தடை செய்யப்பட்ட 60,000 ஆண்டு பழமை வாய்ந்த பழங்குடி வாழும் தீவு, அதுவும் இந்தியாவில்!

Posted By:
Subscribe to Boldsky
Banned Island of Indian Ocean, Where 60000 Years Old Tribes Lives Currently!

ஆங்கிலத்தில் பரவலாக Land of Lost Tribe என அழைக்கப்படும் தீவு அது. இந்திய பெருங்கடலில் தனித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு பழங்குடி மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் மிகவும் அபாயமானவர்கள். இயற்கைக்கு அல்ல, இயற்கையை கொன்று செயற்கையாக வாழ்ந்து மனிதர்களுக்கு மட்டும் இவர்கள் அபாயமானவர்கள்.

இவர்கள் வெளியுலக மக்களை கொல்லும் அச்சம் இருப்பதால், மக்கள் இந்த தீவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. North Sentinel Island என அழைக்கப்படும் இந்த தீவு 60000 ஆண்டுகள் பழமையானது. இவர்கள் இடத்திற்குள் யார் நுழைய முயற்சித்தாலும் தாக்குதல் நடத்துவார்கள்.

இவர்கள் தீவின் மேல் விமானம் பறந்தால் கூட நெருப்பு அம்புகள், கல் எறிதல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களை மிக அரிய வகையில் சில கேமாராக்கள் மட்டும் படம் பிடித்துள்ளன. இந்திய அரசாங்கம் இவர்களை தொடர்பு கொள்ளும் முயற்சியை கைவிட்டுவிட்டது.

இதற்கு மாறாக இவர்கள் வாழும் இடத்தில் இருந்து மூன்று மைல் தூரத்திற்கு அப்பால் மக்கள் செய்ய தடை விதிக்கும் பகுதியை அமைத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிசய தீவு!

அதிசய தீவு!

வானில் இருந்து கண்டால் ஒரு நலிந்த கிராமம் போன்ற அமைப்பு இருக்கும். ஆனால், அதை சுற்றி அடர்ந்த காடுகள், கடற்கரை, மீன் பிடி தொழில் என பல விஷயங்கள் அந்த தீவுக்கு அழகு சேர்க்கிறது. ஆரம்பக் காலத்தில் சில மீனவர்கள் அந்த தீவை நெருங்கியிருகிரர்கள். ஆனால், அவர்கள் கொடூரமாக தாக்குவதை கண்டு பின்வாங்கி விட்டனர்.

Image Credit: Christian Caron

சுற்றலா பயணிகள்!

சுற்றலா பயணிகள்!

சில நேரங்களில் சுற்றுலா பயணிகள் அங்கே செல்ல முயற்சித்த நிகழ்வுகள் நடந்துள்ளன. இவர்கள் எரியும் வாட்டர் பாட்டில்கள், அவர்கள் எதிர்த்து தாக்கும் கல் ஏறி தாக்குதல்கள் போன்றவை... வெளியுலக மக்கள் மீது கடும் மூர்க்கத்தன குணம் உருவாக காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Image Credit: NASA

பூஜ்ஜியம்!

பூஜ்ஜியம்!

மேலும், அவர்கள் வெளியுலக மக்களை ஒரு ஏலியன் போல தான் காண்கிறார்களோ என்ற கேள்வியும் எழுகிறது. இவர்கள் முற்றிலும் இயற்கையுடன் வாழ்ந்து வரும் 60000 ஆண்டு பழமை வாய்ந்த பழங்குடி இனத்தினர் ஆவர்கள்.

வெளியுலகம் பற்றி அவர்கள் அறிந்ததே இல்லை. அவர்கள் வாழ்ந்து வரும் இடம் மட்டுமே இந்த உலகில் இருக்கும் இடம் என கருதி வாழ்ந்து வருகிறார்கள்.

Image Credit: ESA

கொலை!

கொலை!

2006ம் ஆண்டு இந்த தீவுக்கு செல்ல முயற்சித்த சுற்றுலா பயணிகளில் இரு ஆண்களை இந்த தீவை சேர்ந்தவர்கள் கொன்றுவிட்டனர். அந்த ஆண்கள் அந்த இல்லீகலாக மீன் பிடிக்க சென்றதாக அறியப்படுகிறது.

மேலும், அந்த பகுதியின் மேல் சென்ற விமானங்கள் மீது நெருப்பு அம்புகளும் கற்களும் எறிந்துள்ளனர்.

Image Credit:coolinterestingstuff

வங்காள விரிகுடா

வங்காள விரிகுடா

இந்த தீவு வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கிறது. முதன் முறையாக அந்த தீவில் மக்கள் இருப்பதை அறிய காரணமாக ஒரு புகைப்படம் வெளியானது. அதில், ஒரு ஆண் ஈட்டியைப் பிடித்துக் கொண்டிருப்பது போலிருந்தது.

பிறகு 2004ல் சுனாமி வந்தபோது, இந்த தீவில் இருந்து இந்திய கடற்கரை பாதுகாப்பு பிரிவினர் சென்ற விமானத்தின் மீது நெருப்பு அம்புகள் எய்த காட்சிகள் கிடைத்தன.

இந்திய வரைப்படத்திற்குள் இப்படி ஒரு தீவு இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. அதுவும் அறுபதாயிரம் ஆண்டுகள் பழமையான பழங்குடி மக்கள். இவர்கள் மொழி, கலாச்சாரம், சடங்களுகள் எல்லாம் விசித்திரமாக இருந்தன.

Image Credit: Indian Coast Guard

சிலநூறு பேர்!

சிலநூறு பேர்!

இங்கு மொத்தமே சில நூறு மக்கள் தான் வாழ்ந்து வருகிறார்கள். சுனாமிக்கு பிறகு இவர்கள் தீவில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன என்பது குறித்த எந்த தெளிவான தகவல்களும் இல்லை.

சில சமயங்களில் இவர்களை கற்கால பழங்குடி மக்கள் என குறிப்பிடுகிறார்கள். இவர்கள் உலகின் தொலைந்த பழங்குடி மக்களில் கடைசி பிரிவினராக இருக்கலாம் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Image Credit: Survival International

ரூபாயா?

ரூபாயா?

பல முறை இந்திய அரசாங்கம் இவர்களை தொடர்புக் கொண்டு உதவ முயற்சித்தது. ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. ஒரு நாளுக்கு சில நூறு ரூபாய் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாது என நாம் புலம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த தீவில் மக்கள் மீன் பிடித்து, வேட்டையாடி, இயற்கையோடு விளையாடி வாழ்ந்து வருகிறார்கள்.

Image Credit: Associated Press

அழிவு!

அழிவு!

ஆனால், புவி வெப்பமயமாதல் மற்றும் கடல் அளவு அதிகரித்தல், அடிக்கடி புயல், சுனாமி, பூகம்பம் ஏற்படுதல் போன்ற காரணத்தால் இந்த இனம் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்கிறார்கள். இவர்களது ஒரே தொழில் மீன் பிடித்தல் தான். ஆனால், இது எத்தனை நாளுக்கு இவர்களை காப்பாற்றும் என தெரியவில்லை.

Image Credit: Google Maps

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர்...

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர்...

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் இந்த தீவுக்கு சில மீனவர்கள் செல்ல முயற்சி செய்துள்ளனர். ஒருவர் தீவில் இறங்கிவிட்டார் என்றும். அதன் பின் பழங்குடி மக்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, எப்படியோ சமாளித்து திரும்பிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. அங்கே சென்ற மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Image Credit: Youtube

எத்தனை நாட்களுக்கு?

எத்தனை நாட்களுக்கு?

இன்று வரை எப்படி வாழ்ந்து வந்தனர், இப்போது இவர்கள் எப்படி இருக்கிறார்கள்? இவர்கள் வாழ்நாள் இன்னும் எத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடிக்கும்? என பல கேள்விகள் எழுகின்றன. இதற்கான பதிலை அளிக்க யாரும் இங்கில்லை.

கடைசி வரை இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழும் பாக்கியம் பெற்ற அபூர்வ மக்கள் இவர்கள்.

Image Credit:movingshoe

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Banned Island of Indian Ocean, Where 60000 Years Old Tribes Lives Currently!

Banned Island of Indian Ocean, Where 60000 Years Old Tribes Lives Currently!
Subscribe Newsletter