணப்படுகிறது.

கடம்பு மலர் மற்றொரு விருப்பமான மலராக உள்ளது. இந்த மரம் கடம்பவன வாசினி என்று அம்மன் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த மரம் தல விருட்சமாக உள்ளது.

தேவி பார்வதி

தேவி பார்வதி

தேவி பார்வதி சிவபெருமானின் துணைவியார் ஆவார். இவர் துர்கா தேவியின் மறு அவதாரம். இவர் தனது பக்தர்களுக்கு நல்ல உடல் நலம், செல்வம், நீண்ட ஆயுள், வலிமை, சுமங்கலி பாக்கியம், திருமண பாக்கியம் போன்றவற்றை வரமாக கொடுத்து அருள் புரிகிறார். இவருக்கும் சிவப்பு நிற மலர்கள் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் செம்பருத்தி, தாமரை மிகவும் விருப்பமானது.

மேலும் மற்ற பூக்களான சம்பங்கி பூ, குண்டு மல்லி, ஆரஞ்சு வண்ண பாலாசம் பூக்கள் போன்றவை இவருக்கு படைக்க சிறப்பான பூக்களாக உள்ளது.

லட்சுமி தேவி

லட்சுமி தேவி

செல்வங்களின் அதிபதி தான் லட்சுமி தேவி ஆவாள். இவருக்கு தங்க ஆபரணங்களையும், சிவப்பு நிற ஆடைகளையும் அணிந்து அலங்கரிப்பர். இவர் தாமரை மீது வீற்றிருந்து அருள் புரிவார். எனவே இவருக்கு தாமரை மிகவும் பிடித்தமான பூவாகும்.

இவர் கடவுள் விஷ்ணுவை மணந்து கொண்டார். அவரும் தாமரை மீது வீற்றிருந்து காட்சி அளிப்பவர். மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற சாமந்தி பூக்கள் போன்றவற்றை கொண்டு இவருக்கு பூஜிக்கலாம்.

 தேவி சரஸ்வதி

தேவி சரஸ்வதி

அறிவை பொழியும் கடவுள் தான் சரஸ்வதி தேவி ஆவார். அவரை வழிபடும் எல்லாருக்கும் அறிவு, கல்வி வழங்கி அருள் புரிவார். இவர் வெள்ளை தாமரை யில் வீற்றிருந்து கையில் வீணையை கொண்டு காட்சியளிப்பார். ஸ்வேதா அல்லது ஸ்வேதாம்பரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இதற்கு வெள்ளை ஆடையை அணிந்தவர் என்றும் ஸ்வேத்பத்மாசனா என்பதற்கு வெள்ளை தாமரை யில் வீற்றிருப்பவர் என்ற பொருளும் உண்டு.

இவருக்கு வெள்ளை தாமரை மற்றும் மற்ற வெள்ளை நிற மலர்களை கொண்டு பூஜித்தால் நல்லது. இவருக்கு நறுமணம் கமழும் பூக்களான குண்டு மல்லி, மல்லிகை, சாமலி பூக்கள் போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.

பாலாசம் பூக்கள் கூட இவருக்கு விருப்பமான ஒன்றாகும். அதைக் கொண்டும் சரஸ்வதி தேவிக்கு வழிபாடு செய்யலாம்.

தேவி மகாகாளி

தேவி மகாகாளி

தேவி மகாகாளி வீரம் நிறைந்த போராட்டம் குணமுடன் காணப்படுபவர். இவர் அரக்கர்கள், தீய சக்திகள் மற்றும் நமது பயங்களை அழிப்பவர். இவர் பார்வதி தேவியின் ஆக்ரோஷமான கோபத்துடன் தோன்றிய அவதாரம். இவர் கருமை நிற சருமத்தையும் கையில் சூலாயுதம் மற்றும் அரக்கனின் தலையை வெட்டி அவர் இரத்தத்தை ஒரு சட்டியில் பிடித்த படி ஆக்ரோஷமான தோற்றத்துடன் காணப்படுவார்.

இவரை வழிபட்டால் எதிரிகளிடமிருந்து நம்மை காத்து பயத்தை போக்கி அருள் புரிவார். தீபாவளி பண்டிகையின் இரவு நேரங்களில் அன்னை மகாகாளியை வழிபாடு செய்வது நல்லது.

இவருக்கு சிவப்பு நிற செம்பருத்தி, மஞ்சள் அரளிப் பூக்கள் போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்

 எல்லா தேவிகளுக்கும் உகந்த மலர்கள்

எல்லா தேவிகளுக்கும் உகந்த மலர்கள்

எல்லா தேவிகளுக்கும் பொதுவாக சில மலர்களை கொண்டு பூஜிக்கலாம். அவையாவன : மல்லிகை, சங்கு புஷ்பம், செம்பருத்தி, சிவப்பு தாமரை போன்ற மலர்கள் எல்லா தேவியர்களுக்கும் பூஜிக்க சிறந்த மலர்களாகும்.

இந்த மலர்கள் உங்களுக்கு எளிதாக கிடைக்கக் கூடியது. எனவே இவற்றை வாங்கி உங்கள் இல்லத்தில் வைத்து தேவி களுக்கு வழிபாடு செய்து அருள் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Flowers to use in the worship of the mother Goddess

Flowers to use in the worship of the mother Goddess
Story first published: Monday, December 4, 2017, 13:03 [IST]
Desktop Bottom Promotion