தாய் விபச்சாரி தான்.... ஆனால், மகள் நியூயார்க் பல்கலைகழகத்தில் படிக்க போகிறார்!

Posted By:
Subscribe to Boldsky

விபச்சாரத்தில் யாரும் விருப்பப்பட்டு ஈடுபடுவதில்லை. பல வகைகளில் விபச்சாரத்தில் சிக்குபவர்கள் இருக்கிறார்கள். சிலர் விற்கப்பட்டு, சிலர் ஏமாற்றப்பட்டு, சிலர் விபச்சாரம் செய்யும் பெண்ணுக்கு மகளாக பிறந்த ஒரே காரணத்திற்காக. இதில், மூன்றாம் மகளாக பிறந்த அவதிப்படுபவர்கள் நிலை மிகவும் மோசமானது.

தன் தாய் அனுதினம் படும் அவஸ்தையை அறிந்து, தானும் இந்த நரக குழியில் விழுந்து விடுவோமோ என்ற அச்சத்திலேயே வளர்ந்து மடியும் அப்பாவி ஜீவன்கள் அவர்கள்.

ஆனால், விபச்சாரிக்கு மகளாக பிறந்தால், விபச்சாரம் தான் செய்ய முடியுமா என்ன? உயர பறக்க முடியாதா.. வாழ்வில் சாதிக்க முடியாதா? என கேள்விகளை படிக்கட்டு ஆக்கி, நியூயார்க் பல்கலைகழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்று பறக்க போகிறார் அஸ்வினி...

இது அஸ்வினி தனது வாழ்வில் கடந்து வந்த பாதை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அப்போது என் வயது 5..

அப்போது என் வயது 5..

நான் வாழ்வில் ஓடிக் கொண்டே தான் இருக்கிறேன். அப்போது என் வயது ஐந்து தான் இருக்கும். என் அம்மா ஒரு பாலியல் தொழிலாளி. அவர் அற்பமான விஷயத்திற்கு எல்லாம் என்னை அடிப்பார். நான் அவருக்கு பயந்து ஓடுவேன்.

ஒருமுறை...

ஒருமுறை...

ஒருமுறை நான் என் வயது சிறுவர்களுடன் கண்ணாம்பூச்சி விளையாட்டு ஆடிக் கொண்டிருந்தேன். தவறுதலாக அந்த குடியிருப்பு பகுதியில் நின்றுக் கொண்டிருந்த வரிசையான வாகனங்களை முட்டி தள்ளிவிட்டேன்.

அங்கிருந்த வாட்ச்மேன் எங்கள் தாயார்களிடம் கூறவே... எனது அம்மா என்னை நோக்கி ஆவேசமாக ஒரு துடைப்பக்கட்டை எடுத்துக் கொண்டு அடிக்க ஓடி வந்தார். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக ஓட்டம் பிடித்தேன்...

எட்டு வயதில்...

எட்டு வயதில்...

எனக்கு எட்டு வயது இருக்கும் போது என்னை எனது தாய் ஒரு என்.ஜி.ஓ-வில் சேர்த்துவிட்டார். அங்கே பல வருடங்களை கடத்தினேன். அங்கே எனது ஆசிரியர் என்னை அடித்துக் கொண்டே இருப்பார்.

சொல் பேச்சே கேட்டதில்லை...

சொல் பேச்சே கேட்டதில்லை...

அது ஒரு கிறிஸ்துவ ஹாஸ்டல். அவர்கள் கூறிய ஒரு ரூல்ஸ்-ம் நாங்கள் பின்பற்றியது இல்லை. பல நாட்கள் அடி, பட்டினி தான் எங்கள் கதி. அந்த காலத்தில் தான் என் தாய் இறந்து போனார்.

பத்து வருடங்கள்!

பத்து வருடங்கள்!

இப்படியாக ஒரு பத்து வருடம் கடந்தேன். எனது தோழிகள் சிலர் அந்த இடத்தை விட்டு தப்பி சென்றனர். அவர்கள் கிராந்தி (Kranti) எனும் இடத்திற்கு சென்றனர். அங்கே நிலை நன்றாக இருப்பதாக கூறி என்னையும் அழைத்தனர். கடைசியாக ஒருநாள் நானும் தப்பி சென்று கிராந்தியை அடைந்தேன்.

நல்வாழ்க்கை!

நல்வாழ்க்கை!

அங்கே தான் என் வாழ்க்கை நல்வாழ்க்கையாக திசைமாறியது. எங்களுக்கு கல்வி, கலைகள் கற்றுக் கொடுத்தனர். வாரம் ஒருமுறை எங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நான் கற்றுக் கொண்டதை என்னை போன்ற குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

புற்றுநோய் குழந்தைகள்!

புற்றுநோய் குழந்தைகள்!

டாடா மெமோரியல் ஹாஸ்பிடலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முன் நாங்கள் நடனம் ஆடுவோம். அவர்கள்அச்சமின்றி இருக்க நாங்கள் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தோம்.

ஓர் பயணம்!

ஓர் பயணம்!

கடந்த இரண்டு வருடங்களில் இந்தியா முழுதும் பயணம் சென்றேன். மேற்கு வங்காளத்தில் தியேட்டர் பயிற்சி, ஹிமாச்சலில் புகைப்பட கலை, குஜராத்தில் தன்னார்வ வேலைகள், டெல்லி தலித் சமுதாயத்தில் வேலை என பல சூழல்களை கடந்தேன்.

சிறந்த தெரபிஸ்ட்!

சிறந்த தெரபிஸ்ட்!

இந்த பல படிப்பினைகள் என்னை சிறந்த கலை தெரபிஸ்ட்டாக மாற்றியது. பிறகு நான் நியூயார்க் பல்கலைகழகத்தில் அப்பளை செய்தேன். அங்கே எனக்கு பெரிய ஸ்காலர்ஷிப் கிடைத்தது. எனது மொத்த கட்டணத்தையும் அவர்களே ஏற்றுக் கொண்டனர். கல்லூரி பயில வேண்டும் என்ற எனது கனவு நனவானது.

செகண்ட் இன்னிங்க்ஸ்!

செகண்ட் இன்னிங்க்ஸ்!

"எனது வாழ்க்கை நான் சிறந்த வாழ்க்கை வாழ எனக்கு இரண்டாம் வாய்ப்பு அளித்தது....."

இப்போது அஸ்வினி நியூயார்க்கில் தங்க மற்றும் அன்றாட செலவுக்கு மட்டும் பணம் ஏற்பாடு செய்தால் போதும். அவரது கல்லூரி படிப்புக்கு நீங்கள் உதவ தயாராக இருந்தால் இந்த லிங்கை க்ளிக் செய்து உதவலாம்...

https://www.ketto.org/fundraiser/helpashwini

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dauthter of Prostitute Got a Scholorship to Study in Newyork Unuversity!

Ashwini has managed to get a scholarship at New York University which covers her entire tuition but not her room, boarding and day to day expenses.