For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முத்தத்தில் இத்தனை விஷயங்களா? கொஞ்சம் படிச்சு தான் பாருங்களேன்...

By Super
|

முத்தம் என்றாலே அன்பின் பரிமாற்றம் என்பது தான் அர்த்தம். துணைக்கு கொடுக்கும் முத்தத்தில் சிறிது காமமும் கலந்திருக்கும். அது நாம் பெரும் முதல் முத்தமானாலும் சரி அல்லது வாழ்க்கைத்துணை கொடுத்த முத்தமாக இருந்தாலும் சரி, அது ஒரு வகை உணர்வை அளிக்கும். இந்த உணர்வு, உதடு பதிந்த சில மணி நேரத்திற்கு பின்னாலும் நிலைத்து நிற்கும். ஹலோ பாஸ் என்ன கனவுலகத்துக்கு போய்டீங்களா?

நீங்க 'அதுல' ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க...

அவ்வளவு தானா என்றால் அது தான் இல்லை. முத்தம் உறவை வளர்ப்பதையும், அன்பை வெளிக்காட்டுவதையும் தவிர பலவற்றிலும் நமக்கு உதவி புரிகிறது. முத்தத்தில் பல வகையான உடல் நலத்திற்கான நன்மைகளும் அடங்கியுள்ளன. அதிலும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, ஆயுளை கூட்டவும் உதவும். அனைவரும் நினைப்பதை விட முத்தம், ஆனந்தத்தையும் மீறி பல வகையான நன்மைகளையும் அளிக்கின்றன. இப்போது உயிருக்கு மேலானவரிடம் கிடைக்கும் முத்தத்தினால் கிடைக்கப் போகும் சில முக்கிய நன்மைகளைப் பார்க்கலாம். என்ன ரெடியா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமைதியும் ஓய்வும்

அமைதியும் ஓய்வும்

முத்தம் கொடுப்பதால், உடலில் அமைதியான மன நிலையை உண்டாக்கும் ஆக்சிடோசின் (oxytocin) என்னும் இரசாயனம் அதிக அளவில் சுரக்கும். மேலும் எண்டோர்பின் (endorphins) மற்றும் டோபமைனின் (Dopamine) அளவை அதிகரிக்கச் செய்து, காதல் உணர்வையும் தூண்டும்.

வாழ்நாள் முத்தம்

வாழ்நாள் முத்தம்

முத்தம் என்பது நம் அன்றாட செயல்களில் ஒன்றாகும். சராசரியாக ஒருவர் தன் வாழ்நாளில் முத்தமிட 20,160 நிமிடங்கள் செலவு செய்கின்றனர். அடேங்கப்பா!!

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

முத்தம் என்பது நம் உடம்பிற்குள் நுண்ணுயிர்கள் அல்லது கிருமிகளை நுழையச் செய்வதால் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் என்பது பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கண்டுபிடிக்கப்பட்ட விஷயமாகும். அதனால் முத்தம் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவி புரிகிறது.

சண்டைகளும் முத்தங்களும்

சண்டைகளும் முத்தங்களும்

துணையுடன் உணர்ச்சி பூர்வமான சண்டையில் ஈடுபடும் போது அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, ஒரு நீண்ட உணர்ச்சி மிகுந்த முத்தத்தை இருவரும் பரிமாறுவதை ஆங்கில படங்களில் கண்டிப்பாக பார்த்திருப்போம். நிஜ வாழ்க்கையிலும் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஆண்கள் பயன்படுத்தும் ஆயுதம் முத்தமே.

முன்னாலும் பின்னாலும்

முன்னாலும் பின்னாலும்

பொதுவாக உடலுறவு கொண்ட பிறகு, பெண்கள் நட்பான அணைப்பில் இருக்க விரும்புவார்கள். அதனால் உடலுறவுக்கு பின் பெண்கள் தான் அதிகமாக முத்தம் கொடுப்பார்கள். ஆனால் உடல் உறவிற்கு முன் அதிகமாக முத்தம் கொடுப்பது ஆண்களே.

ஆண்களும் முத்தமிடுதலும்

ஆண்களும் முத்தமிடுதலும்

ஆண்கள் முத்தத்தை அதிகமாக பயன்படுத்துவது பாலுணர்வை தூண்டுவதற்காகவே. அதற்காக அவர்கள் தரும் முத்தம் அனைத்தும் பாலுணர்வு சம்பந்தப்பட்டதே என்று எண்ணி விட வேண்டாம்.

பெண்களும் முத்தமிடுதலும்

பெண்களும் முத்தமிடுதலும்

முத்தம் என்பது துணையை பற்றி பலவற்றையும் தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டி விடும். சிறிது காலம் உறவான ஒரு காதலனின் திறமையை எடை போட, அவன் எப்படி மற்றும் எத்தனை முறை முத்தம் கொடுக்கிறான் என்பதை வைத்து கணக்கிடுவர். மேலும் இந்த உறவு வளர்ந்து நீண்ட காலம் நிலைத்து நிற்குமா என்பதையும் கணக்கிடுவர்.

எச்சில் பரிமாற்றம்

எச்சில் பரிமாற்றம்

முத்தம் என்பது எச்சிலின் பரிமாற்றம் என்பதையும் நாம் மறுக்க முடியாது. ஆனால் சுவாச வாடையை தீர்மானிக்கும் எச்சிலில் உள்ள உப்பு, கனிமங்கள் மற்றும் இதர பொருட்களும் கூட, ஒரு பெண்ணின் பாலுணர்வை தூண்டும்.

முகத்திற்கு பயிற்சி

முகத்திற்கு பயிற்சி

உடல், கைகள், கால்கள் ஏன் பின்னழகைக் கூட கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள பல உடற்பயிற்சிகள் உள்ளன. ஆனால் முகத்திற்கு சிறந்த பயிற்சியாக கருதப்படுவது முத்தமிடுவது மட்டும் தான். இது முகத் தசைகளை உறுதியுடன் வைத்திருக்கும். முத்தமிடும் போது முகத்தில் 30 வகையான தசைகள் செயல்படும். இதனால் கன்னங்களும் உறுதியுடன் இருக்கும்.

பிணைப்பை உண்டாக்கும்

பிணைப்பை உண்டாக்கும்

முத்தம் என்பது உணர்ச்சி பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தும். அதனால் தான் சிறிது நாள் உறவில் மட்டும் ஈடுபட விரும்பும் ஆண்கள் உடல் உறவிற்கு பின் பெண்களுடன் அணைப்பில் இருக்க விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அணைப்பில் இருக்கும் தருணம் முத்தம் கொடுக்க தூண்டும். இதனால் நெருக்கம் இன்னும் அதிகரிக்கும். எனவே தான் பல ஆண்கள் இதனை தவிர்க்க நினைக்கின்றனர்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

ஒருவரின் வாயில் உள்ள சுவையும். வாசனையும். அவரின் துணை மற்றும் அவரின் உடல்நல பிரச்சனைகளை தீர்மானிக்கும். பெண்கள் ஆரோக்கியமான ஆண்களை எதிர்பார்ப்பது தங்களுக்கும் தங்களின் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதால் தான். ஆனால் ஆண்கள் ஆரோக்கியமான பெண்களை எதிர்பார்ப்பது, ஒரு நல்ல தாயாக தன் குழந்தைகளை நல்ல படியாக வளர்க்க வேண்டும் என்பதால் தான்.

கலோரிகளை எரிக்கும்

கலோரிகளை எரிக்கும்

தினமும் ஈடுபட்டிருக்கும் பல உடற்பயிற்சிகளை போலவே முத்தமும் கலோரிகளை எரிக்கும். வேகமான ஒரு காதல் முத்தம் 2-3 கலோரிகளை எரிக்கின்றன. ஆழமான நீண்ட முத்தம் 5 அல்லது அதற்கு மேலான கலோரிகளை எரிக்கின்றன. அதனால் முத்தத்தின் நேரமும் ஈடுபாடும் அதிகரித்தால், அதற்கேற்ற அளவு கலோரிகளும் எரியும்.

உறவு வளரவோ, முறியவோ தீர்மானிக்கும் கருவி

உறவு வளரவோ, முறியவோ தீர்மானிக்கும் கருவி

முத்தம் என்பது நம் அலைவரிசையில் ஒத்துப் போகும் நம் வாழ்க்கை துணையை கண்டு பிடிக்க பயன்படும் கருவியாகும். அதனால் தான் முதல் முத்தம் உங்கள் உறவை வளர்க்கவோ முறிக்கவோ துணை புரிகிறது. இரண்டு பேருக்கு ஒத்து போகுமா எல்லையா என்பதை உயிரியலால் தீர்மானிக்க முடியும்.

ஹார்மோனின் பரிமாற்றம்

ஹார்மோனின் பரிமாற்றம்

வாயுடன் வாய் சேர்த்து முத்தம் தருவதால் ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு ஹார்மோன் பரிமாற்றம் நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? வாயில் உள்ள நீர்பொருள், டெஸ்டோஸ்டிரோன் (testosterone) போன்ற ஹார்மோன்களை முத்தமிடும் போது ஊடுருவச் செய்யும். இவ்வாறு ஊடுருவும் ஹார்மோன் பெண்களுக்கு பாலுணர்வை தூண்டுவதால், பெண்கள் உடல் உறவில் அதிக நாட்டம் காட்டுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts about Kissing

Whether it's your first kiss with someone new or your lifetime partner, kissing usually leaves an impression -- one that lingers long after your lips have locked. Kissing often plays an important role in relationship.
Desktop Bottom Promotion