ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..!

Jupiter Transit In Ayilyam Nakshatra On 19 August 2026: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாகவும், அறிவு, கல்வி, செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியின் 1 ஆண்டு காலம் பயணிப்பார். இது தவிர அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். இப்படி குரு பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.

Jupiter Transit In Ayilyam Nakshatra On 19 August 2026 These Zodiac Signs Will Be Lucky

தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் குரு பகவான் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி புதன் ஆவார். புதனின் நட்சத்திரத்திற்குள் குரு பகவான் நுழைவதால் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் தொழில், கல்வி, நிதி நிலை போன்றவற்றில் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர்.

அதுவும் பணிபுரிபவர்களின் வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும் வாய்ப்புள்ளது. இப்போது குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் இருக்கும் குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் மன அமைதி கிடைக்கும்.

கடகம்

குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் உள்ள பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். மன அழுத்தம் குறைந்து வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய வேலையை தொடங்குவதற்கு இக்காலம் உகந்ததாக இருக்கும். வேலை அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்.

தனுசு

குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். தொழிலதிபர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

மீனம்

குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். அரசு தொடர்பான வேலைகளில் உள்ள தடைகள் நீங்கும். முக்கியமான வேலைகளில் நல்ல வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் நீங்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, August 16, 2026, 10:34 [IST]
Desktop Bottom Promotion