For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இக்கொடுமைகள் பற்றி அறிந்தால், உங்க கண்ணுல கண்ணீருக்கு பதிலா இரத்தம் கூட வரலாம்!

  |

  "ஒரு நாட்டின் விலங்குகள் எப்படி மதிக்கப்படுகிறதோ, அதை வைத்தே அந்நாட்டின் மேன்மை மற்றும் வளர்ச்சியை அறிந்துக் கொள்ள முடியும்." காந்தியின் இந்த வரிகள் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

  நாம் பாசமாக வளர்க்கும் செல்ல பிராணிகளில் இருந்து, தெருக்களில் திரியும் பிராணிகள் முதல், நமது அன்றாட தேவைகளுக்காக இரையாகும் அப்பாவி ஜீவன்கள் எத்தகைய கொடுமைகளை அனுபவித்து வருகிறது என்பதை நாம் அறிவதில்லை. அறிந்துக் கொள்ள முயற்சிப்பதும் இல்லை.

  ஒருவேளை இக்கொடுமைகள் பற்றி அறிந்தால், உங்க கண்ணுல கண்ணீருக்கு பதிலா இரத்தம் கூட வரலாம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஃபர் (Fur)

  ஃபர் (Fur)

  ஃபர் எனப்படும் விலங்குகளின் ரோமங்கள் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களுக்காக மட்டும் ஒரு ஆண்டுக்கு சர்வதேச அளவில் இருபது இலட்சம் பூனைகள் மற்றும் நாய்கள் கொல்லப்படுகின்றன. இந்த விலங்குகளை எல்லாம் மயக்க ஊசிப் போட்டு கொல்கிறார்கள் என நினைக்கிறீர்களா? இரும்பு கம்பிகளால் அடித்து, எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, பைகளில் போட்டு அடித்து, கழுத்தை நெரித்து என பல கொடுமையான வழிகளில் கொன்றுக் குவிக்கிறார்கள். இது, ஃபர் தொழிற்சாலைகளில் மட்டும்.

  Image Credit: youtube

  சீனா, ஹாங்காங்

  சீனா, ஹாங்காங்

  உலகின் பல்வேறு நாடுகளில் விலங்குகளை பாதுகாக்கும் சட்டத்திட்டங்கள் இருக்கின்றன. அத்தனை சட்டங்கள் இருந்தும் எப்படி வருடத்திற்கு இருபது இலட்சம் பூனை, நாய்கள் கொல்லப்படுகின்றன? சீனா, ஹாங்காங் நாடுகளில் தான் பெருமளவில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்கள் நடக்கின்றன. இந்த நாடுகளில் வீட்டுப்பிராணிகள், காட்டில் வளரும் பிராணிகள் என பிரித்து பார்க்கும் பாகுபாடு எல்லாம் இல்லை. வீட்டில் வளர்க்கும் பிராணிகளையும் பணத்திற்காக கொல்ல இவர்கள் தயங்குவது இல்லை.

  டால்பின்

  டால்பின்

  நாய்க்கு பிறகு மனிதரிடம் மிகவும் அன்புடன் பழகும் பிராணி டால்பின். டென்மார்க்கில் மட்டுமே வருடத்திற்கு ஆயிரக்கணக்கான டால்பின்கள் வெறும் சடங்குக்காக கொல்லப்படுகின்றன. இது அந்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் நடக்கும் பாரம்பரிய சடங்காம். இந்த மாடர்ன் யுகத்தில் சடங்கு, சம்பிரதாய நம்பிக்கை எல்லாம் இருக்கிறதா? என கருதுபவர்களுக்கு இது பெரும் ஆச்சரியத்தை அளிக்கலாம். கற்காலத்தில் கூட இப்படி யாரும் நடந்திருக்க மாட்டார்கள்.

  Image Credit: earthweek

  நீர்நாய்

  நீர்நாய்

  ஐரோப்பிய யூனியனில் நீர்நாய்களை கொத்துக் கொத்தாக கொன்றுக் குவிக்கிறார்கள். இதனால், நீர் நாய் இனம் தனது அழிவின் நுனியில் இருக்கிறது. கனடாவில் நீர்நாய் இனத்தை குறித்த ஒரு விழிப்புணர்வு பாடல் இதற்காகவே இயற்றப்பட்டது. உலகம் முழுவதும் இருக்கும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

  Image Credit: youtube

  கோழி

  கோழி

  தெரிந்தே கொடுமை செய்வதற்கு இணையாக, தெரியாமலும் கொடுமைகள் நடக்கிறது. முக்கியமாக சேவல், கோழி வளர்க்கும் பண்ணைகளில். மூச்சுவிடக் கூட முடியாத கூண்டில் அடைத்து வைத்திருப்பார்கள். பத்துக்கு, பத்து அறையில் பத்துப் பேருக்கு மேல், கூடுதலாக ஒருவரை அடைத்து வைத்தாலும் நம்மால் இருக்க முடியுமா? ஓரடிக்கு, ஓரடி கூட இல்லாத கூண்டில் ஐந்தாறு கோழிகளை அடைத்து வைத்து வளர்த்து வருவோம்.

  Image Credit: youtube

  பன்றி

  பன்றி

  பன்றிகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் மிகவும் கொடுமை. இறைச்சி மற்றும் இதர தேவைகளுக்காக கொல்லப்படும் பன்றிகள், இரும்பு கம்பிகளால் கொண்டு அடித்தே கொல்லப்படுகின்றன. இதே கதி, பல விலங்குகள் பண்ணையில் நடக்கிறது.

  Image Credit: plantbasednews

  மாடு

  மாடு

  பன்றிகளுக்கு இந்த கதி என்றால் மாடுகளின் கதியை கண்டால், சிலர் கண்களில் இரத்தம் வழிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மாடுகளை மெஷின்களுக்குள் அனுப்பி கொல்கிறார்கள்.

  குறைந்தபட்சம், மாட்டை ஊசிப் போட்டு கொன்றாவது அந்த மெஷினுக்குள் அனுப்பலாம். ஆனால், உயிருடனே அனுப்புகிறார்கள். அது உயிருடன் இருக்கும் போதே தோல் தனியாக உரித்து எடுக்கப்படுகிறது. முடிந்தால் யூடியூப் வீடியோ எதாவதை தேடி பாருங்கள், அதன் வலி புரியும்.

  Image Credit: occupyforanimals

  எலி

  எலி

  இந்த உலகிலேயே மிகவும் பாவம் செய்த ஜீவன் எலிகள் தான். அறிவியல் விஞ்ஞானி என்ற போர்வையில், எலிகளை நாம் செய்யாத சித்திரைவதை இல்லை. இதனால் அதற்கு என்ன வலி ஏற்படும் என்பதை நாம் அறிந்துக் கொள்ள முயல்வதில்லை. எலி தானே போனால் போகட்டும்.

  மனிதர்களில் என்ன ஏழைப் பணக்காரன் வித்தியாசம் என கூவும் நமக்கு, உயிர்களில் என்ன எலி, மனிதன் என்ற வேறுபாடு, அனைத்தும் உயிர் தானே என பார்க்க நல்ல கண்களும் இல்லை, மனதும் இல்லை.

  Image Credit: peta

  அமெரிக்கா

  அமெரிக்கா

  விலங்குகளை சித்திரவதை செய்யும் நாடுகளின் பட்டியலில் ப்ளோரிடா, கலிபோர்னியா, பென்சில்வேனியா போன்ற பகுதிகள் முதன்மை இடத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மட்டுமே ஆராய்ச்சிக்காக 11 இலட்சம் விலங்குகள் கொல்லப்படுகின்றன.

  அழிவு

  அழிவு

  ஆய்வுக் கூடங்களில் துவங்கி, மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களின் தயாரிப்புக்கு தேவை என ஒவ்வொரு வருடமும் பல இலட்சக்கணக்கான விலங்குகளை கொன்றுகுவித்து வருகிறோம். இந்த காரணத்தால் பல அரிய உயிரனங்கள் அழிந்தேவிட்டன.

  உதவி

  உதவி

  விலங்குகள் ஒருபோதும் தங்கள் வாழ்வை காப்பாற்றிக் கொள்ளவோ, ஒரு வேலை சோற்றுக்காகவோ, பிற மனிதர்களை போல பிச்சைக் கேட்டது இல்லை. வாயில்லா ஜீவன் என பெயர்சூட்டி, அதை வன்கொடுமை செய்து கொன்று அழித்து வருகிறோம். அவற்றை, அவற்றின் போக்கில் விட்டால் மட்டுமே போதும். அதைவிட விலங்குகளுக்கு மனிதர்கள் பெரிய நன்றியோ, உதவியோ செய்துவிட முடியாது.

  காடு அதன் வீடு

  காடு அதன் வீடு

  காட்டுக்குள் சென்று வீடு கட்டிவைத்துவிட்டு. யானை என் நிலத்தில் பயிரை நாசம் செய்துவிட்டது. எனது வீட்டுக்குள் புகுந்துவிட்டது என எலக்ட்ரிக் வேலி அமைத்து அவற்றை கொடூரமாக கொல்கிறோம். இந்த உலகிலேயே ஈவிரக்கமற்ற, மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட உயிரனம் மனிதர்கள் மட்டுமே.

  என்ன இனம் நாம்?

  என்ன இனம் நாம்?

  இந்த உலகிலேயே ஓர் இனத்தை பற்றி அந்த இனமே அவதூறாக தூற்றி எழுதி, படித்து அதற்கு விமர்சனமும் செய்வது நாம் மட்டுமே தானே!

  குழந்தையை ஒருவன் கற்பழித்துவிட்டான் என்ற செய்தியை படிக்கும் போது நமக்குள் என்னவொரு வேதனை ஏற்படுகிறதோ. அதே வேதனை ஒரு விலங்குக்கு உண்டாகும் போதும் ஏற்பட வேண்டும்.

  விலங்குகளையும் கூட பாலியல் கொடுமைக்கு உட்படுத்திய இனம் தானே நாம்! இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  These Animal Cruelty Facts Will Bring Tears on Your Eyes!

  These Animal Cruelty Facts Will Bring Tears on Your Eyes!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more