வெளிநாடுகளில் இனவெறி காரணமாக கொடூரமாக இந்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நாடுகளுக்குள் மத்தியில் மதவெறி, இனவெறி, சமூக, ஜாதிவெறிகள் தலைவிரித்தாடுகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி எப்போது வரும் என்ற கேள்வி விவாதங்கள் மேடையில் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது.

சூரியன் தினமும் விடிந்து, அஸ்தமனம் ஆவதற்குள் பல உயிர்கள் இந்த வெறிகள் காரணமாக இரையாகிப் போய்விடுகிறது. எந்த அரசியல் சட்டம் இதற்கு ஒரு முடிவு கொண்டு வரும் என்பது கானல் கனவாகி கிடக்கிறது.

இந்தியாவுக்குள் ஜாதிமத வெறிகளால் பாதிக்கப்படும் இந்தியர்கள், வெளிநாடுகளில் இனவெறி காரணத்தால் நிறையவே பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த சம்பவங்களின் தொகுப்பு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிங் குழந்தை!

சிங் குழந்தை!

ஐந்து வயதே நிரம்பிய சிதக் எனும் குழந்தையை டர்பன் கட்டி வந்த காரணத்திற்காக பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்ட சம்பவம் நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

மெல்டன் கிறிஸ்டியன் கல்லூரியில் சிதக் சிங் அரோராவை பட்கா எனப்படும் டர்பன் கட்டும் முறையை அவிழ்க்க கூறியுள்ளனர். அங்கே எந்தவிதமான மதசார்பு குழந்தைகள் மத்தியில் இருக்க கூடாது என சட்டம் கொண்டுவந்துள்ளனர். இதற்காக தான் தடையும் விதிக்கப்பட்டது.

இந்தியாவை சேர்ந்த ஒரு குழந்தைக்கு இதுபோன்ற சம்பவம் வெளிநாட்டில் நடந்தது இதுவே முதல் முறை என்றும் செய்திகளில் கூறப்பட்டது.

சுட்டுக் கொலை!

சுட்டுக் கொலை!

அனுஜ் பித்வே லண்டனின் லாங்கஸ்டர் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். இவர் நண்பர்களுடன் நடந்து செல்லும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

கேப் டிரைவர்!

கேப் டிரைவர்!

ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய கேப் டிரைவரை "யு ஃபக்கிங் இந்தியன்" என திட்டி ஒரு ஜோடியால் தாக்கப்பட்டார். இதனால் அவர் சுயநினைவு இழந்தார். அவர் சுயநினைவில் இல்லை என்பதை அறியாமல் தொடர்ந்து அவரை அவர்கள் தாக்கிக் கொண்டே இருந்தனர்.

ஐரிஷ் பெண்மணி!

ஐரிஷ் பெண்மணி!

ஐரிஷ் பெண்மணி ஒருவர் தன்னுடன் பயணித்து வந்த இந்திய பயணியை திடீரென இனவெறி காரணமாக கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தார். இதை மற்றொரு பெண்மணி வீடியோ பதிவு செய்து சமூக தளங்களை பதிவிட்டார்.

இந்திய பெண்மணியை ஐரிஷ் பெண்மணி, "யு ஃபக் ஆப் பேக் டூ இந்தியா" என திட்டிக் கொண்டிருந்தது பதில் பதிவாகியிருந்தது.

ஸ்நாப்சாட்!

ஸ்நாப்சாட்!

சிங் ஒருவரை தீவிரவாதி என கருதி. அந்த நபர் தனக்கு பின்னே இருப்பதை படம் எடுத்து, நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன் என ஒரு சகபயணி ஸ்நாப் சாட்டில் பதிவு செய்தது வைரல் ஆனது.

இந்தியன்!

இந்தியன்!

இப்படி உலகெங்கிலும் இந்தியர்களை இனவெறி காரணம் காட்டி துன்புறுத்தினாலும், 22 வயது ஹர்மன் சிங், ஒரு குழந்தையின் உயிரை காக்க, தனது மத குறியீடான டர்பனை கழற்றி உதவியது, இந்தியர்கள் மனிதநேயம் மிக்கவர்கள் என்பதை இந்த உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைதிருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cases of Indians Had to Deal With Extreme Racism Abroad!

Cases of Indians Had to Deal With Extreme Racism Abroad!
Story first published: Wednesday, July 26, 2017, 14:33 [IST]