For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன நலக் கோளாறிலிருந்து மீண்டு வந்து வாழ்க்கையை தொடங்கிய பிரபலங்கள்!!

மன நலக் கோளாறிலிருந்து மீண்டு வந்து தங்கள் வாழ்க்கையை தொடங்கிய பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

By Ambika Saravanan
|

மனநிலையில் மாற்றம் அல்லது கோளாறு ஏற்படுவது எல்லா மனிதர்களுக்கும் இயற்கை . இது அதிக அளவில் இருக்கும் போது மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் , போதை அல்லது தீய நெறிகளுக்கு அடிமையாதல், உணவு சீர்குலைவு, இருமுனை சீர்குலைவு போன்றவை ஏற்படும்.

இந்த வித மன கோளாறுகள் ஏற்படும்போது தனி மனித முயற்சி மற்றும் மருத்துவத்தின் உதவியால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.

உலக புகழ் பெற்ற சிலரும் இந்த மனநிலை கோளாறு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அவர்களை பற்றிய தகவலை இப்போது பார்க்கலாம் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏஞ்சலீனா ஜூலி :

ஏஞ்சலீனா ஜூலி :

இவர் ஆளுமை சிதைவினால் பாதிக்கப்பட்டார் .

சிகிச்சைக்கு முன்னர், ஏஞ்செலீனா பல நிலையற்ற உறவுகளில் தன்னை உட்படுத்தி, சுய மரியாதை குறைந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்கள் தோன்றும் அளவிற்கு சென்றார். சரியான சிகிச்சைக்கு பிறகு அந்த கோளாறிலிருந்து மீண்டு மன ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த ஆரம்பித்தார்.

க்ளாரா ஹ்யுஜஸ் :

க்ளாரா ஹ்யுஜஸ் :

இவர் போதை மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டார் .

இவர் 6 முறை சைக்கிளிங் மற்றும் ஸ்கேட்டிங்கில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர். க்ளாரா 2014ம் ஆண்டு, கனடா முழுவதும் பைக்கில் பயணித்து மனநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அவர் விளையாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னர் தமது 16ம் வயதில் போதை பொருட்களுக்கு அடிமையானார். ஒலிம்பிக்கில் முதன்முறை பங்கேற்றதற்கு பின்னர் கடும் மனஉளைச்சலால் பாதிக்க பட்டார் . பின்பு தகுந்த மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அவரிடம் அன்பு செலுத்துபவர்களால் அதில் இருந்து மீண்டு வந்தார்.

source

கிட் கியூடி :

கிட் கியூடி :

இவர் பதட்ட கோளாறால் பாதிக்கப்பட்டார்.

இவர் சமூக ஊடகங்களில் தான் பல வருடங்களாக மன உளைச்சலால் பாதிக்க பட்டிருப்பதாகவும், அதில் இருந்து மீள மறுவாழ்வு மையத்திற்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த பாதிப்பால், அவர் தற்கொலைக்கு கூட முயற்சித்ததாகவும் தெரிவித்தார். "உணர்ச்சிகளின் குளத்தில் நீந்தும் ஒரு சேதமடைந்த மனிதன்" என்று தன்னை தானே விமர்சித்து கொண்டார்.

source

டெமி லோவடோ :

டெமி லோவடோ :

இவர் உணவு சீர்குலைவு, பயம், பதட்டம், மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டார்.

2015ம் ஆண்டு, ஒரு மனநல மாநாட்டில் பேசும் போது, மன நல கோளாறில் இருந்து மீள்வதற்கு என்று தனியாக ஒரு நாள் இல்லை என்று கூறினார். இளம் பாடகி மற்றும் நடிகையான இவர் இளம் வயதிலேயே புலிமியா என்ற அளவுக்கதிகமான பசி, கொக்கைன் என்ற போதைக்கு அடிமையாதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டார்.

2010ம் ஆண்டு, திரை வெளிச்சத்தில் இருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டார். ஆனாலும் அவர் தனிப்பட்ட வாழ்வு போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது. ஆனால் இன்று ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை தேர்ந்தெடுத்து , உடற் பயிற்சி மற்றும் சரியான மருத்துவ சிகிச்சையின் உதவியுடன் சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறா

பிரிட்னி ஸ்பியர்ஸ் :

பிரிட்னி ஸ்பியர்ஸ் :

இவர் பைபோலார் டிசார்டர் என்று சொல்லப்படும் இருமுனை சீர்குலைவு மற்றும் பதட்ட கோளாறால் பாதிக்கப்பட்டார்.

2007ம் ஆண்டு, இந்த புகழ் பெற்ற பாப் பாடகிக்கு நரம்பு முறிவு ஏற்பட்டதால், தலையை மொட்டையடித்து கொண்டார். மனநல பாதிப்பு, போதை மற்றும் குடி பழக்கம், இரண்டு குழந்தைகளின் தாயை வாழ்க்கையின் ஒரு ஓரத்திற்கு கொண்டு சென்றது. மறுவாழ்வு மையத்தின் உதவியால் மற்றும் மருந்துகளின் செயல்பாட்டால் இன்று ஒரு நல்ல இடத்தில இருக்கிறார். யோகா மற்றும் சுவாச பயிற்சி இவருக்கு மன நலத்தை மீட்டு தந்தது.

இப்படி நமக்கு தெரிந்த தெரியாத பலர், வாழ்க்கையோடு பல விதங்களில் போராடி கொண்டிருக்கின்றனர். தகுந்த நேரத்தில், தகுந்த சிகிச்சை மற்றும் தன்னம்பிக்கை மற்றும் சொந்தங்களின் அன்பு ஆகியவை எந்த ஒரு சூழ்நிலையையும் மாற்றும். நோயையும் குணப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Celebrities who live with mental illness

Celebrities who live with mental illness
Desktop Bottom Promotion