For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதை வெளிகாட்டும் முதல் அறிகுறி இதுதானாம்!

நுகரும் உணர்வு மரணத்தை குறிக்கும் அறிகுறி என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

|

புதிய ஆய்வொன்றில், நுகரும் உணர்வை இழப்பது, மரணத்தை குறிக்கும் அறிகுறிகளில் ஒன்று என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது வயது, பாலினம், டிமென்ஷியாஎனும் மன சோர்வு நோய் சார்ந்து வேறுபடும் என்றும் கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்!

ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்!

இந்த ஆய்வு ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வை நடத்தியவர் டாக்டர் ஜோன்ஸ் எனும் முதன்மை ஆராய்ச்சியாளர் ஆவார்.

ஆய்வு!

ஆய்வு!

இந்த ஆய்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். ஆய்வில் கலந்துக் கொண்டவர் 40 - 90 வயதுக்குட்பட்டவர்கள்.

8%

8%

சுகாதாரம் மற்றும் அறிவாற்றல் சார்ந்து யாரெல்லாம் சரியாக நுகரும் திறன் கொண்டிருந்தனரோ அவர்கள் எல்லாம் 8% இறக்கும் வாய்ப்பு குறைவாக கொண்டிருந்தனர்.

19%

19%

சாதாரணமாக நுகரும் திறன் கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில், யாருக்கெல்லாம் வாசனை நுகர்ந்து கண்டறிவதில் சிரமம் இருந்ததோ அவர்கள் 19% வேகமாக இறக்கும் வாய்ப்பு கொண்டிருந்தனர்.

23%

23%

இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட 1774ல் 411பேர் ஆய்வு நடத்தி கொண்டிருந்த காலத்திலேயே இறந்துவிட்டனர். அவர்கள் எல்லாம் இவர்களில் சரியாக வாசனை நுகர்வும் திறன் கொண்டவர்கள் 8% குறைவான இறக்கும் சதவீதம் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிகுறி!

அறிகுறி!

இதை வைத்து, ஆய்வாளர்கள், வாசனை நுகரும் திறனானது, நடுவயது மற்றும் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் மரணத்தை வெளிப்படுத்தும் அறிகுறியாக இருக்கிறது என கூறியுள்ளனர்.

மூளை!

மூளை!

நுகரும் திறனானது, மூளையின் வயது / செயற்திறனை குறிப்பதாக இருக்கிறது என்றும் இந்த ஆய்வை நடத்தியவர்கள் பரிசோதனைகளுக்கு பிறகு கூறியுள்ளனர்.

வேறுபடும்!

வேறுபடும்!

சிலருக்கு மூக்கு பகுதியில் விபத்து அல்லது சைனஸ் போன்ற வேறு ஆரோக்கிய காரணங்களால் கூட நுகரும் திறனில் குறைபாடு இருக்கலாம். இந்த நிலைகளுக்கு இது பொருந்தாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Recent Study Says, Losing your sense of of smell is a Sign of Death!

A Recent Study Says, Losing your sense of of smell is a Sign of Death!
Desktop Bottom Promotion