Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
10,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் தோன்றிய முதல் காய்கறி எது தெரியுமா? இப்போதும் நாம இதை சாப்பிடுறோம்
மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவுகளே பிரதானமானதாகும். ஆரோக்கிய உணவுகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது காய்கறிகள்தான். காய்கறிகள் நமது உணவின் இன்றியமையாத அங்கமாக திகழ்கின்றன, மேலும் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தையும், ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன.

காய்கறிகள் பல நூறாண்டுகளாக நமது உணவு முறையின் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்தாலும், இன்றும் நாம் உண்ணும் காய்கறிகளிலேயே மிகவும் பழமையானது எது தெரியுமா? உலகின் மிகப்பழமையான காய்கறி எதுவென்பது பற்றியும், அந்தப் பழமையான காய்கறிகள் எவ்வாறு இன்றைய நமது உணவுமுறையின் ஒரு பகுதியாக மாறின என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
காய்கறிகளும், மனிதர்களும்
இன்று மனிதர்கள் உண்ணும் பெரும்பாலான காய்கறிகள், கற்கால காலகட்டத்திலேயே ஆதி மனிதர்களால் பயிரிடப்பட்டவையாகும். காய்கறிகள் மனிதர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்கவும் என பல நோய்களிலிருந்து காப்பாற்றுவதால் அவை இன்றும் நமது உணவுமுறையில் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகின்றன.
மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில், 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே விவசாயத்தின் ஆதி வடிவங்கள் தோன்றியதாக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) குறிப்பிடுகிறது. இக்காலகட்டத்தில்தான் மனிதர்கள் தாவரங்களைப் பயிரிட்டு விவசாயம் செய்ய கற்றுக்கொண்டார்கள்.
இன்று நாம் உண்ணும் பல காய்கறிகள், உலகின் மிகவும் பழமையான காய்கறி வகைகளின் வழித்தோன்றல்களாகவே உள்ளன. உலகின் மிகவும் பழமையான காய்கறிகள் குறித்த ஆய்வுகள், ஆதி விவசாயத்தின் வளர்ச்சி எவ்வாறு நாகரிகத்தை வடிவமைக்கவும், மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும் உறுதி செய்யவும் உதவியது என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
உலகின் மிகவும் பழமையான காய்கறி எது?
காய்கறிகளின் விவசாயம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கியதாக ஆய்வுகள் கூறுகிறது. இன்று நமது உணவின் ஒரு பகுதியாகத் திகழும் காய்கறிகள் அனைத்தும், உலகின் மிகப் பழமையான காய்கறியின் மறுஉருவங்கள்தான். இன்றும் நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில், 'பட்டாணி'யே உலகின் மிகப் பழமையான காய்கறியாகக் கருதப்படுகிறது. தொல்லியல் கண்டுபிடிப்புகளின்படி, கற்கால காலகட்டத்தில், அதாவது சுமார் 8,000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே பட்டாணி பயிரிடப்பட்டு வந்துள்ளது. மனித வராலற்றின் மிகவும் ;பழமையான காய்கறிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
பட்டாணி
வரலாற்றில் மனிதர்களால் பயிரிடப்பட்ட மிகப் பழமையான காய்கறியாகப் பட்டாணி கருதப்படுகிறது. கற்காலக் குடியிருப்புகளில் இந்தப் பழங்காலப் பட்டாணிகள் கண்டுபிடிக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை மனிதர்களின் முக்கிய உணவாக இருந்து வந்துள்ளது. நவீன மனிதர்கள் இன்றும் சூப்கள், சாலடுகள் மற்றும் குழம்பு வகைகள் போன்ற பலவிதமான உணவுகளில் பட்டாணியைப் பயன்படுத்துகின்றனர். அதன் சுவையும், சமைக்கும் முறையும் மற்றும் அதிலுள்ள ஊட்டச்சத்தும் அதை நீண்ட காலமாக மனித வரலாற்றில் நுகரப்படும் காய்கறியாக மாற்றியுள்ளது.
வெங்காயம்
தற்போது மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும் வெங்காயம் கிட்டதட்ட 5,000 ஆண்டுகள் பழமையானது. இந்தக் காலகட்டத்தில், வெங்காயம் எகிப்து, மெசபடோமியா மற்றும் ஆசியாவில் பரவலாகப் பயிரிடப்பட்டது. பண்டைய எகிப்தில் பிரமிடுகளைக் கட்டியவர்களுக்கு வெங்காயம் பரிமாறப்பட்டதற்கான பழங்கால சான்றுகள் உள்ளன.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்குகள் பெரு மற்றும் பொலிவியாவில் 7,000 முதல் 9,000 ஆண்டுகளுக்கு முன்பே அந்த நாட்டின் பூர்வகுடி மக்களால் பயிரிடப்பட்டன. ஐரோப்பிய காலனித்துவத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருளைக்கிழங்கு உணவின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வந்தது. தற்போது, உருளைக்கிழங்கு உலகளவில் அதிகம் உட்கொள்ளப்படும் காய்கறிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பூண்டு
பூண்டு, 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக உணவுத் தயாரிப்பிலும், பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எகிப்து, இந்தியா மற்றும் சீனா போன்ற உலகின் மிகவும் பண்டைய கலாச்சாரங்களில், பூண்டு அதன் தனித்துவமான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாகப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. இன்றும் பூண்டு, அதன் தனித்துவமான சுவை மற்றும் மருத்துவ குணங்களின் காரணமாக, பூண்டு ஒரு பிரபலமான உணவுப் பொருளாகத் திகழ்கிறது.



Click it and Unblock the Notifications

