காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..

Posted By:

Chicken Liver Fry Recipe In Tamil: பொதுவாக ஈரல் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் பலரும் ஆட்டு ஈரலை தான் அதிகம் சாப்பிடுவார்கள். இருப்பினும் சிக்கன் ஈரலும் ஏராளமான சத்துக்களைக் கொண்டுள்ளது என்பது தெரியுமா? இது தெரியாமல் நிறைய பேர் ஈரலை தூக்கி எறிந்துவிடுகிறார்கள். அதுவும் இந்த சிக்கனை ஈரலை வாங்கி சமைத்து சாப்பிடும் போது, சுவை வேற வெலலில் இருக்கும்.

Chicken Liver Fry How To Make Chicken Eral Varuval

ஆனால் உங்களுக்கு சிக்கன் ஈரலை ருசியாக செய்யத் தெரியாதா? அப்படியானால் இந்த பக்குவத்தில் சிக்கன் ஈரலை செய்து கொடுங்கள். இப்படி மசாலா பொருட்களை சேர்த்து, மிளகுத் தூள் தூவி வறுவல் செய்யும் போது, சுவை பிரமாதமாக இருக்கும். இந்த சிக்கன் ஈரலில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது. எனவே வாரம் ஒருமுறை சிக்கன் ஈரலை உட்கொள்ளும் போது, உடலில் வைட்டமின் பி12 குறைபாடு வராமல் தடுக்கலாம்.

உங்களுக்கு இந்த சிக்கன் ஈரல் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் ஈரல் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* மராட்டி மொக்கு - 1
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சிக்கன் ஈரல் - 1/2 கிலோ
* தண்ணீர் - 1 டம்ளர்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உபுப சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சிக்கன் ஈரலை கழுவி சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். அப்போது அடிக்கடி மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* ஈரல் நன்கு வெந்ததும், அதில் மிளகுத் தூளைத் தூவி கிளறி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான சிக்கன் ஈரல் வறுவல் தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion