For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதுமையான 10 உணவுகள்!!!

By Maha
|

உலகில் உள்ள அனைவருக்குமே ஒரேவிதமான உணவுகள் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமான ஸ்டைலில் உணவுகள் இருப்பதால், அனைவரது சுவையும் வேறுபடும். அவ்வாறு இந்தியாவிலேயே ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமாக இருந்தது. இது இந்தியாவில் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தான்.

அந்த வகையில் அசைவ உணவுகள் என்றால், அனைவருக்கும் நினைவிற்கு வருவது சிக்கன், முட்டை, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றி இறைச்சி போன்றவை தான். ஆனால் சில நாடுகளில் உள்ள மக்களுக்கு பாம்பு, தேள் போன்ற விசித்தரமான உணவுகள் விருப்பமாக உள்ளன. மேலும் உலகில் உள்ள மக்கள் இது தான் சாப்பிடுவார்கள் என்று சொல்ல முடியாது. இருப்பினும் சில மக்கள் இத்தகைய விசித்திரமான உணவுகளையும் சாப்பிடுகின்றர்.

அதுமட்டுமின்றி, இன்னும் வேறு சில விசித்திரமான உணவுகளையும் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். சொன்னால், நம்பமாட்டீர்கள் இந்த உணவுகள் அனைத்தும் மிகவும் விலையுயர்ந்தவையும் கூட. உதாரணமாக, பறவைகளின் கூட்டு சூப், சீனாவில் உலகிலேயே விலை அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் ஒன்றாகும்.

இதுப்போன்று உலகில் உள்ள சில விசித்திரமான உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பாருங்களேன்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பறவைக் கூடு சூப்: சீனா

பறவைக் கூடு சூப்: சீனா

சீனாவில், பறவையின் கூட்டையே பார்க்க முடியாதாம். ஏன் தெரியுமா, ஏனென்றால் அங்கு பறவைகளின் கூட்டை வைத்து சூப் செய்து குடிப்பது வழக்கமாம். மேலும் அது மிகவும் சுவையாகவும் இருக்குமாம்.

பச்சை இரத்த சூப்: வியட்நாம்

பச்சை இரத்த சூப்: வியட்நாம்

வியட்நாமில் பச்சை இரத்த சூப் ஒரு சுவையான உணவுகளில் ஒன்று. அதிலும் இந்த சூப்பில் வெங்காயம், சிக்கன், வாத்து இரத்தம் போன்றவற்றை கொண்டு செய்யக்கூடியதாகும்.

குரங்கு மூளை

குரங்கு மூளை

சொன்னால் நம்புவீர்களோ, மாட்டீர்களோ, உலகின் சில பகுதிகளில் குரங்கின் மூளையை சாப்பிடுகிறார்கள்.

விஷமிக்க சிலந்தி ப்ரை: கம்போடியா

விஷமிக்க சிலந்தி ப்ரை: கம்போடியா

பொதுவாக விஷமிக்க சிலந்தி கடித்தால், உயிரே போய்விடும். ஆனால் கம்போடியாவில் உள்ள மக்கள், இந்த வகையான சிலந்தியை நன்கு வறுத்து, ஸ்நாக்ஸாக சாப்பிடுவார்கள்.

உயிருள்ள பச்சை மீன்: ஜப்பான்

உயிருள்ள பச்சை மீன்: ஜப்பான்

ஜப்பானில் இகிஜூகுரி (Ikizukuri) என்றால், 'உயிருள்ள மீன்' என்று அர்த்தம். பொதுவாக மீனை வறுத்து தான் சாப்பிடுவோம். ஆனால் ஜப்பானில் உள்ள மக்கள், அவர்களது பாரம்பரியப் படி, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு உயிருள்ள பச்சை மீனை உணவாக தட்டில் வைப்பார்களாம்.

அழுகிய சீஸ்: இத்தாலி

அழுகிய சீஸ்: இத்தாலி

அழுகிய சீஸை (Casu Marzu), இத்தாலியில் உள்ள மக்கள் கெட்டுப் போன பாலால் ஆன சீஸை உணவில் சேர்த்து சாப்பிடுவார்கள்.

நூற்றாண்டு கால முட்டைகள்: சீனா

நூற்றாண்டு கால முட்டைகள்: சீனா

நூற்றாண்டு காலமாக சேகரித்து வைத்திருக்கும் அழுகிய முட்டையை, சீனாவில் உள்ள மக்கள் வேக வைத்து, ஒரு ஸ்பெஷல் டிஷ்ஷாக சாப்பிடுகிறார்கள்.

பால்ட்: பிலிப்பைன்ஸ்

பால்ட்: பிலிப்பைன்ஸ்

பால்ட் (Balut) என்னும் ரெசிபி, பிலிப்பைன்ஸில் மிகவும் பிரபலமானது. அது என்னவென்றால், குஞ்சு வெளியே வரும் நிலையில் உள்ள வாத்து முட்டையை வேக வைத்து சாப்பிடுவது.

எஸ்கமோல்ஸ்: மெக்ஸிகோ

எஸ்கமோல்ஸ்: மெக்ஸிகோ

மெக்ஸிகோவில், எஸ்கமோல்ஸ் (Escamoles) நீளமாக வெள்ளை நிறத்தில் உள்ள பீன்ஸ் போன்று உள்ள ஒரு வகையான பூச்சியின் முட்டை, ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடப்படுகிறது.

நாகப்பாம்பு இதயம்: வியட்நாம்

நாகப்பாம்பு இதயம்: வியட்நாம்

வியட்நாமில் உள்ள ஒரு சுவையான உணவுகளில் ஒன்று தான் நாகப்பாம்பு இதயம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Bizarre Foods That Are Delicacies

You will be surprised to know that some of these foods that are bizarre to us are not only relished in some countries but are very expensive foods. Here are the top ten bizarre foods eaten around the world.
Desktop Bottom Promotion