Latest Updates
-
2 ஆண்டுகள் கழித்து செவ்வாய் உருவாக்கிய ருச்சக ராஜயோகம்: ஜூன் 21 வரை இந்த 3 ராசிக்கு பணமும்,வெற்றியும் குவியும் -
1/2 கப் பச்சை பயறு இருந்தா.. காலையில் இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 18 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் உச்ச ராசிக் செல்வதால் கோடி நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ரோட்டுக்கடை எக் ரைஸ் ரெசிபி - செஞ்சு பாருங்க, காரசாரமா அட்டகாசமா இருக்கும் -
விஜய் வருங்கால முதல்வர்னு கேட்டதும் த்ரிஷா ஏன் இப்படி வெட்கப்பட்டார்? வைரலாகும் அந்த ஒரு நொடி வீடியோ! -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் எதிர்காலத்தை கணிக்கும் அதிசய பிறவிகளாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன -
விவாகரத்து செய்ய இவ்வளவு செலவாகுமா? 2026-ல் உங்கள் பணத்தை மிச்சப்படுத்த இந்த ரகசியங்களை தெரிஞ்சுக்கோங்க! -
சாணக்கிய நீதி படி நல்ல கணவரிடம் இருக்க வேண்டிய 5 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட இதுல எத்தனை இருக்கு? -
மாதம்பட்டி தக்காளி ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி கூறும் வெற்றிக்கான 3 தாரக மந்திரங்கள் என்னென்ன தெரியுமா? நீங்களும் ஃபாலோ பண்ணுங்க
Chanakya Niti: இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர்களில் எப்போதும் சாணக்கியருக்கு தனியிடம் உண்டு. சாணக்கியருக்கு வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் ஆழமான புரிதலும், ஞானமும் இருந்தது. சாணக்கியர் சிறந்த தத்துவவாதி, பொருளாதார நிபுணர், சட்ட நிபுணர் மற்றும் அரச ஆலோசகர் ஆவார். அவரை புத்திக்கூர்மைக் காரணமாக அவர் கௌடில்யர் என்றும் விஷ்ணுகுப்தர் என்றும் அழைக்கப்படுகிறார். முதல் மௌரியப் பேரரசரான சந்திரகுப்தாவை ஆட்சிக்கு வரச் செய்தது சாணக்கியரின் தந்திரங்கள்தான்.

மனிதர்கள் அனைவருமே தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறார்கள் மற்றும் அதற்காகக் கடுமையாக உழைக்கிறார்கள். சிலர் குறைந்த அளவிலான உழைப்பின் மூலமே விரைவாக வெற்றியை அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைந்து விடுகிறார்கள், ஆனால் சிலர் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும் வாழ்க்கையில் வெற்றியை அடைய முடியாமல் தோல்வியடைகின்றனர். வாழ்க்கையில் வெற்றிபெற இயலாத நிலை, ஒருவரைத் தனது விதியைச் சந்தேகிக்கும்படியும், தனது திறமைகள் மீதே சந்தேகம் கொள்ளும் நிலைக்கு வழிவகுக்கும். அதுபோன்ற சூழல்களில், ஒருவர் தனது இலக்குகளை அடைவதற்கு, ஆச்சார்ய சாணக்கியர் எழுதிய 'சாணக்கிய நீதி' நூலைப் படித்துப் பயனடையலாம்.
ஆச்சார்ய சாணக்கியரின் சாணக்கிய நீதி எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு புகழ்பெற்ற நூலாகும். இது கி.மு. 4-ஆம் நூற்றாண்டுக்கும் 3-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டது. உங்கள் வாழ்க்கையில் வெற்றி உங்கள் அருகிலேயே வராமல் இருந்தால் சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் சுட்டிக்காட்டியுள்ள பின்வரும் மூன்று விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உங்களை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்
சுயக்கட்டுப்பாடே தனிப்பட்ட முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்று சாணக்கியர் கூறுகிறார். இக்கட்டான சூழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்டுச் செயல்படாமல் சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதும், நீண்டகால இலக்குகளின் மீது கவனத்தைச் செலுத்தும் திறனைப் பெற்றிருப்பதும் வெற்றியை ஈட்டித்தரும் என்று ஆச்சார்ய சாணக்கியர் உறுதியாக கூறுகிறார். தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளும் திறமை கொண்ட எவராலும் எதையும் சாதிக்க முடியும் என்றும், ஒருவர் எந்தவொரு பணியை மேற்கொண்டாலும், அதை இடையில் கைவிடாமல் முழுமையாக முடித்துக்காட்டுவார் என்றும் அவர் கருதுகிறார். சாணக்கியரைப் பொறுத்தவரை, இந்த பண்பே ஒருவரை பெரிய வெற்றியாளராக மாற்றும்
அதிர்ஷ்டத்தை சார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்
பெரும்பாலான மக்கள் வாழ்க்கையில் வெற்றிபெற அதிர்ஷ்டத்தை நம்பியிருக்கிறார்கள். வெற்றி பெறுவதற்கு எவரும் தங்கள் விதி மற்றும் அதிர்ஷ்டத்தை மட்டுமே சார்ந்திருக்கக்கூடாது என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். மாறாக, எத்தகைய சூழலிலும் கடினமாக உழைக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். கடினமாக உழைத்து கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள ஒரு நபர் முன்வந்தால், அவர் வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க இயலாது.
பலவீனத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் ரகசியங்கள் என்பது மிகவும் முக்கியமானதாகும். எந்தச் சூழ்நிலையிலும், ஒரு நபர் தனது பலங்களையோ அல்லது பலவீனங்களையோ பிறரிடம் ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது என்று சாணக்கிய நீதி கூறுகிறது. உங்களின் இந்த ரகசியங்களை, எதிரிகளோ அல்லது போட்டியாளர்களோ தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். இது மட்டுமின்றி, நிதி இழப்புகளை வெளிப்படுத்தவோ அல்லது தனிப்பட்ட பிரச்சனைகளை யாருடனும் பகிர்ந்துகொள்ளவோ கூடாது என்றும் சாணக்கிய நீதி கூறுகிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவரின் பிரச்சனையைப் பற்றி மற்றவர்கள் அறிந்துகொண்ட உடனேயே, அவர்கள் போலியான ஆதரவை மட்டுமே காட்டுவார்களே தவிர, உதவ முன்வரமாட்டார்கள். மேலும், தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்துகொள்பவர்கள் ஏளனத்திற்கும் அவமதிப்பிற்கும் உள்ளாவார்கள் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications