For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேற்று பாகிஸ்தான் #Chaiwala, இன்று நேபாள #Tarkariwali - சமூக ஊடகத்தால் பிரபலமாகும் சாமானியர்கள்!

சமூக ஊடகம் இப்போது பிரபலமாக்கும் பெரும் சக்திவாய்ந்த கருவியாக மாறி நிற்கிறது. பாகிஸ்தான் #Chaiwala-க்கு பிறகு, இப்போது நேபாளத்தின் #Tarkariwali.

|

சென்ற மாதம் பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் கானின் படங்கள் இன்ஸ்டாகிராமில் கசிந்து அவரை உலக புகழ் அடைய வைத்தது. பிறகு ஒருசில நாட்களிலேயே அவரை பாகிஸ்தானின் பிரபல டிவி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்து புகழை பன்மடங்கு உயர்த்தினர். அவர் இப்போது மாடல் என்ன ஹீரோ ஆகும் லெவலில் இருக்கிறார்.

அடுத்ததாக இப்போது நேபாளத்தை சேர்ந்த குசும் ஷ்ரேஷ்டா என்ற பெண் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எல்லா சமூக ஊடகங்களிலும் #Tarkariwali என்ற ஹேஸ்டாக் மூலமாக பிரபலமடைந்து வருகிறார். பிரபல நேபால் டிவி சேனல் ஒன்று இவரை பேட்டி நேர்காணல் கண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனியுரிமை பறிபோகிறதா?

தனியுரிமை பறிபோகிறதா?

உண்மையில் அர்ஷத் கான், குசும் ஷ்ரேஷ்டா இருவரின் புகைப்படங்களும் அவர்களுக்கு தெரியாமலேயே பகிரப்பட்டு பிரபலமானது என்பது தான் உண்மை. புகழ் என்பது ஒருபக்கம் இருப்பினும், அழகாக இருந்தால் யாரை வேண்டுமானால், அவரது ஒப்புதல் இன்றி படம் பிடித்து சமூக தளத்தில் பதிவு செய்யலாமா? இது வரும் காலத்தில் எங்கு பொய் நிற்கும்.

ஒரே நல்ல விஷயம்...

ஒரே நல்ல விஷயம்...

இவர்கள் இருவர் விஷயத்தின் மூலம் நாம் அறியும் ஒரே நல்ல விஷயம். இதுநாள் வரை தவறான அணுகுமுறையில் தான் பெண்களின் படங்கள் இணையத்தில் பகிரப்பட்டன. இப்போது தான் முதல் முறை காமம் தவிர்த்து அழகை கண்டு பகிரப்பட்டுள்ளது.

கேள்விகள்...

கேள்விகள்...

இதே ஒரு பணக்கார வீட்டு ஆண் அல்லது பெண்ணின் புகைப்படத்தை இப்படி அவர்களது ஒப்புதல் இல்லாமல் எடுத்து வெளியிட முடியுமா? அப்படி வெளியிட்டு அதை சட்ட ரீதியாக கொண்டு சென்றால் அதற்கான தண்டனை என்ன? இது சமூக சீர்கேடா அல்ல புகழ் மற்றும் பிரபலம் அடைய இது ஒரு கருவியாக பயனப்டுதப்படுகிறதா?

அழகு என்றால் என்ன வேண்டுமானால் செய்யலாமா?

அழகு என்றால் என்ன வேண்டுமானால் செய்யலாமா?

இன்று வானோங்கி வளர்ந்து நிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணத்தால் யாரது முகத்தை வேண்டுமானால், யாருடைய உடலுடன் சேர்க்கலாம். இதன் காரணத்தால் தான் பெரும்பாலான பெண்கள் தங்கள் சொந்த படத்தை ஃபேஸ்புக் போன்ற சமூக தளத்தில் பதிவேற்றம் செய்ய தயங்குகிறார்கள்.

இதுவே நம் வீட்டு பெண்ணாக இருந்தால்?

இதுவே நம் வீட்டு பெண்ணாக இருந்தால்?

இது போன்ற காலக்கட்டத்தில் நல்ல நோக்கத்தில் சமூக தளத்தில் பதிவு செய்தாலும், கெட்ட புத்தி கொண்டவர்கள், அப்பாவி பெண்களின் படத்தை வேறு செயல்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்புகள் ஏராளம் இருக்கிறது. இதுவே நம்ம வீட்டு பெண்கள் என்றால் அழகாக இருக்கிறார்கள் என்று நாம் இணையத்தில் பகிர்வோமா?

சட்டங்கள் தேவை...

சட்டங்கள் தேவை...

நாளிதழ், வானொலி, டிவி, திரைப்படம் என ஒவ்வொரு ஊடகம் உதித்து வளர்ச்சி கண்ட போதிலும் அதை வரைமுறைப்படுத்த, கட்டுப்படுத்த அரசாங்கம் தனி சட்டங்கள் மற்றும் அதை ஒழுங்காக நடத்த குழுக்கள் வைத்திருந்தன. ஆனால், சமூக தளங்களில் இது கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழல் இருப்பதால் சுய வாழ்க்கை, தனிப்பட்ட விஷயங்கள் மிக எளிதாக உலகம் முழுவதும் பரவிவிடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

After Chaiwala From Pakistan, Now It's Tarkariwali From Nepal

After Chaiwala From Pakistan, Now It's Tarkariwali From Nepal, Social media become a strong popularity tool.
Desktop Bottom Promotion