ஷில்பா ஷெட்டிபோல் அழகிய உடல் வாகு பெறனுமா? தினமும் அவர் செய்ற 4 யோகா பற்றி தெரிஞ்சுகோங்க!!

Posted By: Bala Karthik
Subscribe to Boldsky

ஷில்பா ஷெட்டி போல அழகிய உடல்வாகினை பெற வேண்டுமா? வாருங்கள் அவர் கூறும் சில எளிய முறை யோகா மூலம் பெற்று மகிழலாம்...

அனைவருக்கும் ஷில்பா ஷெட்டியை நன்றாக தெரிந்திருக்குமென நினைக்கிறேன்?

ஹிந்தி திரைப்பட உலகில் மிகவும் பேசப்படக்கூடிய ஒரு பிரபலம் தான் இவர். அவருடைய வயது 40 என்றபோதிலும் சிறந்த, பளிச்சிடும் அழகிய உயிர் ஓவியமவர் என்பதே உண்மை. இருப்பினும், அவர் ஒரு தாயாவார். இவர் தன்னுடைய சுறுசுறுப்பான நடிப்பினால் மட்டும் ரசிகர்களின் மனதினை கொள்ளை கொள்ளாமல், அவர் செய்யும் தினசரி யோகாக்களால்... அழகிய உருவம் கொண்டு, பிரபலமான அழகியாகவும் பலர் மனதினை கொள்ளை கொண்டுள்ளார்.

These Simple Yoga Tips Are Shilpa Shetty’s Secret For An Amazing Body!

நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பெரும்பாலான பிரபலங்கள், கடுமையான உடற்பயிற்சியின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடிப்பார்கள். சிலரோ... தங்களுடைய தினசரி உணவு முறையின் (டையட்) மூலம், அழகிய உடல் வாகினை பெறுவார்கள்.

சிறந்த உடல் வாகினை பெறுவது என்பது ஈஸியான ஒரு காரியமல்ல. ஒருவருக்கு தன்னுடைய உடல், மிகவும் அழகாக இருக்க வேண்டுமென்றால்...அதற்கான பராமரிப்பு என்பது மிகவும் கடினம் என்பதனை முதலில் நாம் உணர வேண்டும். ஒருவர் தினசரி உடற்பயிற்சி செய்வதனால், அவரது உடலை சரியான வடிவத்தில் வைத்துகொள்ள முடிகிறது.

அதனால், நாங்கள் ஷில்பா ஷெட்டி சமூக வலைத்தள பக்கத்தை பார்க்க, அவருடைய அழகின் ரகசியத்திற்கான காரணம் யோகா என்பதனை தெரிந்து வியந்தோம். ஆம், அவர் தினசரி யோகா பயிற்சி மேற்கொள்வதால்...பல்வேறு வகையான யோகா ஆசனங்களின் உதவியுடன் அவர் அழகிய உடல் வாகினை பெறுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், ஷில்பா எழுதிய யோகா பற்றிய புத்தகம் ஒன்றும் மக்களுக்கு அழகிய உடலை பரிந்துரை செய்ய உதவுகிறது. ஆம், அது தான்..."ஒரு வருடத்தில் தொடர் யோகா மூலம் பயனை பெறுவது எப்படி?" என்பதே...

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிம்பிளான யோகாக்கள்!!!

நிறைய பேர், பிறப்பில் அழகாய் தோன்றி அனைவரையும் உடல் வாகால் கவர்ந்தாலும், அவர்களுடைய அழகிய உடல் வடிவத்தை குறிப்பிட்ட வயதில் இழக்கின்றனர். அத்துடன் எடையும் அவர்களுக்கு கூட, குறிப்பாக....ஒரு பிள்ளையை பெற்றெடுக்கும் பொழுது இத்தகைய பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதே உண்மை.

அதனால், உங்கள் உடலானது அழகாகவும்...பிட்டாகவும் (Fit) ஷில்பா ஷெட்டியின் வயதிலும் இருப்பதற்கு சில யோக டிப்ஸ். இதோ உங்களுக்காக.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தட்டை வயிற்றை பெற உதவும் பாதஹஸ்தாசனா:

தட்டை வயிற்றை பெற உதவும் பாதஹஸ்தாசனா:

1. இந்த ஆசனா மூலமாக, உங்களுடைய வயிற்றில் இருக்கும் கொழுப்பு குறைந்து தட்டை வயிற்றை பெற முடிகிறது. மேலும் உங்கள் வயிற்று திசைகளை வலுப்படுத்தவும் இது உதவுகிறது.

2. முதலில் உங்கள் கால்களுடன் சேர்ந்து நேராக நின்று கொள்ளுங்கள்.

3. இப்பொழுது, உங்கள் உடலை மட்டும் மெல்ல வளையுங்கள். இதனால், உங்கள் தலை, தொடைகளை தொட வேண்டும். அதேபோல், உங்கள் கைகளும், கால்களை தொட முயற்சிக்க வேண்டும். இவ்வாறு முடிந்த அளவிற்கு நாம் செய்ய வேண்டும்.

 உடல் உறுதியை அதிகரிக்க உதவும் வீரபத்ராசனா:

உடல் உறுதியை அதிகரிக்க உதவும் வீரபத்ராசனா:

இந்த ஆசனாவின் மூலமாக, உங்களால் அதிக உடல் உறுதியை பெற முடிகிறது. ஆம், உங்கள் வளர்சிதை மாற்ற அளவின் விகிதத்தை இது அதிகரிக்க செய்ய, உங்கள் உடல் நடவடிக்கைகளுக்கு ஏற்ற ஆற்றலையும் அது உங்களுக்கு தருகிறது.

1. நேராக உங்கள் கால்களை சேர்த்துகொண்டு நில்லுங்கள்.

2. இப்பொழுது, உங்களுடைய இடது காலை பின் நோக்கி கொண்டு சென்று, வலது முழங்காலை முன்னோக்கி வளையுங்கள். அதனால், உங்கள் வலது தொடையானது தரைக்கு இணையாக இருக்கும்.

3. அடுத்து, உங்கள் இருகைகளையும் மேலே தூங்கிகொள்ளுங்கள். இதனால், உங்கள் இருதலைத்தசை (Biceps) உங்கள் காதுகளை எட்டும்.

4. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால், கால்களை மாற்றிகொள்ள வேண்டியது அவசியமாகும்.

5. இதய நோய்கள் இருக்கும் நபர்கள், இந்த ஆசனாவை செய்யும் முன் மருத்துவரை பரிந்துரைக்க வேண்டியது அவசியமாகும்.

தசைகளை வலுப்படுத்தும் வியாக்ராசனா:

தசைகளை வலுப்படுத்தும் வியாக்ராசனா:

இந்த ஆசனா, நம்முடைய உடல் தசைகளை உறுதியாகவும், வலிமையாகவும் வைத்துகொள்ள உதவ, குறிப்பாக...உடலின் பின்புறம் மற்றும் வயிற்று பகுதி தசைகளை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

1. உங்கள் கைகள் மற்றும் கால்கள் யோகா பாயில் படும்படி இருக்க வேண்டும். இதனால், உங்கள் உடல்...தரைக்கு இணையாக இருக்கும்.

2. இப்பொழுது, ஒரு காலின் கீழ்முழங்காலை மெல்ல மடக்கி...தலையை நோக்கி பின்பகுதியில் கொண்டு வர வேண்டும். உங்கள் கால்கள் நீட்டி இருக்க வயிற்று தசைகளும் அவ்வாறே இருக்க வேண்டும்.

3. எவ்வளவு நேரம் முடிகிறதோ...அவ்வளவு நேரம் அந்த நிலையில் இருக்க வேண்டும்.

4. அடுத்து, உங்கள் காலை முன்னோக்கி எடுத்துவர, இதனால், உங்களுடைய முழங்கால் மார்பகத்தின் அருகாமையில் இருக்கும்.

5. இந்த பயிற்சியை, தொடர்ந்து மற்றுமொரு காலை (Leg) கொண்டும் செய்ய வேண்டும்.

வலுவான வயிற்றை பெற உதவும் நௌகாசனா:

வலுவான வயிற்றை பெற உதவும் நௌகாசனா:

இந்த ஆசனாவின் மூலமாக, உங்களுடைய உடலில் இருக்கும் ஒட்டுமொத்த கொழுப்பும் குறைந்து, உங்கள் வயிற்று தசைகளை வலுப்படுத்தவும் இது உதவுகிறது.

1. முதலில் பாயில் படுத்துகொள்ளுங்கள். கால்கள் நேராக சேர்ந்து இருக்க வேண்டும். அதேபோல் கைகளும் முன்னே நீட்டி இருக்க வேண்டும்.

2. இப்பொழுது, உங்கள் உடலின் முன்பகுதியை மெல்ல தூக்குங்கள். அவ்வாறு தூக்கும்பொழுது, அடிவயிற்று தசைகளுக்கு அழுத்தம் தரவேண்டியது அவசியமாகும்.

3. அடுத்து, தரையிலிருந்து உங்கள் கால்களை தூங்குங்கள். உங்களுடைய கைகள் மற்றும் கால்களை தரைக்கு இணையாக வைத்துகொள்ள வேண்டியது முக்கியமாகும். அதேபோல், உங்கள் மார்பு மற்றும் தலையையும் தூக்குங்கள்.

4. அந்த நிலையில், உங்களால் முடிந்த அளவிற்கு இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Simple Yoga Tips Are Shilpa Shetty’s Secret For An Amazing Body!

These Simple Yoga Tips Are Shilpa Shetty’s Secret For An Amazing Body
Story first published: Tuesday, June 27, 2017, 17:00 [IST]