நீயும் தேவதை தான் மகளே - பிஞ்சு உள்ளத்தை ஒதுக்கும் நஞ்சு உள்ளங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பெற்றோரின் அன்பே உண்மையானது. பெற்றோரை போல வேறு யாரும் உங்களை காதலிக்க முடியாது என பலர் கூறி கேட்டிருப்போம். ஆனால், அதற்கான ஒரு சிறந்த உதாரணமாக உலகிற்கு விளங்கி வருபவர்கள் இந்த தம்பதி.

எலீனா ஷ்பெங்க்ளர் என்பவருக்கு டேரினா எனும் மகள் பிறந்தார். மருத்துவர்கள் அந்த குழந்தையை எலீனா ஷ்பெங்க்ளர்-க்கு காண்பிக்க மறுத்தனர். உண்மையில் அச்சம் கொண்டனர் என்று கூறலாம்.

மருத்துவர்கள் தனது குழந்தையை துணியால் கட்டி வைத்திருந்ததை கண்டார் எலீனா ஷ்பெங்க்ளர். ஏதோ ஒன்று தவறாக இருப்பதை மட்டும் தான் அப்போது எலீனா ஷ்பெங்க்ளரால் யூகிக்க முடிந்தது.

கிட்டதட்ட நான்கு மணிநேரம் மருத்துவர்களிடம் தன் குழந்தையை என்னிடம் காண்பியிங்கள் என எலீனா ஷ்பெங்க்ளர் மன்றாடி கெஞ்சினார். டேரினா தான் எலீனா ஷ்பெங்க்ளர்-ன் முதல் குழந்தை.

மருத்துவர்கள் குழந்தையை எலீனா ஷ்பெங்க்ளர்விற்கு காண்பித்த போது அதிர்ச்சி மட்டுமே அவரை சூழ்ந்திருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வினோத கோளாறு!

வினோத கோளாறு!

ஃபேசியல் டிஸார்டர் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். டேரினாவிற்கு முகத்தில் இதழ்களும் இல்லை, கன்னமும் இல்லை. பார்க்க கொஞ்சம் அகோரமான தோற்றம். இதழ், மற்றும் கன்னம் இருக்க வேண்டிய இடத்தில் இரத்தம் மட்டுமே ஒட்டிக் கொண்டிருந்தது, தனது முதல் ஆசை குழந்தையை எலீனா ஷ்பெங்க்ளர் முதல் முறை கண்டபோது.

மருத்துவர்கள் எலீனா ஷ்பெங்க்ளரிடம். இந்த குழந்தையை மறந்துவிடுங்கள். நீங்கள் மட்டும் வீட்டிற்கு செல்லுங்கள் என அறிவுரைத்தனர்.

ஆனால், ரஷ்யாவை சேர்ந்த அந்த ஜோடி அதற்கு மறுத்தனர். மாறாக அதிகமான காதலை தங்கள் மகள் மீது செலுத்த துவங்கினர். எலீனா ஷ்பெங்க்ளரின் கணவர் யூரி,"இவள் எங்கள் மகள், எங்கள் தேவதை" என ஒரே பதிலை மட்டும் கூறி குழந்தையை எடுத்து சென்றார்.

அதிக அக்கறை!

அதிக அக்கறை!

வீட்டிற்கு எடுத்து சென்று, அதிக அக்கறை செலுத்தினர். சாதாரண பெற்றோராக நடந்துக் கொள்ளவில்லை. முகம் காயமடைந்தது போல தான் இருந்தது. அருகே இருக்கும் தோழர்கள், மக்கள் டேரினாவை காண அஞ்சினர். அதனால், அவர்களுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள் எலீனா ஷ்பெங்க்ளர் மற்றும் யூரி.

முக சிதைவு கோளாறு ஏற்பட்டுள்ள அந்த குழந்தை காரணமாக சில உறவினர்கள் போலீஸ் புகார் அளித்தனர் என்றும் கூறப்படுகிறது. எலீனா ஷ்பெங்க்ளர்-ன் மூத்த சகோதரி மட்டும் தான் உறுதுணையாக இருந்துள்ளார்.

எலீனா ஷ்பெங்க்ளர்!

எலீனா ஷ்பெங்க்ளர்!

"என் அக்காவை தவிர வேறு யாரும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கவில்லை. உறவினர்கள் அனைவரும் எங்களுடன் பேசுவதையே தவிர்த்துவிட்டனர். என் உறவினர், என் கணவர் உறவினர் என யாரும் ஆறுதலாக இல்லை. அவர்கள் டேரினாவை ஏற்கவும் மறுக்கிறார்கள்.

நாங்கள் டேரினாவை மக்கள் மத்தியில் இருந்து மறைக்க விரும்பவில்லை. நாங்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவளை அழைத்து செல்கிறோம். இதை நாங்கள் அசிங்கமாக கருதவில்லை. அந்த அவசியமும் எங்களுக்கு இல்லை.

ஒருவேளை உங்களுக்கு என் மகளை காண விருப்பம் இல்லை எனில், நீங்கள் பார்க்க வேண்டாம். நாங்கள் எங்கள் மகளை அவள் உள்ளது போலவே ஏற்றுக் கொள்கிறோம்." என்கிறார்கள் இந்த தம்பதி.

மக்கள் எதிர்ப்பு!

மக்கள் எதிர்ப்பு!

தங்கள் மகள் மீது எலீனா ஷ்பெங்க்ளர், யூரி தம்பதி இவ்வளவு பாசமாக இருந்தாலும். இந்த சமூகமும் அதில் இருக்கும் மக்களும் அப்படி இல்லை. டேரினாவை பள்ளியில் சேர்த்துக் கொள்ள அவர்கள் மறுத்தனர். ஆசிரியர், மாணவர்கள் அச்சப்படுவதாக காரணம் கூறினார்.

சமூக ஆர்வலர்கள் டேரினாவிற்கு பாடம் கற்பிக்க வாரம் இரண்டு பேரை அனுப்புகிறார்கள். ஆனால், எலீனா ஷ்பெங்க்ளர், தங்கள் மகளுக்கு நண்பர்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

"நாங்கள் எத்தனையோ பொம்மைகள் வாங்கி கொடுத்துவிட்டோம். ஆனால், டேரினா கேட்கும் தோழர்களை, தோழிகளை எப்படி வாங்கி தர முடியும்." என வருத்தமாக கூறியுள்ளார் எலீனா.

மருத்துவமனை!

மாஸ்கோவை சேர்ந்த மருத்துவர்கள் டேரினாவிற்கு இரண்டு வருடத்திற்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால், இதற்கு உள்ளூர் மருத்துவர்கள், மருத்துவமனைகள் உதவ மறுத்துவிட்டனர்.

இதனால், இந்த தம்பதி மாஸ்கோவில் வைத்து சிகிச்சை பெற பணம் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

All Image Credit:SERUAN BMI

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Darina The Girl Child Who has no Lips and Cheeks Because of Facial Disorder!

Darina The Girl Child Who has no Lips and Cheeks Because of Facial Disorder!
Subscribe Newsletter