கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Carrot Javvarisi Halwa Recipe In Tamil: உங்கள் பிள்ளைகள் அடிக்கடி சாப்பிட ஏதாவது கேட்டு நச்சரிப்பார்களா? அதுவும் உங்கள் பிள்ளைகளுக்கு ஸ்வீட் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்போது கடைகளில் கண்டதை வாங்கி கொடுக்காமல், வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே அருமையான ஸ்வீட் செய்து கொடுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் கேரட் மற்றும் ஜவ்வரிசி இருந்தால், அவற்றைக் கொண்டு ருசியான அல்வா செய்யுங்கள். இந்த அல்வாவை ஒருமுறை செய்தால், அடிக்கடி இதை செய்து கொடுக்கச் சொல்வார்கள்.

Carrot Javvarisi Halwa How To Make Chewy Carrot Halwa Recipe

உங்களுக்கு இந்த கேரட் ஜவ்வரிசி அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் ஜவ்வரிசி அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் - 3 கப் + தேவையான அளவு
* நைலான் ஜவ்வரிசி - 1/2 கப்
* நெய் - 3 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
* முந்திரி - 10 (உடைத்தது)
* பெரிய கேரட் - 2 (துருவியது)
* சர்க்கரை - 1/2 கப் அல்லது 100 கிராம்
* ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் பாத்திரத்தில் 3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 1/2 கப் நைலான் ஜவ்வரிசியை சேர்த்து கலந்து வேக வைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வெந்ததும், அதை இறக்கி, குளிர்ந்த நீரை ஊற்றி அலசி, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், 10 முந்திரியை உடைத்து சேர்த்து ப்ரை செய்ய வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய கேரட்டை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் சர்க்கரை சேர்த்து, வேக வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அல்வா பதத்திற்கு வந்ததும், அதில் ஏலக்காய் தூள் சேர்த்து, 2 ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான கேரட் ஜவ்வரிசி அல்வா தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, August 16, 2026, 19:26 [IST]
Desktop Bottom Promotion