For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறந்தபின் மீண்டும் உயிருடன் வந்த அதிசய சம்பவங்கள்! விலகாத மர்மங்கள்!!

இறந்த பின் உயிரோடு வந்தவர்களின் உண்மை சம்பவங்களை இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Hemalatha
|

இன்றும் உலகில் தீர்க்கப்படாத பலவிஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. பெர்முடாஸ் முக்கோணம், ராமர் பாலம் என விடை தெரியாத பல விஷயங்களை நாம் கிடப்பில் போட்டுவிட்டோம். காரணம் தீர்வு கிடைக்கவில்லை.

அப்படித்தான் இறப்பை பற்றியும் நமக்கு என்றுமே விடை தெரிந்ததில்லை. இறந்த பின் ஆன்மா எங்கு செல்கின்றது என உயிரோடு இருக்கும் வரை யாருக்கும் விடை தெரிவதில்லை. எல்லாமே யூகங்களின் அடிப்படையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடவுள், சாத்தான், மதங்கள், இனப்பாகுபாடு என அத்தனை அக்கிரமங்களையும் செய்து கொண்டு அறியாமையில் உழன்று கொண்டிருக்கிறோம்.

உங்களுக்கு தெரிந்த ஒரு நபர் இறந்துவிட்டதாக எல்லாரும் எண்ணிய நிலையில் திடீரென உயிருடன் வந்தால் எப்படி உணர்வீர்கள்? வாங்க அப்படி சிலிர்ப்பூட்டும் சம்பவங்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
6 நாட்கள் கழித்து வந்த அதிசயம் :

6 நாட்கள் கழித்து வந்த அதிசயம் :

2012 ஆம் ஆண்டு சீனாவில் 95 வயது முதிய பெண்மணி இறந்திருக்கிறார். அவரது சவப்பெட்டியை பார்வைக்காக வீட்டின் முன்னே வைத்திருக்கிறார்கள். சரியாக இறுதி நாளுக்கு முந்தைய நாள் சவப்பெட்டியை பார்க்கும்போது அதில் அவரின் உடல் இல்லை.

எல்லாரும் ஸ்டன்னாகி நின்ற போது, பக்கத்து வீட்டுக்காரர் அவருடைய வீட்டிற்குள் சென்று பார்த்தால் அந்த முதிய பெண்மணி சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்கிறார். " ரொம்ப நேரம் தூங்கிட்டேன். எழுந்ததும் பசிக்க ஆரம்பித்தது. சவப்பெட்டியின் மூடியை தட்டி தட்டி எப்படியோ திறந்துவிட்டேன். இப்போ சாப்பிட போறேன் " என்று அசால்ட்டாக சொல்லியிருக்கிறார். இந்த செய்தி உலகமெங்கும் வேகமாக பரவியது. ( நல்ல வேளை ,, ஒரு நாள் லேட்டா எந்திரிச்சிருந்தா " லேட்" ஆயிருப்பாங்க.)

Image source

புதைத்த பின் :

புதைத்த பின் :

ஐரிஸ் நாட்டில் ஒரு பெண்மணிக்கு இறுதிச் சடங்கு நடக்கும்போது , இறந்தவருக்கு மோதிரம் அணிந்து புதைக்கப்பட்டார். அன்றிரவு திருடர்கள் அவரின் மோதிரத்திறாக அவரது சவப்பெட்டியை தோண்டி எடுத்தனர். அவரது கை விரலை அறுக்கும்போது அவர் அலறியபடி எழுந்தார். அதன் பின்தான் அவர் உயிரோடு இருக்கிறார் என எல்லாருக்கும் தெரிய வந்துள்ளது.

போஸ்ட் மார்ட்டம் சமயம் :

போஸ்ட் மார்ட்டம் சமயம் :

பிரிட்டனில் 1996 ஆம் ஆண்டு டாஃப்னே பேங்க் என்ற பெண் இறந்து போனார். அவருடைய உடல் போஸ்ட்மார்ட்டத்திற்கு தயாராக இருந்தது.

போஸ்ட்மார்ட்ட அறையில் கிடத்தி வைத்தபோது, அவரது நெஞ்சுக் கூடு லேசாக மெல்ல ஏறி இறங்கி கொண்டிருந்ததை அங்கிருந்த ஊழியர் கவனித்திருக்கிறார். பிறகு பரிசோதித்த பின் பார்த்தால் அவர் உயிர் இருந்திருக்கிறது. உடனடியாக குளிர்சாதன அறையிலிருந்து வெளிக் கொண்டு வரப்பட்டார்.

