Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Nag Panchami 2026: இந்த ஆண்டின் நாக பஞ்சமி ஆகஸ்ட் 17 ஆம் தேதி வருகிறது. இந்த நாக பஞ்சமி நாக தெய்வங்களை வழிபட உகந்த நாளாகும். ஆன்மீக ரீதியாக மற்றும் ஜோதிட ரீதியாக இந்த ஆண்டின் நாக பஞ்சமி சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த நாக பஞ்சமி சிவபெருமானுக்கு உரிய திங்கட்கிழமையில் வருகிறது. இப்படியான அபூர்வமான நிகழ்வின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகைல் காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவுடன் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் சிவபெருமான் மற்றும் நாக தெய்வங்களின் அருளால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்கள், தொழிலில் வளர்ச்சி, வியாபார விரிவாக்கம், வேலை வாய்ப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காணவுள்ளனர். இப்போது நாக பஞ்சமி நாளில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நாக பஞ்சமி நாளானது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். இதன் மூலம் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கன்னி
நாக பஞ்சமி நாளானது கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் நாளாக இருக்கும். இந்நாளில் எடுத்த காரியத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும். புதிய வேலை அல்லது தொழிலை தொடங்குவதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் தொழில் தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறக்கூடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாக பஞ்சமி சிறப்பானதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். இக்காலத்தில் வேலை தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



