Latest Updates
-
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்!
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்..
Appendix Cancer Symptoms In Tamil: புற்றுநோய்களில் மிகவும் அரிதான புற்றுநோய் தான் குடல்வால் புற்றுநோய். உலகளவில் இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கு சுமார் 1 முதல் 2 பேரை பாதிக்கிறது. அதுவும் அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 முதல் 3000 புதிய குடல்வால் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின் படி, இந்த குடல்வால் புற்றுநோய் இளம் வயதினரிடையே அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட குடல்வால் புற்றுநோய் குறித்தும், அதன் எச்சரிக்கை அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் சென்னையில் உள்ள கிளீனீகிள்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் விமலதித்தன் என். எஸ் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
குடல்வால் புற்றுநோய் என்றால் என்ன?
"குடல்வால் புற்றுநோய் (Appendix cancer) என்பது பெருங்குடலுடன் இணைந்திருக்கும் குடல்வால் (Appendix) பகுதியில் உருவாகும் அரிய வகை புற்றுநோய். ஆரம்ப நிலையில் பலருக்கும் தெளிவான அறிகுறிகள் இருக்காது. சில நேரங்களில் அப்பெண்டிக்ஸ் அழற்சி (Appendicitis) சிகிச்சைக்காக குடல்வாலை அகற்றும்போது இது தற்செயலாக கண்டறியப்படுகிறது." என்று டாக்டர் கூறினார்.
குடல்வால் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்
1. தொடர்ந்து அல்லது மீண்டும் மீண்டும் வயிற்று வலி
2. வயிறு உப்புசம் அல்லது வீக்கம்
3. சாப்பிட்ட பிறகு வயிறு நிறைந்த உணர்வு
4. குமட்டல் அல்லது வாந்தி
5. வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்
6. வயிற்றில் கட்டி அல்லது அதிகமாக நிறைந்த உணர்வு
7. பசியின்மை
மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிகுறிகள் இருந்தாலே குடல்வால் புற்றுநோய் என்று அர்த்தமில்லை. ஆனால் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகுவது முக்கியம்.
குடல்வால் புற்றுநோய்க்கான காரணங்கள்
"பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குடல்வால் புற்றுநோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. குடல்வால் பகுதியில் உள்ள சில செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரத் தொடங்கும்போது புற்றுநோய் உருவாகிறது. சில கட்டிகள் மியூசின் (Mucin) என்ற ஜெல்லி போன்ற திரவத்தை உருவாக்கலாம். இது வயிற்றுக்குள் பரவும் போது சூடோமைக்ஸோமா பெரிட்டோனை (Pseudomyxoma Peritonei) என்ற நிலை ஏற்படலாம்" என்று டாக்டர் கூறினார்.
குடல்வால் புற்றுநோய்க்கான சிகிச்சைகள்
"குடல்வால் புற்றுநோய்க்கான சிகிச்சை புற்றுநோயின் வகை மற்றும் அது எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்தது. பல நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை முக்கிய சிகிச்சையாக இருக்கும். புற்றுநோய் வயிற்றுக்குள் பரவியிருந்தால், Cytoreductive Surgery மூலம் புற்றுநோய் பகுதிகளை அகற்றலாம். சில நோயாளிகளுக்கு HIPEC (Hyperthermic Intraperitoneal Chemotherapy) சிகிச்சையும் பயன்படுத்தப்படலாம். தேவைக்கேற்ப Chemotherapy (கீமோதெரபி) வழங்கப்படலாம்" என்று டாக்டர் கூறினார்.
குடல்வால் புற்றுநோய் மிகவும் அரிதானது. ஆரம்ப நிலையில் தெளிவான அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். தொடர்ந்து இருக்கும் வயிற்று வலி, வயிறு உப்புசம் அல்லது மலம் கழிப்பதில் மாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவற்றை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

