For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலிவுட் நடிகர்களின் கட்டுமஸ்தான உடலமைப்பிற்கான இரகசியங்கள்!!!

By Super
|

உடல் என்பது ஒரு கோவில். இறைவன் நமக்கு அளித்துள்ள இவ்வுடலை இறுதிவரை ஆரோக்கியமாகவும். அழகாகவும் பேண வேண்டும் என்பது அனைவரது விருப்பமும் கூட. அதற்கு நல்ல உணவு, அளவான வேலை, தேவையான அளவு தூக்கம் என்று ஒரு ஒழுங்குமுறையுடன் இருந்தாலே நல்ல உடலைப் பேண முடியும்.

இதற்கு அடுத்தாற்பட்டது தான், சிறப்பான உடல் கட்டமைப்பைப் பேணுவது. இதற்கு உடலுக்கு வலிமை தரும் உணவுகள், கடுமையான உடற்பயிற்சிகள், நல்ல ஓய்வு என்று முறைப்படுத்திக் கொண்டால் மட்டுமே, பார்ப்போர் வியக்கும் அளவில் நல்ல கட்டுமஸ்தான உடல் கட்டமைப்பைப் பெற முடியும். ஆனால் இவை அனைத்தும் மிகவும் எளிமையானது அல்ல. அதற்கு சற்று கஷ்டப்படவும் வேண்டும். அதிலும் நாம் பார்க்கும் பிரபலங்களில், சில நடிகர்கள் மட்டும் தமது உடலை சிறப்பான முறையில் பேணி வருகிறார்கள்.

அதில் பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், ரித்திக் ரோஷன், அக்ஷய் குமார், ஷாருக்கான், ஜான் ஆபிரஹாம், அர்ஜுன் ராம்பால், அமீர் கான் போன்ற மிகவும் பிரபலமானவர்கள், தமது உடலை சிரத்தை எடுத்துப் பேணி வருகிறார்கள். இது தான் அவர்கள் எப்போதும் இளமையாகத் தோற்றமளிப்பதற்கான காரணமாகும்.

அவர்களது தினசரி பயிற்சிகள் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில், அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சல்மான் கான்

சல்மான் கான்

சல்மான் கானின் இருதலை மற்றும் முத்தலைத் தசைகள் (biceps, triceps) மற்றும் வயிற்றுத்தசைகள் பிரமிப்பூட்டுபவை. இவர் தினமும் கார்டியோ வாஸ்குலார் பயிற்சிகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி வயிற்றுத் தசைகளுக்கு வலுவூட்டும் பயிற்சிகளையும் செய்கிறார். மேலும் தினமும் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் ஓட்டுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

அகன்ற உடம்பு, கட்டுமஸ்தான தோள்கள், வழவழப்பான வயிற்றுப்பகுதி, இவை தான் ஹிரிதிக் ரோஷனின் உடல் சிறப்புகள். கட்டுக்கோப்பான உடல் கட்டமைப்பைப் பேணுவதற்கு, இவர் தினமும் நான்கு முறை கார்டியோ உடற்பயிற்சிகளையும், வயிற்றுத் தசைகளுக்கு வலிமை தரும் உடற்பயிற்சிகளையும் செய்கிறார். மேலும் நல்ல சரியான உணவுகளை சாப்பிடுவதோடு, நிறைய தண்ணீர் குடிக்கிறார். குறிப்பாக நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் வகைகளை அறவே சாப்பிடமாட்டார்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

அக்ஷய் குமாருக்கு ஒல்லியான, ஃபிட்டான, அழகிய வடிவமைப்புடன் கூடிய தேகம். இவர் வாரத்திற்கு மூன்று நாள்கள் கூடைப்பந்து விளையாடுகிறார். வாரத்திற்கு 10 மைல்கள் ஒடுகிறார். தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள, நடைப்பயிற்சியையும், மலையேற்றப் பயிற்சியையும் மேற்கொள்கிறார். எப்போதும் வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுகிறார். இவரது உணவில் பழங்களும், காய்கறிகளும் மிகுந்தும், உப்பு குறைந்தும் காணப்படும். மேலும் தினமும் தியானமும் செய்து வருகிறார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

'ஓம் சாந்தி ஓம்' என்னும் படத்தில் வரும் ஷாருக்கானின் சிக்ஸ் பேக் வயிற்றுத் தசைகளை யாராவது மறப்பார்களா? பளு தூக்குதல், கார்டியோ வாஸ்குலார் பயிற்சி செய்தல் என்று ஏராளமான பயிற்சிகளைச் செய்து, உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறார் ஷாருக்கான். அவ்வப்போது பெல்லி டான்ஸூம் ஆடுகிறாராம். எப்போதும் மிகவும் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவார்.

ஜான் ஆபிரகாம்

ஜான் ஆபிரகாம்

ஜான் ஆபிரகாம் ஒரு சைவ உணவாளர். அவரது வயிற்றுப்பகுதி மிகவும் கவர்ச்சியானது. கார்டியோ வாஸ்குலார் பயிற்சிகளையும், பளு தூக்கும் பயிற்சிகளையும், மாறி மாறி செய்து, தமது வயிற்றுத் தசைகளை வலுப்படுத்தி வருகிறார். தினமும் 2 முதல் 3 மணிநேரம் வரை உடற்பயிற்சி செய்கிறார். அவரது பயிற்சிகளில், பளு தூக்குதலும், கிக் பாக்ஸிங்கும் அடங்கும்.

அர்ஜூன் ராம்பால்

அர்ஜூன் ராம்பால்

இவருக்கென்று ஒரு தனியான தினப்படியான வழக்கம் எதுவுமில்லை. எனினும், பளுதூக்குதல், ஓட்டம், நீச்சல், கராத்தே பயிற்சி என்று பலவித பயிற்சிகளை வாரத்தில் ஐந்து நாட்களும் மேற்கொள்கிறார்.

சுனில் ஷெட்டி

சுனில் ஷெட்டி

காலை உணவை அரசனைப் போல சாப்பிடுகிறார். மதிய உணவை இளவரசனைப் போல் சாப்பிடுகிறார். இரவு உணவை ஒரு ஏழையைப் போல சாப்பிடுகிறார். ஆம், இவர் காலையில் அரசனைப் போலவும், மதியத்தில் இளவரசனைப் போலவும், இரவில் ஆண்டியைப் போலவும் சாப்பிட வேண்டும் என்ற பழமொழியை நம்புகிறார். ஆனாலும், சரியான உணவை சாப்பிட்டு அதற்கேற்றாற் போல் உழைக்கிறார்.

அமீர் கான்

அமீர் கான்

கஜினி படத்தில் 8 பேக் வயிற்றுத் தசைகளுடன் வரும் அமீர் கானை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா? ஆனால், இத்தகைய உடலமைப்பைப் பெறுவதற்கு, அவர் தினந்தோறும் 4 மணிநேர வீதம் 13 மாதங்களுக்கு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார் என்பது தெரியுமா?

ஷாஹித் கபூர்

ஷாஹித் கபூர்

இவர் நாள்தோறும் 15 நிமிடங்களாவது டிரெட்மில்லில் பயிற்சி செய்வதையும், ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிடுவதையும் ஒரு குறிக்கோளாக வைத்திருக்கிறார்.

ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூர்

இவர் வாரத்தில் ஆறு நாட்கள் உடற்பயிற்சிக் கூடத்தில், முக்கால் மணி முதல் ஒன்றேகால் மணிநேரத்திற்கு உடற்பயிற்சிகளைச் செய்கிறார். அவரது தினசரி உடற்பயிற்சிகளைப் பற்றி பிரதீப் என்பவர் பின்வருமாறு கூறுகிறார்.

"ரன்பீர் கபூர் கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்கிறார். அதே நேரத்தில் அவர் நீச்சலையும், யோகாவையும் அவ்வளவாக விரும்புவதில்லை. மார்புத் தசைகளையும், முதுகுத் தசைகளையும் வலுவூட்டும் உடற்பயிற்சிகளை மட்டும் செய்கிறார். கால்களுக்கான உடற்பயிற்சிகள் வலியைத் தருவதால், அவற்றை அவ்வளவாகச் செய்வதில்லை. மேலும் உடற்பயிற்சிகளைச் செய்யும் போது பின்னணியில் ஏதாவது இசை ஒலித்துக் கொண்டிருப்பதை விரும்புகிறார்".

குறிப்பாக அவரது உடற்பயிற்சிகளில், கார்டியோ பயிற்சிகளைச் செய்வதற்கு 5-10 நிமிடங்கள் ஒதுக்குகிறார். முதுகு, மார்பு, தோள்கள், கால்கள், இருதலைத் தசைகள் என்று உடலின் அனைத்துப் பகுதிகளிலும் கவனம் செலுத்துகிறார். எப்போதாவது கிக் பாக்ஸிங்கும் செய்கிறார்.

இம்ரான் ஹாஷ்மி

இம்ரான் ஹாஷ்மி

தனது உடலைக் கட்டுக்கோப்புடன் பேண வேண்டும் என்று பைத்தியம் பிடித்து அலைபவரல்ல இவர். ஆயினும் வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். சினிமா கதாநாயகர்கள் ஒவ்வொரு படத்திலும் தாம் ஏற்கும் கதாபாத்திரத்திற்குத் தக்கவாறு, தமது உடலமைப்பை மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது என்பதால், வலிமையான தசைகளுடன் இருப்பதை விட ஆரோக்கியமாக இருத்தலே சிறப்பு என்று நம்புகிறார். அவர் தொடர்ந்தாற்போல, இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்கிறார். அடுத்த ஒரு நாள் எதுவும் செய்வதில்லை. நல்ல ஓய்வு கொடுக்கிறார். பிறகு இதே போல தொடர்ச்சியாகப் பயிற்சி, ஓய்வு என்று தொடருகிறார். உடல் நன்றாக வளைந்து கொடுப்பதற்காக, வாரத்திற்கு 1-2 முறை யோகா பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். அவரது உடற்பயிற்சிகள் சுமார் ஒரு மணிநேரத்திற்கு நீடிக்கும்.

அவரது உடல் கட்டமைப்பின் இரகசியம் மிகவும் எளிமையானது. நன்றாகச் சாப்பிடுவது, நன்றாக ஓய்வெடுப்பது, முறையாக உடற்பயிற்சி செய்வது அவ்வளவு தான். ஒரு நாளைக்கு ஏழு மணிநேரங்களாவது தூங்குவது என்று வைத்திருக்கிறார். அப்போது தான் எப்போதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும் என்றும் நம்புகிறார்.

சைஃப் அலி கான்

சைஃப் அலி கான்

வலிமையான உடல் கட்டமைப்புடனும் சுறுசுறுப்பாகவும் திகழ்வதற்கு சைஃப் அலி கான், தினமும் இரண்டு மணிநேரம் உடற்பயிற்சிகளைச் செய்கிறார். கார்டியோ பயிற்சிகளைத் தொடர்ந்து, யோகா செய்கிறார். மனதளவிலும், உடலளவிலும் தகுதியாக இருப்பதற்காக, அவர் தமது பயிற்சிகளில் சக்தி யோகாவையும் சேர்த்துக் கொள்கிறார். தசைகளை வலிமையுடன் வைத்துக் கொள்ள, கார்டியோ பயிற்சிகளையும், எடை தூக்குதலையும் செய்கிறார். உடல் வடிவமைப்பை சரியான விகிதத்தில் ட்ரிம் செய்வதற்காக, கிக் பாக்ஸிங்கும் செய்து வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fitness Secrets of Bollywood Actors

Most of the popular Bollywood Actors like Salman Khan, Hrithik Roshan, Akshay Kumar, Shah Rukh Khan, John Abraham, Arjun Rampal and Aamir Khan take good care of their bodies. And probably that is the reason why they look much younger to than their age
Desktop Bottom Promotion