வினிகர் ஏன் உங்கள் சமையலறையில் அவசியம் இருக்க வேண்டும் தெரியுமா? வினிகரின் அசாதாரண நன்மைகள்...!

சில பொருட்கள்தான் சமையலறையில் உணவில் சேர்க்கப்படுவதையும் தாண்டி வேறு பல நன்மைகளையும் கொண்டிருக்கும். அப்படி பல்துறை நன்மைகள் கொண்ட ஒரு பொருள்தான் வினிகர்.

சில பொருட்கள்தான் சமையலறையில் உணவில் சேர்க்கப்படுவதையும் தாண்டி வேறு பல நன்மைகளையும் கொண்டிருக்கும். அப்படி பல்துறை நன்மைகள் கொண்ட ஒரு பொருள்தான் வினிகர். நீங்கள் உணவுகளில் சுவையை சேர்க்க விரும்பினாலும் அல்லது சமையலறை அடுப்பை சுத்தம் செய்ய அல்லது சமையலறையில் உள்ள உபகரணங்களை சுத்தம் செய்ய அல்லது பாத்திரங்களில் பிடிவாதமான கறையை அகற்றவும், ஒரு ஸ்பூன் வெள்ளை வினிகரை பயன்படுத்தலாம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அவை அனைத்தும் உண்மைதான்.

Why Every Kitchen Should Have Vinegar in Tamil

காலங்காலமாக, வெள்ளை வினிகர் சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இந்த அமிலக் கலவையில் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் வேறுசில நன்மைகளும் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 உடனடி ஊறுகாய்

உடனடி ஊறுகாய்

நீங்கள் வீட்டில் தயாரிக்கும் ஊறுகாய்க்கும் ஹோட்டல்களில் பரிமாறப்படும் ஊறுகாய்க்கும் வித்தியாசம் இருப்பதைக் காணாலாம். ஏனெனில் அது உடனடி வினிகர் ஊறுகாயாக இருக்கும். இதனை உடனடியாக தயாரித்து விடலாம். மிளகாய், பூண்டு, இஞ்சி மற்றும் மாங்காய் போன்ற காய்கறிகளை நறுக்கி வெள்ளை வினிகர் பாட்டிலில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டால் உடனடி ஊறுகாய் தயார்.

வீட்டிலேயே தயாரிக்கும் சாஸ்

வீட்டிலேயே தயாரிக்கும் சாஸ்

நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கும் சாஸ்களுக்கு வினிகர் கூடுதல் சுவையை சேர்க்கும். இது சாஸ்க்கு புளிப்பான சுவையைக் கொடுக்கும். இது பொதுவாக வெள்ளை சாஸ்கள் தயாரிக்கப் பயன்படுகிறது, இதில் லேசான வெள்ளை ஒயின் மற்றும் வெள்ளை வினிகர் சேர்க்கப்படுவது உணவுகளுக்கு ஒரு மென்மையான சுவையை சேர்க்கிறது.

பாத்திரங்களில் இருந்து பழைய க்ரீஸ் கரையை நீக்கும்

பாத்திரங்களில் இருந்து பழைய க்ரீஸ் கரையை நீக்கும்

பாத்திரத்தில் இருக்கும் பிடிவாதமான தீய்ந்த கறைகளை சுத்தம் செய்வது மிகவும் கடினமான ஒரு வேலையாகும், ஆனால் வெள்ளை வினிகரைப் பயன்படுத்தி அவற்றை எளிதில் சுத்தம் செய்யலாம். வெள்ளை வினிகர், சமையல் சோடா, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றின் கலவை தீய்ந்த கறைகளை எளிதில் நீக்கும். அந்த கலவையை பாத்திரத்தின் மேல் தேய்த்து விட்டு சிறிது நேரம் ஊறவிடுங்கள். சிறிது நேரம் கழித்து, வழக்கமான சோப்பு மூலம் அவற்றைக் கழுவி, மாற்றத்தை உடனடியாகக் காணலாம்.

சமையலறை அடுக்குகள் மற்றும் சமையல் அறைகளை சுத்தம் செய்யவும்

சமையலறை அடுக்குகள் மற்றும் சமையல் அறைகளை சுத்தம் செய்யவும்

வினிகர் உடனடியாக உங்கள் சமையலறையை பிரகாசமாக்கும், ஒரு கிண்ணத்தில் வெந்நீரை எடுத்து அதில் வெள்ளை வினிகர், திரவ சோப்பு, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, இதை தெளித்து சிறிது நேரம் ஊற விடவும், பிறகு அதனை எளிதில் துடைத்து உங்கள் சமையலறைக்கு புது தோற்றத்தைக் கொடுக்கலாம்.

வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்யலாம்

வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்யலாம்

ஃப்ரிட்ஜ் முதல் அடுப்பு வரை சுத்தம் செய்வதில் வெள்ளை வினிகர் பன்முகத்தன்மை வாய்ந்தது மற்றும் இதன்மூலம் எந்த பொருளையும் விரைவாகவும், எளிதாகவும் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான நீரில் வெள்ளை வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, காபி தயாரிக்கும் பீக்கர்களில் ஊற்றவும் அல்லது ஒரு ஸ்பாஞ்சு மூலம் குளிர்சாதன பெட்டி அல்லது மைக்ரோவேவை துடைக்கவும். பின்னர் அவற்றை உலர அனுமதிக்கவும், உலர்ந்த துணியால் மீண்டும் துடைக்கவும், இது நீண்ட காலமாக இருக்கும் கறைகளை விரைவில் நீக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, March 14, 2023, 19:20 [IST]
Desktop Bottom Promotion