Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க நாய்க்கு உடம்பு சரியில்லையா? இந்த உணவுகளைக் கொடுங்க...
நாய்க்கு வயிறு சரியில்லாத போது, புல் சாப்பிட விரும்பும். ஏனெனில் நல்ல பசுமையான பச்சை புல்லானது, நாய்க்கு ஏற்படும் வயிற்றுப் பிரச்சனையை விரைவிலேயே குணமாக்கும். அதற்காக அதற்கு புற்களை மட்டும் கொடுக்கக்கூடாது. அதற்கு உடல்நிலை சரியில்லாவிட்டால், உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வதோடு, ஒருசில உணவுகளையும் கொடுக்க வேண்டும்.
இதனால் அதற்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதன் உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனை உடனே நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை உடல்நிலை சரியில்லாத நாய்க்கு கொடுக்க வேண்டிய சில உணவுகளை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளது. அது என்னவென்று படித்து, உடம்பு சரியில்லாத நாயின் உணவில் சேர்த்து, நாயின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

சாதம்
செல்ல நாயானது உடல்நிலை சரியில்லாத போது, சாதத்தைக் கொடுக்க வேண்டும். அதிலும் சாதத்தில் உப்பை கொஞ்சமாக சேர்த்து, பால் ஊற்றி கொடுக்க வேண்டும். இதனால் அதற்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, விரைவில் குணமாகும்.

சிக்கன் வேக வைத்த நீர்
நாய்க்கு உடம்பு சரியில்லாவிட்டால், அதற்கு சிக்கன் வேக வைத்த தண்ணீரைக் கொடுக்க வேண்டும். அதுவும் ஒரு நாளைக்கு இரண்மு முறை கொடுத்து வந்தால், அதற்கு வேண்டிய எனர்ஜி கிடைத்து, விரைவில் சரியாகிவிடும்.

தண்ணீர்
உலகில் உள்ள அனைத்து உயிரினத்திற்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. எனவே உங்கள் செல்ல நாய் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு நிறைய தண்ணீரைக் குடிக்க கொடுக்க வேண்டும்.

வேக வைத்த காய்கறிகள்
நன்கு வேக வைத்த காய்கறிகளாக பட்டாணி, கேரட் போன்றவற்றை நன்கு மசித்து, நோய்வாய்பட்டிருக்கும் போது நாய்க்கு கொடுத்தால், அது விரும்பி சாப்பிடுவதோடு, உடல்நிலையும் விரைவில் சரியாகும்.

பிரட்
பால் மற்றும் பிரட் நாய்க்கு ஏற்ற சிறப்பான உணவுப் பொருளாகும். அதுமட்டுமின்றி, இது நாயின் பசியை தணிப்பதோடு, விரைவில் செரிமானமாகக்கூடியதும் கூட.

பால்
தினமும் 2 கப் பாலை, காலை வேளையில் குடிக்க கொடுக்க வேண்டும். இதனால் அதன் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நாய்க்கு தேவையான எனர்ஜி கிடைக்கும்.

மசித்த உருளைக்கிழங்கு
நன்கு மசித்த உருளைக்கிழங்கை சாதத்துடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். இதுவும் நோய்வாய்பட்டிருக்கும் நாயின் உடலை வலுவாக்குவதற்கு உதவும் உணவாகும்.

மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியை உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து, அதில் லேசாக மிளகு தூளை சேர்த்து உடம்பு சரியில்லாத நாய்க்கு சாப்பிடக் கொடுக்கலாம்.

பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகளில் உடலுக்கு வேண்டிய சக்திகள் மற்றும் புரோட்டீன்கள் அதிகம் நிறைந்துள்ளதால், அதனை நாயின் உணவில் சேர்த்து வந்தால், அதன் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications