மனிதர்கள் மீது செயற்படுத்தப்பட்ட 7 கொடூரமான பரிசோதனைகள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் நிறைய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. உலக மனித பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்புகள் எந்த வகையான பரிசோதனைகளும் முழுமை அடையாமல் அதன் வீரியம் அறியாமல் மனிதர்கள் மீது செயற்படுத்த கூடாது என வலியுறுத்தி வருகிறது.

ஆயினும், உலகின் பல நாடுகளில் கடந்த நூற்றாண்டு காலமாக மனிதர்கள் மீது பல கொடூர பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வல்லரசு ஆகவேண்டும், வல்லரசு தகுதியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பல நாடுகள் இந்த செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலேரியா!

மலேரியா!

மலேரியா ஓர் உயிர் கொல்லும் நோய் ஆகும். இரண்டாம் உலக போரின் போது, தனது சிறையில் இருந்த உதவியற்ற கைதிகள் மீது மலேரியா தாக்கம் உண்டாகும் கொசுக்களை கடிக்க செய்து அமெரிக்கா பரிசோதனை செய்தது.

அடிமைகள்!

அடிமைகள்!

அடிமை வாழ்க்கை குறித்து யாரும் முழுமையாக, தெளிவாக அறிந்தது இல்லை. உலகின் பல இடங்களில் அடிமைகள் மீது பல கொடூரங்கள் நடத்தப்பட்டன. அதிலும் பெண்கள் மீது ஏராளமான முறையில்.

மாடர்ன் பெண்ணோயியல் மருத்துவ தந்தை என அறியப்படும் மாரிசன் சிம்ஸ், பெண் அடிமைகள் மீது பெண்ணுறுப்பை துன்புறுத்தும் வகையிலான பரிசோதனைகளை செய்தார். இதனால் அவர்களது பெண்ணுறுப்பு மற்றும் சிறுநீர் பை கிழியும் அளவிற்கு வேதனை அனுபவித்தனர்.

Image Courtesy

மஸ்டர்ட் கேஸ்!

மஸ்டர்ட் கேஸ்!

1940-ல் ராணுவ வீரர்களின் கவனத்திற்கு எடுத்து செள்ளமாலேயே அவர்கள் முகத்தில் மஸ்டர்ட் கேஸ் மற்றும் சில கெமிக்கல் பரிசோதனை செய்யப்பட்டது.

இது ஒரு பெரும் குற்றம் என்பதை தாண்டி மனித வதை சம்பவமாக அரங்கேறியது. பாதுகாப்பு கியர்கள் பயன்படுத்தப்பட்டாலும், அவை சரியாக பயன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy

தி சாம்பர்!

தி சாம்பர்!

தி சாம்பர் என்ற பெயரில் சோவியத் இரகசிய போலீசார்கள், அவர்களது கைதிகள் மெது விஷத்தன்மை உடைய வாயுவை பரிசோதனை செய்தனர்.

அவை வாசம் மற்றும் சுவை இல்லாதவை என்பதால் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தெரியாமலேயே அவர்கள் அவதிக்குள்ளாகினர்.

Image Courtesy

கதிர்வீச்சு பரிசோதனை!

கதிர்வீச்சு பரிசோதனை!

1952-ல் மார்ஷல் தீவு மக்கள் மீது அபாயகரமான கதிர்வீச்சு பரிசோதனை நடத்தப்பட்டது.

Image Courtesy

டாக்டர் ஷிரோ இஸ்ஷி!

டாக்டர் ஷிரோ இஸ்ஷி!

ஜப்பான் மருத்துவரான டாக்டர் ஷிரோ இஸ்ஷி, இரண்டாம் சினோ - ஜப்பான் போரின் போது மனிதர்கள் மீது பல அபாயமான பரிசோதனைகளை நடத்தினார்.

இதில், இவர் மனிதத்தன்மையின்றி கர்ப்பிணி பெண்கள் மீது நடத்திய ஸ்ட்ரோக் மற்றும் மாரடைப்பு உண்டாக்கும் சோதனைகள் கொடுமையான பரிசோதனைகள் ஆகும்.

Image Courtesy

ஏஜென்ட் ஆரஞ்சு பரிசோதனை!

ஏஜென்ட் ஆரஞ்சு பரிசோதனை!

வியட்நாம் போரின் போது குழந்தை கைதிகள் மீது தோல் விளைவுகள் குறித்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதை டாக்டர் ஆல்பர்ட் என்பவர் செய்தார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Horrific Human Experiments Conducted In the World

http://sarcasmlol.com/wp-content/uploads/2016/09/the-most-evil-experiments-on-humans-that-will-traumatize-you-652x400-10-1449579820.jpg
Please Wait while comments are loading...
Subscribe Newsletter