Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா?
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்..
Koundampalayam Chicken Kuzhambu Recipe In Tamil: இந்த வார ஞாயிற்றுக்கிழமையில் உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய போகிறீர்களா? அதுவும் காலையில் இட்லிக்கு சிக்கன் குழம்பு தான் செய்ய போகிறீர்களா? அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று சிக்கன் குழம்பை செய்யாமல், ஒருமுறை கவுண்டம்பாளையம் ஸ்டைலில் சிக்கன் குழம்பை செய்யுங்கள். இந்த சிக்கன் குழம்பு இட்லியுடன் மட்டுமின்றி சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். ஒருமுறை இந்த ஸ்டைல் குழம்பை செய்தால், பின் அடிக்கடி இந்த பக்குவத்தில் தான் சிக்கன் குழம்பை செய்வீர்கள்.

உங்களுக்கு இந்த கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 3/4 கிலோ
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1/2 மூடி
* நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு,
சீரகம், பட்டை, சோம்பு, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 2 பட்டை, 2 கிராம்பு, 1/2 டீஸ்பூன்
சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை சேர்த்து,
சிறிது கறிவேப்பிலை தூவி வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையானதும், அதில் சிக்கனை கழுவி சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து
கிளறி, 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின்பு மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து
நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி கிளறி மூடி வைத்து 10-15 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்தால், சிக்கன் நன்கு வெந்திருக்கும். இறுதியாக
அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கவுண்டம்பாளையம்
சிக்கன் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
