Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
மேஷத்தில் உருவாகும் கஜகேசரி யோகத்தால் இந்த 5 ராசிக்காரங்களுக்கு வாழக்கையில் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு நேரத்திலும் நிகழும் யோகங்கள் நம் வாழ்க்கையை வெவ்வேறு வழிகளில் பாதிக்கின்றன. கிரகங்கள் மற்றும் ராசிகளில் ஏற்படும் மாற்றங்கள் பல வழிகளில் மாற்றங்களை கொண்டு வருகின்றன.

ஜோதிடத்தின் படி குருபகவான் மே 1 ஆம் தேதி வரை மேஷ ராசியில் இருக்கிறார். மேலும் சந்திரனும் மேஷ ராசியில் இருக்கிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால்தான் கஜகேசரி யோகம் உருவாகிறது.
கஜகேசரி யோகத்தால் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். கஜகேசரி யோகம் வாழ்க்கையை மாற்றும் சூழ்நிலையை உருவாக்கிறது. இது ஒரு அதிர்ஷ்டமான கிரக பெயர்ச்சியாகும். இந்த யோகத்தால் அனைத்து ராசிக்காரர்களும் பலன்களைப் பெறுவார்கள், இருப்பினும் சில ராசிக்காரர்கள் இதனால் கூடுதல் அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் பெறுவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
கஜகேசரி யோகம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கைப் போக்கையே மாற்றுகிறது. முக்கிய விஷயம் என்னவென்றால், அவர்கள் எந்த வகையான உடல்நலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படப் போவதில்லை.
அது தவிர, இந்த யோகம் முழுவதும் நிதி விஷயங்களுக்கு அவர்கள் வேறு யாரையும் அவர்கள் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் கை வைக்கும் அனைத்து விஷயங்களும் அவர்களுக்கு வெற்றியைத் தரும். வணிகர்கள் தங்கள் வியாபாரத்தில் பெரிய நன்மைகளைப் பெறலாம். மேலும் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும்.
மிதுனம்
இந்த கஜகேசரி யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது, இந்த யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவார்கள். அளவற்ற செல்வத்தால் தாங்கள் வாங்கிய கடனை திரும்ப அடைப்பார்கள்.
பணியில் இருப்பவர்களுக்கு உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை மற்றும் எதிர்பாராத லாபங்கள் கிடைக்க வாய்ப்புள்ளன. பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு, அவர்கள் நீண்ட நாள் விரும்பிய இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கப்போகிறது. பணியில் இருப்பவர்களுக்கு விரும்பிய மாற்றங்கள் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும். வணிகர்களுக்கும் அவர்கள் விரும்பிய முன்னேற்றங்கள் தேடிவர வாய்ப்புள்ளது.
உறவுகளில் அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும். திருமண விஷயத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். காதலர்களுக்கு அவர்கள் உறவில் எதிர்பாராத நேர்மறையான திருப்பங்கள் அமையும். கணவன் மனைவி உறவு வலுவடையும்.
துலாம்
கஜகேசரி யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு இரட்டிப்பு செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரும். உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் பல சாதகமான முடிவுகளைக் குறிக்கின்றன. கஜகேசரி யோகத்தை அதன் முழு பலத்துடன் துலாம் ராசிக்காரர்கள் அனுபவிக்கப் போகிறார்கள். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கும், வெளிநாட்டில் குடியேற அனுமதியும் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் சிறப்பான பலன்களைத் தருகிறது. அரசியலில் இருப்பவர்களுக்கு பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் விரும்பிய பதவியை அடையலாம். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் உங்களை தேடி வரும். செல்வமும் செழிப்பும் உங்களுக்காக காத்திருக்கும். இந்த காலக்கட்டத்தில் உங்கள் வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