பிரசவத்தின் போது :

பிரசவத்தின் போது :

எரைக்கா என்ற பெண் 36 வார கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். அவர் பள்ளியில் ஆங்கில வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது மூர்ச்சையாகி விழுந்து விட்டார். பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துக் சென்ற போது இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

ஆனால் குழந்தை உயிரோடு இருப்பதால் உடனடியாக சிசேரியன் செய்து குழந்தையை எடுத்தனர். ஆனால் ஆச்சரியம். பிரசவம் நடந்த பின் எரைக்காவின் இதயத் துடிப்பு இயங்கியிருக்கிறது. பிறகென்ன. தாயும் சேயும் குடும்பம் சகிதமாக மருத்துவமனையை விட்டு போனார்கள்.

ஈமச் சடங்கின் போது :

ஈமச் சடங்கின் போது :

ரோசா என்ற பெண் இறந்த பின் இறுதிச் சடங்கின் போது இறுதியாக அவரது மகள் அவரை கட்டிப் பிடிக்கச் சென்றாள். அப்போது தனது அம்மாவின் உடலில் லேசாக அசைவு இருந்ததை உணர்ந்திருக்கிறார்.

அதை அங்கிருந்தவர்களிடன் சொன்னபோது அவர்கள் அதனை முதலில் விளையாட்டாய்தான் எடுத்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் கவனித்த போதுதான் தெரிந்தது.. ஆமாம் அவரின் மகள் சொன்னது உண்மை.. அவர் உயிரோடு இருந்திருக்கிறார்.

2 வயது பையன் :

2 வயது பையன் :

பிரேசிலில் 2 வயது குழந்தை நிமோனியாவினால் இறந்து விட்டான். இறுதி நிகழ்வில் திடீரென எழுந்து அமர்ந்து அவனது அப்பாவிடம் தண்ணீர் கேட்டிருக்கிறான். பின் படுத்துக் கொண்டானாம். அதன் பிறகு அவன் இரண்டாவது தடவை எழுந்திருக்கவே இல்லை.

ஆன்னே க்ரீன் :

ஆன்னே க்ரீன் :

1650 ஆம் ஆண்டு ஆன்னே க்ரீன் என்ற பெண் தனது குழந்தையை கொலை செய்ததற்காக தூக்கிலிடப்ப்பட்டார். அதன் பின்னர் அவரை மருத்துவர் அடாப்ஸிக்கு கொண்டு செல்லும்போதுதான் அவர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் என தெரிய வந்தது. அந்த சமயத்தில் இந்த நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டது.

பிறந்த குழந்தை :

பிறந்த குழந்தை :

பிரசவம் நடந்த பின் அந்த தம்பதியின் குழந்தை இறந்துவிட்டது. மறு நாள் அவர்கள் தங்கள் குழந்தையை பெற்றுக் கொள்வதற்காக மருத்துவ மனை மார்ச்சுவரிக்கு சென்றிருக்கிறார்கள். பிணவறை பெட்டியை திறந்ததும் குழந்தை வீறிட்டு அழுதிருக்கிறது. இன்ப அதிர்ச்சியில் அந்த பெற்றோர் உறைந்துவிட்டனர்.

மார்ச்சுவரியில் :

மார்ச்சுவரியில் :

2011 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த சம்பவம். பிணவறையின் சொந்தக்காரர் ஒருவருக்கு அங்கிருக்கும் பிணங்களின் நடுவில் சன்னமாக கத்தும் ஒலி கேட்டிருக்கிறது. பேயோ என்னவோ என்று அவர் வெளிறிப் போய் போலிசுக்கு ஃபோன் செய்திருக்கிறார். பிறகுதான் தெரிந்தது. அங்கிருந்த 81 வயது பெண் ஒருவர் உயிருடன் இருந்திருக்கிறார்.

மின்னல் அடித்து இறந்தவர் :

மின்னல் அடித்து இறந்தவர் :

மின்னல் தாக்கி ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் இறந்து போனார். அவரை மருத்துவமனையில் கொண்டு போனபோது சில மணி நேரம் கழித்து மீண்டும் உயிர் வந்தது. ஆனால் இதில் விந்தை என்னவென்றால் அவர் மின்னல் தாக்கியபின் சிறந்த இசை கலைஞராக உருவாகிவிட்டார். பாடல் எழுதுவதும் , இசையமைப்பதுமாய் இருக்கிறார்.

பீதியில் ஓட்டம் :

பீதியில் ஓட்டம் :

ஜிம்பாப்வே யில் படுத்த படுக்கையாக இருந்த ஒருவர் இறந்து போனார். பார்வைக்கு அவரது உடல் வைத்த போது திடீரென அவர் உடல் அசைந்தது. உடனே அங்கிருந்தவர்கள் எல்லாம் பேய் என்று பயந்து பதறியபடியே ஓடி விட்டார்களாம். பிறகுதான் தெரிந்தது அவர் இறக்கவில்லை. உயிருடன்தான் இருக்கிறார் என்று. (நல்லா கிளப்பறாய்ங்கடா பீதிய)

ஹார்ட் அட்டாக் :

ஹார்ட் அட்டாக் :

49 வயதான ரஷ்ய பெண்மணி ஹார்ட் அட்டாக்கினால் இறந்து போனார். அவருக்கான காரியங்கள் நடந்து கொண்டிருக்கும்போது எழுந்து பார்த்து பயந்து போய் கத்தியிருக்கிறார். இரண்டாவது முறை ஹார்ட் அட்டாக் வந்து அங்கேயே மீண்டும் இறந்து போய் விட்டாராம்.

அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?

அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?

ல்யூட்மிலா என்ற பெண் இறந்த பின்னர் 6 நாட்கள் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்தது. அவரது மகள் ஈமக் காரியத்திற்காக வேலை செய்து கொண்டிருந்தபோது அந்த மருத்துவ மனையின் நர்ஸ் ஒருவர் அவரது அம்மா உயிரோடு இருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் சரியாக அடுத்த வருடத்தில் மீண்டும் இறந்து போய் விட்டாராம்.

ஓட்டு போட போகும்போது :

ஓட்டு போட போகும்போது :

2012 ஆம் ஆண்டு மிசிகன் மாகானத்தில் தேர்தல் சமயத்தில் வாக்களிக்க எல்லாரும் க்யூவில் நிற்கும்போது ஒரு முதிய பெண்மணி தனது கணவன் மயக்கம் போட்டதாக கூப்பாடு போட்டிருக்கிறார். அங்கிருந்த டை என்ற நர்ஸ் சென்று பார்த்த போது அவருடைய உடலில் எந்த அசைவும் இல்லை. இதயமும் வேலை செய்யவில்லை. பின்னர் அவர் நெஞ்சை வேகமாக அடித்து , இறந்த உயிரை மீண்டும் வர வைத்திருக்கிறார்.

சரியாக புதைக்கும் நேரத்தில் :

சரியாக புதைக்கும் நேரத்தில் :

65 வயது ஆண் ஒருவர் சரியாக புதைக்கச் செல்லும்போது எழுந்திருக்கிறார். கூட்டத்தில் பயங்கர ஷாக் . பின்னர்தான் இவர் உயிரோடு திரும்பி வந்துள்ளார் என்றே உணர்ந்தனர்.

கார் விபத்து :

கார் விபத்து :

ஒரு கார் விபத்தில் 33 வயது ஆண் ஒருவர் இறந்துவிட்டார் . போஸ்ட்மார்ட்டதில் அவரது தோலை கிழிக்கும்போது ரத்தம் கசிய ஆரம்பித்தது. உடனேயே வயிற்றுப் பகுதியை தையல் போடும்போதே அவருக்கு முழுக்க நினைவு வந்துவிட்டதாம். பிறகு நார்மல் அறைக்கு கொண்டு வந்தனர்.

ஒஹியோ :

ஒஹியோ :

ஒஹியோவில் இருந்த வெஸ்ட் கரோல்டன் என்பவருக்கு 45 நிமிடங்கள் உயிர் இல்லையாம். இதயம் , நாடித்துடிப்பு எதுவும் வேலை செய்யதபோது, திடீரென இதயம் துடிக்க ஆரம்பித்துவிட்டதாம். தனது 20 வருட அனுபவத்தில் இப்படியான ஒரு சம்பவம் நடந்ததில்லை என மருத்துவர் கூறியிருக்கிறார்.

78 வயது பெண் :

78 வயது பெண் :

78 வயது பெண்மணி ஒருவர் இறந்ததாக சொல்லிய பின் அவரை மூட்டை போல் பையில் கட்டிய பின்தான் அங்கிருந்த நர்ஸ் கவனித்தார். அந்த பெண்ணின் கால் விரல்கள் மூட்டையை உதைத்துக் கொண்டிருந்ததாம்.

ஐஸ் ஆறு :

ஐஸ் ஆறு :

1987 ஆம் ஆண்டு 11 வயது சிறுவன் ஐஸ்கட்டியான ரெட் ஆறில் விழுந்து விட்டான். 45 நிமிடங்கள் பிறகு அவன் காப்பாற்றப்பட்ட போது அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். அந்த சமயத்தில் கண்காணிப்பிற்காக வைத்திருந்தபோது உயிர் வந்துவிட்டதாம்.

விளையாட்டு வீரன் :

விளையாட்டு வீரன் :

தடகள விளையாட்டு வீரன் ஒருவன் மைதானத்தில் ஓடிக் கொண்டிருக்கும்போது மூர்ச்சையாகி விழுந்துவிட்டார். அவனை இறந்துவிட்டதாக அறிவித்தாலும் பின்னர் மருத்துவமனையில் கண்கணிப்பிற்கு வைத்தபோது உயிர் பிழைத்தது எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dead people who came back alive - weird incidents !!

Dead people who came back alive - weird incidents !!
Desktop Bottom Promotion