Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது!
வீட்டில் பணம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப வாஸ்துப்படி குதிரை லாடத்தை இந்த இடத்துல இப்படி வையுங்க...
Horseshoe Vastu Tips In Tamil: ஒவ்வொருவருமே தாங்கள் குடியிருக்கும் வீடு அதிர்ஷ்டமானதாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். அதற்காக அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் பொருட்களை வீட்டில் வாங்கி வைப்போம். வீட்டில் அதிர்ஷ்டத்தை ஈர்க்க பல்வேறு பொருட்கள் உள்ளன.
அதில் ஒன்று தான் குதிரை லாடம். இந்த குதிரை லாடத்தை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவது மட்டுமல்லாமல், வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பல வழிகளை உருவாக்கும்.

குதிரை லாடமானது அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதைத் தவிர கண் திருஷ்டியை நீக்குகிறது. ஆனால் அதற்கு குதிரை லாடத்தை வீட்டில் சரியான திசையில், சரியான இடத்தில் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் தான், முழு பலன் கிடைக்கும். இப்போது வாஸ்துப்படி குதிரை லாடத்தை எப்படி வைக்க வேண்டும் மற்றும் இதை வைத்திருப்பதால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.
குதிரை லாடத்தின் முக்கியத்துவம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, குதிரை லாடமானது U வடிவில் இருக்கும். இந்த குதிரை லாடத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று U வடிவத்திலும், மற்றொன்று தலைகீழ் U வடிவத்திலும் இருக்கும். இந்த குதிரை லாடத்தை ஒருவரது வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
குதிரை லாடத்தின் நன்மைகள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, குதிரை லாடத்தை வீட்டின் பிரதான வாசலில் வைத்தால், வீட்டினுள் எதிர்மறை மற்றும் கெட்ட சக்திகள் நுழைவது தடுக்கப்படும். இதனால் வீட்டினுள் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகமாக இருக்கும். குதிரை லாடமானது ஒருவரது வீட்டில் இருந்தால், அது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும். அதோடு வீட்டில் பண பிரச்சனை மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தால், அதிலிருந்து விடுபடலாம். முக்கியமாக குதிரை லாடம் வியாபாரம் செய்பவர்களின் நிதி நிலைமையை வலுப்படுத்துவதாக கூறப்படுகிறது.
குதிரை லாடத்தை எங்கு மற்றும் எப்படி வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, குதிரை லாடத்தின் U வடிவத்தை வீடு மற்றும் கடைகளில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் அந்த லாடம் வீட்டின் பிரதான கதவின் வடக்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும். குதிரை லாடத்தின் தலைகீழ் U வடிவத்தை வைப்பதாக இருந்தால், அதில் ஒரு கண்ணாடியையும் வைத்து தொங்கவிட வேண்டும்.
கருப்பு குதிரை லாட பரிகாரங்கள்
* வீட்டின் நிதி நிலை சிறப்பாக இல்லாவிட்டால், கருப்பு குதிரையின் வலது காலின் லாடத்தை வீட்டின் பிரதான வாசலில் U வடிவில் கட்ட வேண்டும். இப்படி வைத்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கும்.
* வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்கிறீர்களா? அப்படியானால் கடையின் கதவில் குதிரை லாடத்தை வையுங்கள். இப்படி வைத்தால், வியாபாரத்தில் இருமடங்கு லாபத்தையும், முன்னேற்றத்தையும் காணலாம்.
* ஏழரை சனி அல்லது சனியின் தாக்கத்தைக் கொண்டவர்கள், கருப்பு குதிரை லாடத்தால் செய்யப்பட்ட மோதிரத்தை வலது கையின் விரலில் அணிவது நல்லது. இதனால் சனியின் தாக்கம் குறையும்.
* வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்க வேண்டுமானால், கருப்பு குதிரை லாடத்தை வைத்திருப்பது நல்லது. இப்படி வைத்திருப்பதன் மூலும், வீட்டில் பண பற்றாக்குறையே ஏற்படாது. அதுவும் இந்த குதிரை லாடத்தை அரிசி வைக்கும் அறையில் வைத்தால், அந்த வீட்டில் உணவுத் தட்டுப்பாடே ஏற்படாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications