இந்தியாவின் சூப்பர் டேலன்ட், நாம் மறந்து போன குற்றாலீஸ்வரன், என்ன ஆனார்?

Posted By:
Subscribe to Boldsky

குற்றால் ரமேஷ் என்பது தான் குற்றாலீஸ்வரனின் உண்மை பெயர். இந்தியாவிற்கே பெயர் தேடித்தந்த சாதனை தமிழன். அன்றே இவரை போற்றி, ஊக்கவித்திருந்தால் இன்று ஒலிம்பிக்கில் பல தங்க பதக்கங்கள் கிடைத்திருக்கலாம்.

A Forgoten Super Talent, The Unsung Hero Kutraleeswaran!

மறப்பதும், மறந்த பிறகு நீண்ட ஆண்டுகள் கழித்து அதற்காக வருந்துவதுமே நமது பழக்கமாகிவிட்டது. தீமையை தட்டிக் கேட்க தயங்குவதை விட கொடுமையானது, திறமைகளை தட்டிக்கழிப்பது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாரத்தான் ஸ்விம்மிங்!

மாரத்தான் ஸ்விம்மிங்!

ஓட்டப்பந்தயத்தில் மட்டுமல்ல, நீச்சலிலும் மாரத்தான் பிரிவு இருக்கிறது. ஒரே ஆண்டில் ஆறு கால்வாய்களை நீந்தி கடந்து மிஹிர் சென் என்பவரின் சாதனையை முறியடித்தார்.

கின்னஸ் சாதனை!

கின்னஸ் சாதனை!

1994-ல் ஆங்கில கால்வாய் நீந்தும் முன்னர், குற்றலீஸ்வரன் பால்க் ஸ்ட்ரைட் (Palk Strait), ரோட்நெஸ்ட் கால்வாய் (Rottnest Channel,Australia), ஸ்ட்ரைட்ஸ் ஆப் மெஸினா (Straits of Messina, Italy), சன்னோன் சிர்சியோ (Zannone Circeo, Italy), டென் டிகிரி சேனல் (Ten Degree Channel) போன்ற கால்வாய்களை நீந்த, ஒரே வருடத்தில் ஆறு கால்வாய் நீந்தியவர் என்ற கின்னஸ் சாதனை புரிந்தார்.

பாட புத்தகம்!

பாட புத்தகம்!

இவரது வாழ்க்கை தமிழக பாடப்புத்தகத்தில் இடம் பெற்றது. எல்லாருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக, ஊக்கம் அளிக்கும் நபராக திகழ்ந்தார் குற்றாலீஸ்வரன். இந்த சாதனைகள் எல்லாம் தனது 15 வயதுக்குள் செய்து முடித்தார் குற்றாலீஸ்வரன்.

ஒலிம்பிக் செல்ல வேண்டியவர்....

ஒலிம்பிக் செல்ல வேண்டியவர்....

இப்படிப்பட்ட திறமைமிக்க ஒரு நீச்சல் வீரர் ஒலிம்பிக்கில் மெடல் வெல்ல ஊக்கவைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்ன? ஆனால், எதிர்பார்த்து ஏமார்ந்து போனவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள்.

25-ல் ஒருவர்!

25-ல் ஒருவர்!

உலகெங்கிலும் இருந்து உலக நீச்சல் சீரியஸ்-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் குற்றாலீஸ்வரனும் ஒருவர்.ஆசியாவில் இருந்த குற்றாலீஸ்வரன் ஒருவர் மட்டுமே தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சார்பாக!

இந்தியா சார்பாக!

இந்தியாவின் சார்பாக ஆறு முறை உலகளவிலான போட்டிகளில் பங்கேற்றார் குற்றாலீஸ்வரன். இதில் ஸ்விட்சர்லாந்தில் நடந்த போட்டியில் வெற்றியும் பெற்றார். இந்த சாதனைக்காக இளம் வயதிலேயே அர்ஜுனா விருது வென்றார் குற்றாலீஸ்வரன்.

ஸ்பான்சர்ஸ்!

ஸ்பான்சர்ஸ்!

திறமை இருந்தும் போதியளவு அரசாங்கம் அல்லது ஸ்பான்சர் உதவி இல்லாததால் கடுமையான சூழலை எதிர்கொண்டார் குற்றாலீஸ்வரன். பலமுறை அரசாங்கத்திடம் முயற்சித்தும் எந்த பலனும் பெரிதாக இல்லை.

மனதளவில் பாதிப்பு!

மனதளவில் பாதிப்பு!

ஒரு முறை ஜெர்மனி சென்று பங்கேற்க டிக்கட் எல்லாம் ஏற்பாடு ஆனபிறகு, ஸ்பான்சர்கள், நாங்கள் ஸ்பான்சர் செய்ய விரும்பவில்லை என கடைசி நேரத்தில் பின்வாங்கியது குற்றாலீஸ்வரனை மனதளவில் பெரிதாக பாதித்தது.

ஒலிம்பிக் மெடல்...?

ஒலிம்பிக் மெடல்...?

தான் இந்தியாவிற்காக ஒலிம்பிக் மெடல் வெல்ல வேண்டும் என்ற குற்றாலீச்வரனின் கனவும், அவரது மனதுடன் சேர்ந்து உடைந்து போனது. இதன் பிறகு தான் நீச்சலில் இருந்து படிப்பில் ஆர்வத்தை திருப்பினார் குற்றாலீஸ்வரன்.

என்ஜினியர்!

என்ஜினியர்!

என்ஜினியரிங் படித்து, பிறகு மாஸ்டர் டிகிரி படிக்க டெக்சாஸ் பல்கலைகழகத்தில் சேர்ந்தார் குற்றாலீஸ்வரன். பின்னர் இன்டலில் அவருக்கு வேலையும் கிடைத்தது.

கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டு...

கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டு...

நம் நாட்டில் மனிதர்கள் மத்தியில் மட்டுமல்ல, விளையாட்டில் கூட ஜாதி, மதம் போன்ற பாகுபாடு இருக்கின்றது. அதனால், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கு கிடைக்கும் புகழ், பணம் மற்ற விளையாட்டுகளுக்கு கிடைப்பதில்லை. சானியா மிர்சா, பிவி.சிந்து, சாய்னா, விஸ்வநாதன் ஆனந்த் என விளையாட்டுக்கு ஓரிருவர் தான் ஜொலிக்க முடிகிறது. அதுவும், அவரவர் சொந்த முயற்சியால்.

130+ கோடி!

130+ கோடி!

நூற்று முப்பது கோடிகளுக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு, ஒரே ஒரு தங்க பதக்கம் வென்று அதை வரலாற்றில் பதித்து மெச்சிக் கொள்கிறது. இங்கே குற்றாலீஸ்வரன் போல தட்டிக்கழிக்கப்பட்டவர்கள் ஆயிரம், ஆயிரம் பேர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Forgoten Super Talent, The Unsung Hero Kutraleeswaran!

A Forgoten Super Talent, The Unsung Hero Kutraleeswaran!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter