Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
வாஸ்து படி ஒரு கிண்ணத்தில் உப்பை வீட்டின் இந்த இடத்தில் வைப்பது உங்களுக்கு அளவில்லா யோகத்தை கொடுக்குமாம்...!
Vastu Tips: 'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள், ஏனெனில் ஒரு உணவின் சுவையை நிர்ணயிப்பது உப்புதான். உப்பு உணவிற்கு மட்டுமின்றி நம் வாழ்க்கையிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
நம் அன்றாட வாழ்வில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ஆன்மீக அர்த்தமும், ஆற்றலும் உண்டு, அதில் உப்பும் அடங்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒருவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொண்டுவரும் குறிப்பிடத்தக்க சக்தி உப்புக்கு உண்டு.

உப்பை சரியாக பயன்படுத்துவதன் மூலம் வீட்டின் சூழல் நல்லிணக்கத்திற்கு கொண்டு வரப்படுகிறது மற்றும் உப்பைப் பயன்படுத்தி வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றலை விரட்டலாம், மேலும் உப்பு மூலம் வீட்டின் வாஸ்து தோஷம் நீக்கப்படுகிறது. இந்த பதிவில் வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றலை உப்பு எப்படி விரட்டுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
எதிர்மறை எண்ணங்களை நீக்கும்
நீங்கள் எதிர்மறையான எண்ணங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்தால், உப்பைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது உங்கள் வாழ்க்கையில் பல அதிசயங்களைச் செய்யும். நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரு சிட்டிகை இமயமலை உப்பு சேர்த்து குளிக்கவும், ஆனால் உங்கள் முகத்திலோ அல்லது தலையிலோ உப்பு நீர் தெறிக்காமல் கவனமாக இருங்கள்.
உங்கள் எதிர்மறை எண்ணங்கள் விரைவில் நேர்மறை எண்ணங்களாக மாறத் தொடங்கும், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.
கண் திருஷ்டியிலிருந்து பாதுகாக்கிறது
உறவுகள் மற்றும் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கண் திருஷ்டியிலிருந்து ஒருவரை பாதுகாக்க உப்பு உதவுகிறது. உப்பு நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக இந்தியாவில், பெண்கள் தங்கள் குழந்தைக்கு திருஷ்டி கழிக்க கையில் சிறு உப்பை எடுத்து குழந்தைகளுக்கு சுற்றிப் போடுவதை நாம் அடிக்கடி பார்க்கலாம், மேலும் இந்த முறை உண்மையில் பயனளிக்கக் கூடிய ஒன்றாகும். இது ஒருவரை எதிர்மறை மற்றும் கண் திருஷ்டியிலிருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.
உறவுகளை வலுப்படுத்துகிறது
உங்கள் பிரதான நுழைவாயிலின் இடது மற்றும் வலது பக்கத்தில் ஏதாவது இரு பாத்திரத்தில் இமாலயன் உப்பை வைக்கவும். நீங்கள் அதை சாதாரண உப்பாக வைக்கலாம் அல்லது சரியான வண்ணம் தீட்டலாம். இது உங்கள் வாழ்க்கையில் பல அதிசயங்களை செய்யக்கூடும்.
இது உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதுடன் உங்கள் குடும்பத்தினரிடையே உறவு மற்றும் அன்பை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் விருந்தினர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்துகிறது.
ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
உப்பு உணவின் சுவையை மேம்படுத்துவது மட்டுமின்றி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நலப் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அவர்கள் உறங்கும் போது அருகில் ஒரு கிண்ணத்தில் போட்டு அருகில் வைக்கவும். இது உங்கள் வீட்டிலுள்ள கெட்ட ஆற்றலை விரட்டி சாதகமான காலகட்டத்தை இது கொண்டு வரும்.
வாஸ்து தோஷத்தை நீக்கும்
உப்பு உங்கள் வீட்டின் எதிர்மறை தன்மையை குறைக்கக்கூடும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் வீட்டின் அறைகள் அல்லது கழிப்பறைகள் வடக்கு அல்லது வடகிழக்கில் அமைந்திருந்தால் அது ஒருபோதும் நிலையானதாக இருக்காது, இதனால் நீங்கள் ஒருபோதும் செழித்து வளர முடியாது.
இதன் விளைவாக, உப்பை ஒரு பாத்திரத்தில் அல்லது கிண்ணத்தில் வைத்து சில திசைகளில் உப்பை வைப்பது எதிர்மறை ஆற்றலை சமன் செய்து நன்மை பயக்கும். இது எதிர்மறை ஆற்றல் வடிகட்டியாக செயல்படுகிறது மற்றும் அனைத்து எதிர்மறைகளையும் அது ஈர்த்துக்கொள்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications