உலகின் ஒரிஜினல் ஓநாய் மனிதன் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஓநாய் மனிதர்கள் என்பது பெரும்பாலும் நாம் படங்கள், கதைகளில் தான் கேள்விப்பட்டிருபோம். அமேசான் காடுகளின் அடர்த்தியான பகுதிகளில் வசிக்கும் காட்டு வாசிகள் மிருகங்களுடன் சேர்ந்து வாழ்ந்து வரலாம்.

Meet The Original Wolf Man Who lives in a Pack

Image Courtesy

ஆனால், நாம் கண்கூடாக பார்த்து ஓநாய்களுடன் வாழ்ந்த மனிதன் தி ஜங்கிள் புக்கில் வரும் மோக்லி தான். நிஜமாகவே உலகில் ஒரு ஓநாய் மனிதன் வாழ்ந்து வருகிறார்.

அவர் வுல்ப் பேக் எனப்படும் ஓநாய் குடும்பத்தில் தன்னை ஒருவராக இணைத்துக் கொண்டுள்ளார் என்பது ஆச்சரியம் அளிக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷான் எல்லிஸ்!

ஷான் எல்லிஸ்!

இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் டேவன் எனும் பகுதியை சேர்ந்தவர் ஷான் எல்லிஸ். இவர் தான் ஓநாய்களுடன் வாழ்ந்து வரும் உலகின் உண்மையான ஓநாய் மனிதன். தன்னை தானே ஓநாய் குடும்பத்துடன் ஒருங்கிணைத்து கொண்டுள்ளார் ஷான் எல்லிஸ்.

வேட்டையன்!

வேட்டையன்!

47 வயது மிக்க ஷான் எல்லிஸ் ஒரு வேட்டை விலங்கு போல வாழ்ந்து வருகிறார். ஓநாய்கள் போலவே இவரும் வெறும் இறைச்சி மட்டும் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தில் ஒருவன்!

குடும்பத்தில் ஒருவன்!

ஓநாய் குடும்பத்தில் தன்னை ஒருவனாக கருதும் ஷான் எல்லிஸ், தனது ஐலா எனும் தனது மனைவி செய்யும் அசாதாரண ஆராய்ச்சிக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல்!

காதல்!

ஷான் எல்லிஸ் மற்றும் ஐலா முதல் பார்வையிலேயே காதலில் விழுந்த ஜோடி. ஷான் எல்லிஸ்-ன் இயல்பை, இயற்கையான குணாதிசயங்களை தான் மிகவும் விரும்புவதாக கூறுகிறார் ஐலா.

தன் கனவுகளை நிஜமாக்கும் ஒரு மனிதரை கண்டத்திலும், அவருடன் உறவில் இணைவதிலும் தான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்வதாக ஐலா மேலும் கூறுகிறார்.

குதிரை கால்!

குதிரை கால்!

வாரத்திற்கு ஒரு முறை தான் இணைத்துள்ள ஓநாய் குடும்பத்திற்கு குதிரை கால்களை உணவாக எடுத்து சென்று அளிக்கிறார் ஷான் எல்லிஸ்!

தனது ஓநாய் குடும்பத்தில் ஒரு தீர்கமான முடிவை எடுக்கும் பெண் ஓநாயும், ஆதிக்கம் செலுத்தும் ஆண் தலைவன் ஓநாயும் இருப்பதாய் கூறுகிறார் ஷான் எல்லிஸ்!

பொய்!

பொய்!

பௌர்ணமி நாட்களில் ஓநாய்கள் வேட்டையாடும், அவை இரக்கமற்ற விலங்குகள் என்பதெல்லாம் பொய். அவை குடும்பத்தின் மீது மிகவும் அன்பு செலுத்தும் வகையிலான விலங்குகள் என்கிறார் ஷான் எல்லிஸ்! இவற்றுடன் பழகுவது மிகவும் இன்றியமையாக உணர்வை தருகிறது என்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Meet The Original Wolf Man Who lives in a Pack

Meet The Original Wolf Man Who lives in a Pack
Subscribe Newsletter